பீனால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 42:
}}
 
'''பீனால்''' ''(Phenol)'' என்பது C6H5OH என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அரோமாட்டிக் சேர்மமான இதை பீனாலிக் அமிலம் என்ற பெயராலும் அழைக்கிறார்கள். வெண்மை நிறத்தில் படிகத் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் ஆவியாகக் கூடியதாக உள்ளது. இம்மூலக்கூறில் ஒரு பீனைல் குழு (−C6H5) ஐதராக்சில் குழுவுடன் பிணைக்கப்பட்டுள்ளது. பீனால் இலேசான அமிலத்தன்மை கொண்டதாக இருப்பதால் அதை கையாளும்போது எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். அமிலங்களுக்கே உரிய புண்ணாக்கும் தன்மை பீனாலுக்கும் இருப்பதே இதற்கான காரணமாகும்.
 
முதலில் பீனால் நிலக்கரித் தாரில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டது. ஆனால் இன்று பெட்ரோலியத்திலிருந்து பேரளவில் ஆண்டுக்கு 7 பில்லியன் கிலோ கிராம் அளவுக்கு தயாரிக்கப்படுகிறது. பீனால் ஒரு முக்கியமான தொழிற்சாலை வேதிப்பொருளாகவும், பல சேர்மங்க்களைத் தயாரிப்பதற்கு உதவும் ஒரு முன்னோடிச் சேர்மமாகவும் ,பயனுள்ள ஒரு வேதிப்பொருளாகவும் கருதப்படுகிறது. நெகிழிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற பொருட்களைத் தயாரிக்க உதவுதல் பீனாலின் முதன்மையான பயனாகும். பாலி கார்பனேட்டுகள், எப்பாக்சைடுகள், பேக்லைட்டு, நைலான், அழுக்குவீக்கிகள், பீனாக்சி களைக்கொல்லிகள் மற்றும் எண்ணற்ற மருந்துகள் தயாரிக்க பீனாலும் அவற்றின் வழிப்பொருள்களும் உதவுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/பீனால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது