சமயபுரம் மாரியம்மன் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 13:
 
==அமைவிடம்==
[[File:Samayapuram Mariyamman Temple Entrance-4.jpg|thumb|right|250px|சமயபுரம் மாரியம்மன் கோயிலின் முகப்புத் தோற்றம்]]
தற்போது, சமயபுரம் மாரியம்மன் கோயில் இருக்குமிடம் கண்ணனூர் என அழைக்கப்படுகிறது. இவ்விடம் கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலுக்கு வடக்கே செல்லாயி அம்மன் கோயிலும், [[சமயபுரம் போஜீஸ்வரர் கோயில்|போஜீஸ்வரன் கோயிலும்]]
கிழக்கே உஜ்ஜயினி மாகாளி கோயிலும், முத்தீஸ்வரன் கோயிலும் அமைந்துள்ளன.
 
==வரலாறு==
[[File:Samayapuram Mariyamman Drawing in the Temple Corridor.jpg|thumb|right|250px|சமயபுரம் மாரியம்மன் (சித்திரம்)]]
இது ஒரு சோழ மன்னர் தன் தங்கைக்கு சீதனமாக ஒரு நகரையும் கோட்டையையும் உண்டாக்கிக் கொடுத்த இடமாகும். பிற்காலத்தில், பாண்டிய மன்னர்களின் படையெடுப்பால் அந்த கோட்டையும் நகரமும் அழிந்து வேம்புக்காடாக மாறியது. இங்கு அம்மன் கோயில் உருவானது தொடர்பாக ஒரு சம்பவம் காரணமென்று நம்பப்படுகிறது. வைணவி என்ற மாரியம்மன் சிலை [[ஸ்ரீரங்கம்|ஸ்ரீரங்கத்தில்]] இருந்தது. அதன் உக்கிரம் தாங்க முடியாமல் போனதால், ஸ்ரீரங்கத்தில் இருந்த ஜீயர் சுவாமிகள், வைணவியை ஸ்ரீரங்கத்தில் இருந்து அப்புறப்படுத்த ஆணையிட்டார். அவரின் ஆணையின்படி, வைணவியின் விக்கிரகத்தை ஆட்கள் அப்புறப்படுத்துவதற்காக வடக்கு நோக்கி சென்று சற்று தூரத்தில் தற்போதுள்ள இனாம் சமயபுரம் என்னுமிடத்தில் இளைப்பாறினார்கள். பிறகு மாரியம்மனின் சிலையை எடுத்துக்கொண்டு தென்மேற்காக வந்து தற்போதுள்ள மாரியம்மன் கோயில் அமைந்துள்ள கண்ணனூர் அரண்மனை மேட்டில் வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள். அப்போது, காட்டு வழியாகச் சென்ற வழிப்போக்கர்கள், அச்சிலையைப் பார்த்து அதிசயப்பட்டு அவர்கள் அக்கம்பக்கத்தில் இருந்த கிராமத்து மக்களைக் கூட்டிவந்து அதற்கு ”கண்ணனூர் மாரியம்மன்” என்று பெயரிட்டு வழிபட்டனர். இக்காலத்தில் [[விஜயநகரப் பேரரசு|விஜயநகர மன்னர்]] தென்னாட்டின் மீது படையெடுத்து வரும்போது கண்ணனூரில் முகாமிட்டார்கள். அப்போது அரண்மனை மேட்டிலிருந்த கண்ணனூர் மாரியம்மனை வழிபட்டு, தாங்கள் தென்னாட்டில் வெற்றி பெற்றால் அம்மனுக்கு கோயில் கட்டி வழிபடுவதாக சபதம் செய்தார்கள். அதன்படியே அவர்கள் வெற்றியும் கண்டார்கள். அம்மனுக்கு கோயிலையும் கட்டினார்கள். விஜயரெங்க சொக்கநாத நாயக்கர் காலத்தில் கி.பி. 1706-ல் அம்மனுக்கு தனியாக கோயில் அமைத்தார்கள் என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட கண்ணனூர் மாரியம்மன் கோயில் இன்று, ”சமயபுரம் மாரியம்மன்” கோயிலாக மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.
 
வரி 25 ⟶ 23:
 
==திருவிழாக்கள்==
[[File:Samayapuram Mariyamman Temple Corridor-1.jpg|thumb|right|300px|கோயிலின் வாயிலில் மக்கள் கூட்டம்]]
இக்கோவிலுக்கு அம்மனை வழிபட தமிழக பக்தர்கள் மட்டுமன்றி வெளி மாநிலங்களில் உள்ளவர்களும் பிற நாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகின்றனர். செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கூட்டம் கூடுதலாக உள்ளது. சித்திரைத் தேர்த்திருவிழா, ஆடி வெள்ளி, பூச்சொரிதல் விழா போன்ற விழாக்காலங்களில் கூட்டம் அதிகமாகிறது. ஆடி மாதத்தில் எல்லா வெள்ளிக் கிழமைகளிலும் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் இருக்கும். குறிப்பாக ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
 
வரி 39 ⟶ 36:
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
==படத்தொகுப்பு==
<center>
<gallery>
[[File:Samayapuram Mariyamman Temple Entrance-4.jpg|thumb|right|250px|சமயபுரம் மாரியம்மன் கோயிலின் முகப்புத் தோற்றம்]]
[[File:Samayapuram Mariyamman Temple Corridor-1.jpg|thumb|right|300px|கோயிலின் வாயிலில் மக்கள் கூட்டம்]]
[[File:Samayapuram Mariyamman Drawing in the Temple Corridor.jpg|thumb|right|250px|சமயபுரம் மாரியம்மன் (சித்திரம்)]]
</gallery>
</center>
[[பகுப்பு:தமிழ்நாட்டிலுள்ள மாரியம்மன் கோயில்கள்]]
[[பகுப்பு:திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சமயபுரம்_மாரியம்மன்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது