"மேல்மரபியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,417 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*
(→‎top: *விரிவாக்கம்*)
(*விரிவாக்கம்*)
 
மேல்மரபியல் எனும் சொல் ஏற்படும் மாற்றங்களையும் குறிக்கும்: அதாவது கருக்காடிக்கூறு வரிசையில் (nucleotide sequence) எந்தவித மாற்றத்தையும் உள்ளடக்காத ஆனால் குறிப்பிட்ட மரபணுத் தொகையின் செயல்பாட்டுக்குத் தொடர்புடைய மாற்றங்கள். இது போன்ற மாற்றங்களை உண்டாக்கும் செயல்முறைகளுக்கு எடுத்துக்காட்டுகள் [[டி. என். ஏ. மெத்திலேற்றம்|டி. என். ஏ. மெத்திலேற்றமும்]] [[இசுட்டோன் மாற்றம்|ஹிஸ்டோன் மாற்றமும்]] ஆகும். இந்த இரண்டு செயல்முறைகளுமே மரபணுக்கள் எவ்வாறு வெளிப்படுத்தப்படுகின்றன என்பதை அடிப்படை டி. என். ஏ. வரிசையை மாற்றாமல் நிகழ்த்துகின்றன. மரபணு வெளிப்பாடு ஆனது டி. என். ஏ.விலுள்ள அமைதியாக்கு பகுதிகளில் (silencer) ஒட்டிக்கொள்ளும் ஒடுக்குப் புரதங்களின் (repressor protein) செயல்பாட்டினால் கட்டுப்படுத்தப்படலாம். இந்த மேல்மரபியல் மாற்றங்கள் உயிரணுப் பிளவு நிகழும் வரை அப்படியே இருக்கலாம். மேலும் ஓர் உயிரினத்தின் அடிப்படை டி. என். ஏ. வரிசையில் எந்த மாற்றமும் ஏற்படுத்தாமல் பல தலைமுறைகளுக்கும் கடத்தப்படலாம்;<ref name="pmid17522671">{{cite journal | vauthors=Bird A | title=Perceptions of epigenetics | journal=[[Nature (journal)|Nature]] | volume=447 | issue=7143 | pages=396–8 | date=May 2007 | pmid=17522671 | doi=10.1038/nature05913 | bibcode=2007Natur.447..396B }}</ref> அதாவது, மரபற்ற காரணிகள் (non-genetic factors) ஓர் உயிரினத்தின் மரபணுக்கள் எவ்வாறு மாறிச் செயல்புரிய வேண்டும் (அல்லது "தங்களை எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும்) என்பதற்குக் காரணமாக அமைகின்றன.<ref>{{cite web|url=http://www.prospect-magazine.co.uk/article_details.php?id=10140 |title=What genes remember |author=Hunter, Philip |magazine=Prospect Magazine |issue=146 |publisher=Web.archive.org |date=1 May 2008 |accessdate=26 July 2012 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20080501094940/http://www.prospect-magazine.co.uk/article_details.php?id=10140 |archivedate=1 May 2008 }}</ref>
 
[[மெய்க்கருவுயிரி]] உயிரியலில் ஏற்படும் மேல்மரபியல் மாற்றத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு [[உயிரணு வேற்றுமைப்பாடு]] (cellular differentiation) ஆகும். உயிரி வடிவாக்கத்தின்போது அனைத்தாற்றலும் (totipotent) கொண்ட [[குருத்தணு]]க்கள் முளைக்கருவின் பலஆற்றல் (pluripotent) கொண்ட உயிரணுத் தொகுதிகளாக மாறி அவை பிறகு முழுதும் வேறுபாடு கொண்ட உயிரணுக்களாக மாறுகின்றன. வேறு வகையாகக் கூற வேண்டுமெனில், ஒரு கருவுற்ற ஒற்றை முட்டை உயிரணு - கருமுட்டை/சூல்முட்டை (zygote) - தொடர்ச்சியான பிளப்பின் மூலம் உருவாக்கும் சேய் உயிரணுக்கள் ஓர் உயிரினத்தின் அனைத்து வகையான உயிரணுக்களாகவும் மாறுகின்றன, எடுத்துக்காட்டாக நரம்பணுக்கள், தசையணுக்கள், தோல்திசுஅணுக்கள், குருதிக் குழல்களின் உட்திசுஅணுக்கள் என பல்வேறு வகையான உயிரணுக்களாக மாறுகின்றன. இந்த மாற்றம் சில மரபணுக்களைச் செயல்படுத்தியும் வேறு சிலவற்றைச் செயலற்றதாக்கியும் நிகழ்த்தப்படுகிறது.<ref name="pmid17522676">{{cite journal | vauthors=Reik W | title=Stability and flexibility of epigenetic gene regulation in mammalian development | journal=Nature | volume=447 | issue=7143 | pages=425–32 | date=May 2007 | pmid=17522676 | doi=10.1038/nature05918 | bibcode=2007Natur.447..425R }}</ref>
 
==மேற்கோள்கள்==
9,210

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2490815" இருந்து மீள்விக்கப்பட்டது