லித்துவேனியாவின் தேசியக்கொடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
வரிசை 9:
=== வரலாற்றுரீதியான நாட்டுக்கொடி ===
லிதுவேனிய அடையாளம் கொண்ட முந்தைய கொடிகள் 15 ஆம் நூற்றாண்டில் ஜான் டிலோகோஸ் “பண்டேரியா ப்ருடினோரம்' ' என்ற ஆவணத்தில் எழுதப்பட்டுள்ளது. 1410ஆம் ஆண்டில் கிரன்வால்ட் போரில், இரண்டு தனித்துவமான கொடிகள் இருந்தன. 40 படைப்பிரிவுகளில் பெரும்பாலானவர்கள் பஹோனியா என்று குறிப்பிடப்படும் குதிரையேற்ற வீரனைக் கொண்ட ஒரு சிவப்பு பதாகையை எடுத்துச் சென்றனர். '' வைடிஸ்'' என்று அறியப்படும் இந்த கொடி, இறுதியில் லிதுவேனிய போர்க்கொடிகளாக பயன்படுத்தப்பட்டு, 2004 ஆம் ஆண்டில் நாட்டின் கொடியாக மீண்டும் பயன்படுத்தப்பட்டது. எஞ்சியிருந்த படைப்பிரிவுகள், லிதுவேனியாவின் ஆரம்ப கால குறியீடான கெடிமினாசின் துாண்களைக் காண்பிக்கும் ஒரு சிவப்பு பதாகையை வைத்திருந்தன.வைடிஸ் அல்லது பஹோனியா என்றழைக்கப்பட்ட (போகோன் லிதெவஸ்காவிலிருந்து வந்தவர்கள்) லிதுவேனியாவின் கிராண்ட் டச்சியிலிருந்து வந்த போர்ப்படைவீரர்கள் மற்றும் ஜெடிமினாசின் துாண்களைத் துளைத்தவர்கள் (லிதுவேனியாவின் உயர்மட்ட குடும்பங்களைச் சார்ந்தவர்கள்) ஆகியோராவர்.18 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை, போலந்தின் பிரிவாக இருந்து உருஷ்ய பேரரசினால் இணைக்கப்பட்டது வரை லிதுவேனியா வைடிஸின் கொடியையே பயன்படுத்தி வந்தனர்.<ref name="history">[http://www3.lrs.lt/home/w5_viewer/statiniai/seimu_istorija/w5_show-p_r=4056&p_d=49324&p_k=2.html Seimas of Lithuania - History of the National Flag]. Retrieved December 15, 2006</ref>
 
=== நவீன கொடியின் உருவாக்கம் ===
ஐரோப்பிய குடியரசுகள் தங்களது கொடிகளை மாற்றுவதற்கான முனைப்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டபோதுதான் மஞ்சள், பச்சை மற்றும் சிவப்பு நிற மூவர்ணக்கொடி உருவானது. [[பிரெஞ்சுப் புரட்சி|பிரெஞ்சுப் புரட்சிக்குப்]] பின்னரான [[பிரான்சு|பிரெஞ்சு]] நாட்டினரின் நீலம், வெள்ளை மற்றும் சிவப்பு மூவர்ணக்கொடியே லிதுவேனியாவின் மூவர்ணக்கொடிக்கான உதாரணமாக அமைந்ததெனலாம். லிதுவேனியா மைனரைக் குறிக்கும் பச்சை, வெள்ளை மற்றும் சிவப்பு நிற மூவர்ணக்கொடியே தற்போதுள்ள மஞ்சள், பச்சை மற்றும் சிவப்பு மூவர்ணக்கொடிக்கு முன்னதாக அமைந்த மூன்று நிறங்கள் எனலாம். <ref name="history"/>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/லித்துவேனியாவின்_தேசியக்கொடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது