கொமோடோ டிராகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 29:
மனிதர்களின் செயல்களால் காடுகளில் கொமோடோ டிராகனின் அளவு குறைந்து வருகிறது. மேலும் [[பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம்]](IUCN) [[அழிவாய்ப்பு இனம்]] என்ற பட்டியலில் கொமோடோ டிராகன்களைச் சேர்த்துள்ளது. இதனால் அவை இந்தோனேசிய சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும் கொமோடோ தேசிய பூங்கா நிறுவி அவற்றைப் பாதுகாக்கும் முயற்சிகளுக்கு இந்தோனேசிய அரசு உதவி செய்தது.
 
==விளக்கம்==
வயது முதிர்ந்த கொமோடோ டிராகன் வழக்கமாக சுமார் 70 கிலோ (150 பவுண்டு) எடையுள்ளதாக இருக்கிறது. ஆயினும் சிறைப்பிடிக்கப்பட்ட மாதிரிகள் பெரும்பாலும் அதிகமாக எடையைக் கொண்டிருக்கின்றன. கின்னஸ் உலக சாதனைகள் குறிப்பின்படி சராசரியாக வயதுவந்த ஆண் கொமோடோ உடும்பு 79 முதல் 91 கிலோ எடையும், 2.59 மீ (8.5 அடி) அளவும், சராசரியாக பெண் கொமோடோ உடும்பு 68 முதல் 73 கிலோ எடையும் மீ (7.5 அடி) அளவும் கொண்டிருக்கும்.
 
கொமடோ உடும்பின் வால் அதன் உடல் அளவிற்கு நீளமாக இருக்கும். அதன் ரம்பம் போன்ற 60 பற்களின் நீளம் 2.5 செமீ (1 அங்குலம்) வரை இருக்கும். ஈறு திசுக்கள் அதன் பற்களின் பெரும்பகுதியை மூடியிருப்பதால் அவை இரத்தச் சாயத்துடன் காட்சியளிக்கும். கொமோடோ உடும்பு ஆழமாகப் பிளவுபட்ட நீளமான மஞ்சள் நிற நாக்கைக் கொண்டுள்ளது. இதன் வலிமையான செதில்களால் ஆன தோல் ஒரு இயற்கையான ஒரு [[வலைக்கவசம்]] போல அமைந்துள்ளது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கொமோடோ_டிராகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது