"காத்மாண்டு நகரச் சதுக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
 
== வரலாறு ==
கி மு மூன்றாம் நூற்றாண்டில் [[லிச்சாவி]] மன்னர்கள் காலத்தில், முதலில் காத்மாண்டு நகர சதுக்கம் கட்டப்பட்டது. பின்னர் வந்த [[மல்லர் வம்சம்|மல்லர் வம்சத்து]] மன்னர்களால் இச்சதுக்கத்தில் இருந்த கட்டிடங்கள் மறுசீரமைக்கப்பட்டது. புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டன. பத்தாம் நூற்றாண்டில் குணமகாதேவன் என்ற மன்னர் காத்மாண்டு நகர சதுக்கத்தை கட்டினார். பின்னர் (1484–1520) வந்த இரத்தின மல்லர், காத்மாண்டு அனுமன் நகர சதுக்கம் அமைந்த இடத்தில் அரண்மனையைக் கட்டினார். 1769 இல் [[பிரிதிவி நாராயணன் ஷா]] காத்மாண்டு சமவெளியை கைப்பற்றிக் காத்மாண்டு அனுமன் நகரவைச் சதுக்க அரண்மனையில் இருந்து ஆட்சி செய்தார். ஷா வம்சத்து அரசர்கள், தங்களது புதிய அரண்மனையை [[நாராயணன் ஹிட்டி]] என்ற நகரத்திற்கு மாற்றும் வரையில் 1896 முடிய அனுமன் நகர சதுக்க அரண்மனையில் இருந்தே காத்மாண்டு பள்ளத்தாக்கை ஆட்சி செய்தனர்.
 
நேபாளத்தின் புதிய அரசர்கள் பதவி ஏற்கும் போது, காத்மாண்டு அனுமன் நகர சதுக்கத்தில்தான் முடி சூட்டிக்கொள்கின்றனர். 1975 இல் வீரேந்திர வீர விக்கிரம ஷாவும், 2001 இல் ஞானேதிந்திர வீர விக்கிரம ஷாவும் [[காத்மாண்டு நகர சதுக்கம்|காத்மாண்டு நகர சதுக்கத்தில்]] முடிசூட்டிக் கொண்டவர்கள். காத்மாண்டு தர்பார் சதுக்கத்தைக் கட்டிய பெருமை 1069 முதல் 1083 முடிய காத்மாண்டு சமவெளியை ஆண்ட மன்னர் சங்கர் தேவனைச் சாரும். 1501 இல் மன்னர் இரத்தின மல்லர், காத்மாண்டு நகரச் சதுக்க அரண்மனையின் வடக்குப் புறத்தில் துளேஜு அம்மன் கோயிலைக் கட்டினார்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2471158" இருந்து மீள்விக்கப்பட்டது