மகாபோதிக் கோயில், புத்தகயை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பக்கம் மகாபோதி கோயில், புத்த காயா என்பதை மகாபோதி கோயில், புத்தகயா எ...
சிNo edit summary
வரிசை 11:
| Link =
}}
'''மகாபோதி கோயில், புத்த காயாகயா''', [[கௌதம புத்தர்]] ஞானம் பெற்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு [[புத்த கோயில்]] ஆகும். [[புத்த காயா]], இந்தியாவிலுள்ள [[பீகார்]] மாநிலத்தின் [[கயா மாவட்டம்|கயா மாவட்டத்தில்]], மாநிலத் தலைநகரமான [[பாட்னா]]விலிருந்து 96 கிமீ (60 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. கோயிலுக்கு அருகே அதன் மேற்குப் புறத்தில், புனித [[போதி மரம்]] உள்ளது. [[பாளி]] நூல்கள் இவ்விடத்தை போதி மண்டா என்றும், அங்குள்ள விகாரையை போதிமண்டா விகாரை என்றும் குறிப்பிடுகின்றன. இது உலகெங்கிலும் உள்ள புத்த சமயத்தவர்களுக்கான புனித யாத்திரைக்கான இடமாகவும் விளங்குகிறது. 2002 ஆம் ஆண்டில் இது [[யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்]] எனவும் அறிவிக்கப்பட்டது.
[[படிமம்:Bodhgaya15.JPG|thumb|போதிமரம்]]
== மகாபோதி கோயில் குறித்த பௌத்த கதைகள் ==
வரிசை 32:
== புத்த சமயத்தின் வீழ்ச்சி ==
[[படிமம்:Mahabodhi-1780s.jpg|220px|left|thumb|1780 களில் மகாபோதி கோயிலின் தோற்றம்]]
[[ஹூணர்கள்]], [[முகம்மது பின் துக்ளக்]] நடத்தியது போன்ற முந்திய இஸ்லாமிய ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றைத் தொடர்ந்து புத்த சமயத்தை ஆதரித்து வந்த அரச மரபுகளின் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து சமயமும் இறங்குமுக நிலையை எய்தியது. எனினும் [[பாலப் பேரரசு|பாலப் பேரரசின்]] கீழ் இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளில் புத்த சமய மறுமலர்ச்சி ஏற்பட்டது. இப் பேரரசின் கீழ், கி.பி 8 ஆம், 12 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் [[மஹாயான பௌத்தம்]] சிறப்புற்று விளங்கியது.

எனினும், பௌத்த சமய [[பாலப் பேரரசு]] இந்துக்களின் [[சென் பேரரசு|சேன மரபினரால்]] தோற்கடிப்பட்டதைத் தொடர்ந்து, புத்த சமயத்தின் நிலை மீண்டும் இறங்கு முகமாகி, இந்தியாவில் ஏறத்தாள அழிந்து விட்டது. 12 ஆம் நூற்றாண்டில், புத்த கயா [[முஸ்லிம்]] படைகளினால் ஆக்கிரமிக்கப்பட்டது. இக் காலத்தில் மகாபோதி கோயில் பழுதடைந்து, கைவிடப்பட்டது. 16 ஆம் நூற்றாண்டில் புத்த காயாவுக்கு அருகில், [[சைவ சமயம்|சைவ சமயத்தைச்]] சேர்ந்த [[சங்கராச்சாரியார் மடம்]] நிறுவப்பட்டது. தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளில் இப் பகுதிகளின் முதன்மையான நில உரிமையாளராக ஆன இம் மடத்தின் தலைவர் மகாபோதி கோயில் நிலத்துக்கும் உரிமை கோரினார்.
 
== திருத்த வேலைகள் ==
வரி 42 ⟶ 44:
 
மகாபோதி கோயில் அதன் நாற்புறமும் 2 மீட்டர்கள் உயரம் கொண்ட கல்லாலான தடுப்பு அமைப்புக்கள் உள்ளன. இத் தடுப்புக்கள் இரண்டு [[கட்டிடப் பொருள்]] பயன்பாடு, பாணி என்பவை தொடர்பில் இரண்டு வகைகளைச் சேர்ந்தவையாகக் காணப்படுகின்றன. [[மணற்கல்]]லாலான பழைய அமைப்பு கி.மு 150 ஆம் ஆண்டளவைச் சேர்ந்தது எனக் கருதப்படுகிறது. மினுக்கப்படாத [[கருங்கல்|கருங்கற்களால்]] கட்டப்பட்ட அடுத்த வகை, கி.பி 300 – 600 வரையான குப்தர் காலத்தைச் சேர்ந்தது. இத் தடுப்பு அமைப்புக்களில், இந்துக் கடவுளரான இரு புறமும் யானைகள் பூசை செய்யும் கஜலக்குமி, குதிரைகள் பூட்டிய தேரில் வரும் சூரியன் ஆகியோரின் சிற்பங்கள் காணப்படுகின்றன. பிந்திய அமைப்பு வகையில், [[தூபி]]களின் உருவங்கள், [[கருடன்]], [[தாமரை]] மலர்கள் என்பவை செதுக்கப்பட்டுள்ளன.
 
==இதனையும் காண்க==
* [[பௌத்த யாத்திரைத் தலங்கள்]]
 
== வெளிப்புற இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/மகாபோதிக்_கோயில்,_புத்தகயை" இலிருந்து மீள்விக்கப்பட்டது