இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 41:
 
ஸ்டூவர்ட் அரசர்கள் காலத்தில் உரிமைக்காக போராடிய பாராளுமன்றம், எலிசபெத் காலத்தில் கை தூக்கும் மன்றமாகவே இருந்து வந்தது. பாராளுமன்றமானது முதலாம் எலிசபெத்தின் 45 வருட ஆட்சியில் வெறும் 13 தடவையே கூடியது. மேலும், எலிசெபத்த தமது விருப்பப்படியே அரசாண்டார். பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட 91 மசோதாக்களில் 48 ஐ தனது மறுப்பு அதிகாரத்தை பயன்படுத்தி இரத்து செய்தார். பேச்சு உரிமை கோரிய பீட்டர் வென்ட் ஒர்த் என்ற அங்கத்தினர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
 
== ஆட்சியின் இறுதிக்காலம் ==
எலிசபெத்தின் ஆட்சியின் இறுதிக்காலம் மிகவும் சிரமமான காலமாக இருந்தது. நாட்டில் பயிர்களின் உற்பத்தி வீழ்ச்சியடைந்தது. வேலையின்மை மற்றும் பணவீக்கம் ஆகியவற்றால் நாசம் ஏற்பட்டது. அயர்லாந்தில் உணவு பற்றாக்குறையும் மற்றும் கலகக்காரர்களால் கிளர்ச்சிகளும் நிரம்பியிருந்தன. எலிசபெத்தின் அதிகாரம் குறித்து பல சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. அவளுடைய விருப்பமிகு நபர்களில் ஒருவரான எசெக்சின் எர்ல் இராபர்ட் டீவாரக்ஸ், எர்சின் ஏர்ல் குறித்தும் சர்ச்சைகள் எழுந்தன. அவரை அக் ஓ நீல் தலைமையிலான குழுவுடன் கலகத்தை அடக்கும் பொருட்டு அயர்லாந்துக்கு அனுப்பியிருந்தார். மாறாக, எசெக்ஸ் எர்ல் இங்கிலாந்திற்குத் திரும்பி தானே சுயமாக ஒரு கிளர்ச்சியைத் தொடங்க முற்பட்டார். 1601 ஆம் ஆண்டில் அவர் துரோகமிழைத்த குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்டார்.
 
தன்னுடைய சக்தி மற்றும் வலிமை குறைவடைவதை உணர்ந்திருந்தாலும், எலிசபெத் தனது மக்கள் மீது பக்தியையும், அவர்களுக்காக பணிபுரிவதையும் தொடர்ந்தார். 1601 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் தனது சிறப்பு மிகு உரையைப் பதிவு செய்தார். இந்த சிறப்பான உரையில் எலிசபெத் தனது நீண்ட ஆட்சிக்காலத்தை திரும்பிப் பார்க்கும் விதத்தில் கருத்துக்களை முன்வைத்திருந்தார். அந்த உரையில் இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் ”நான் ஒருபோதும் பேராசை கொண்டதில்லை. என் இதயம் ஒருபோதும் உலகாயதப் பொருட்களின் மீது நாட்டம் கொண்டதில்லை. என்னுடைய நாட்டு மக்களின் நன்மையை மட்டுமே நான் கருதினே்” எனத் தெரிவித்திருந்தார். <ref>{{cite web | url=https://www.biography.com/people/queen-elizabeth-i-9286133 | title=Queen Elizabeth I | publisher=Biography.com | date=Last updated April 27, 2017 | accessdate=5 அக்டோபர் 2017 | author=Biography Editors}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இங்கிலாந்தின்_முதலாம்_எலிசபெத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது