வளி மாசடைதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 25:
 
*கார்பன் மோனாக்சைடு: CO என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட இவ்வாயு நிறமற்றது மற்றும் நெடியற்றது ஆகும். நச்சுத்தன்மை கொண்ட இவ்வாயு எரிச்சலூட்டாது. இயற்கை எரிவாயு, நிலக்கரி அல்லது மர எரிபொருள்கள் எரியும் போது இவ்வாயு உற்பத்தியாகிறது. 80% மோட்டார் வாகனங்கள் எரிபொருளை அரைகுறையாக எரித்து வெளியிடும் புகையில் இவ்வாயு காற்றில் கலந்து அதை மாசுபடுத்துகிறது <ref>“Vehicles, Air Pollution, and Human Health.” Union of Concerned Scientists, www.ucsusa.org/clean-vehicles/vehicles-air-pollution-and-human-health</ref>. ஏனைய 20% கார்பன் மோனாக்சைடு சுரங்கங்கள், தொழிற்சாலைகளில் உருவாகின்றன. கொடிய நச்சுத்தன்மை வாய்ந்த இவ்வாயுவை சுவாசித்தால் தலைவலி, கண்பார்வை பாதிப்பு, பக்கவாதம், செயலின்மை போன்ற நோய்கள் தோன்றுகின்றன. இவ்வாயுவும் ஆக்சிசனைப் போலவே நுரையீரலுக்குள் உறிஞ்சப்படுகிறது. இதனால் சுவாசம் பாதிக்கப்பட்டு மரணமே கூட நிகழலாம்.
 
*ஓசோன்: நைட்ரசனின் ஆக்சைடுகள் போன்ற ஒளிவேதிப் பொருட்கள்சிதைவடைவதால் ஓசோன் உண்டாகிறது. வளிமண்டலத்தில் மனித குலத்துக்கு ஒரு நண்பனாக நின்று சூரியனது புற ஊதா கதிவீச்சில் இருந்து பாதுக்காக்கின்றது. புவியின் மேற்பரப்பில் மனித குலத்துக்கு எதிரியாகவும் செயல்படுகிறது.
 
குளிர்விப்பான்களில் பயன்படுத்தும் சி.எப்.சி எனப்படும் குளோரோபுளோரோ கார்பன்கள் வளிமண்டலத்திலுள்ள ஓசோனின் அளவை மிக வேகமாக குறைக்கின்றன. இதனால் பூமியில் தட்பவெப்பநிலை மாறுபட்டு சீர்கேடு அடைகிறது. இதனால் தலைவலி, கண் எரிச்சல் இருமல், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
*ஆவியாகும் கரிம சேர்மங்கள்: நன்கு அறியப்பட்ட எளிதில் ஆவியாகும் கரிமச் சேர்மங்களும் காற்றை மாசுபடுத்துகின்றன. மீத்தேன் அல்லது மீத்தேன் அல்லாத வாயுக்கள் இம்மாசுபாட்டிற்கு முக்கியமான காரணியாக உள்ளன. காற்றை மாசுபடுத்தும் பசுமையக வாயுக்களில் மீத்தேன் மிக முக்கியமானது ஆகும். இதர ஐதரோகார்பன்களும் காற்றை மாசுபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன, அரோமாட்டிக் ஐதரோகார்பன்கள் புற்று நோயை உருவாக்குகின்றன. பென்சோபைரீன் என்ற ஐதரோகார்பன் சிகரெட் புகையில் உள்ளது. இது நுரையீரல் புற்று நோயை உண்டாக்குகிறது. 1,3 பியூட்டா டையீன் என்ற ஐதரோகார்பன் மற்றொரு அபாயகரமான கரிமச் சேர்மமாகும்.
"https://ta.wikipedia.org/wiki/வளி_மாசடைதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது