மேயாத மான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 12:
== கதை ==
1990 களில் வெளிவந்த [[இதயம் (திரைப்படம்)|இதயம் திரைப்படத்தின்]] உணர்வுபூர்வமான நாயகன் முரளியின் பெயரால் இதயம் முரளி என வினோத் ([[விவேக் பிரசன்னா]]) மற்றும் கிஷோர் (அருண் பிரகாஷ்) ஆகியோரால் அழைக்கப்படும் முரளி (வைபவ் (நடிகர்)) தனது சொல்லப்படாத காதலுக்குரிய கல்லுாரித் தோழியான மதுவின் ( பிரியா பவானி சங்கர்) கல்யாண நிச்சயதார்த்தத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் காணப்படுகிறான். முரளி இதன் காரணமாகத் தற்கொலை செய்து கொள்ளக்கூடும் எனக் கருதும் நண்பர்கள் அத்தற்கொலையை தடுக்கும் விதமாக மதுவிடம் முரளியை மோசமாகத் திட்டும்படி கூறுகிறார்கள். மது இதைத் தயங்கியவறே செய்து விடுகிறார். இதன் காரணமாக தான் மிகவும் மோசமாக சீற்றமடைந்து தனது தற்கொலை முயற்சியைக் கைவிடுகிறான். முரளி மதுவை மோசமான பெண் என்று முடிவு கட்டுகிறான். இருப்பினும் அவன் மதுவைப் பற்றியும் அவளைத் தான் எவ்வாறு காதலித்தேன் என்பதைப் பற்றியும் உளறும் உளறல்கள் மதுவை இலேசாகக் கரையச்செய்து விடுகிறது. ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஓராண்டு தள்ளிப்போடப்படுகிறது.
ஓராண்டு கழிந்து, வாழ்க்கை இவ்வாறாக நகர, கிஷோர் தனது திருமணத்திற்கு வினோத் மற்றும் முரளியை அழைக்கிறான். இதற்கிடையில் வினோத் ஒரு விபத்தில் காயமுற முரளி திருமணத்தில் தனது ”மேயாத மான்” இசைக்குழு வினருடன் கலந்து கொள்கிறான். முரளி மதுவைச் சந்திக்கும் ஒரு தருணத்தில் அறை ஒதுக்கீடு தொடர்பாக இருவருக்குள்ளும் ஒரு சிறு சச்சரவு ஏற்படுகிறது. இந்த நிலையில் முரளியின் தங்கை சுடர்விழி முரளியின் நண்பன் வினோத்தைக் காதலிப்பதை முரளி அறிந்து கொள்கிறான். மது ஒரு நாள் மயங்கி விழும் போது முரளியின் நண்பன் வினோத் அவளை மருத்துவமனையில் சேர்க்கிறான். மதுவைப் பற்றி தவறான கருத்து ஏற்பட்டிருந்ததால் முரளி இதை விரும்பவில்லை. சுடர்விழிக்கு வினோத் மணமகன் தேடி வரும் போது முரளி தன் தங்கை வினோத்தைக் காதலிப்பதால் தன் தங்கையை மணமுடித்துக் கொள்ள கேட்கிறான். இவர்களின் காதலுக்கிடையில் முரளிக்கு தன் நண்பர்களின் துாண்டுதலாலேயே மது தன்னை மோசமாகத் திட்டியது தெரிய வருகிறது. முரளி - மது காதல் வெற்றி பெற்றதா? வினோத் - சுடர்விழி காதல் வெற்றி பெற்றதா? ஏற்கெனவே நிச்சயித்த திருமணம் எவ்வாறு தடுக்கப்பட்டது என்பதை மீதமுள்ள திரைக்கதை சொல்கிறது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மேயாத_மான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது