"கிளைக்கோபுரதம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
செல்லின் வெளிப்புறத்தில் சுரக்கும் புரதங்கள் பெரும்பாலும் கிளைக்கோசைலேற்றத்திற்கு உள்ளாக்கப்படுகின்றன. சர்க்கரைகளின் நீர் நாட்டப்பண்பு மற்றும் முனைவுத்தன்மை போன்ற சிறப்பியல்புகள் அவை இணைக்கப்பட்டுள்ள புரதத்தின் வேதியியல் பண்புகளை வியத்தகு முறையில் மாற்றக்கூடும். கிளைக்கோப்புரதங்கள் பெரும்பாலும் செல்களின் மேற்பரப்பில் காணப்படுகின்றன. அவை மென்படல புரதங்களாகவோ அல்லது செல்புற தாயத்தின் பகுதியாகவோ செயல்படுகின்றன.இத்தகைய செல் மேற்பரப்பு கிளைக்கோப்புரதங்கள் செல்-செல் தொடர்பு மற்றும் [[பாக்டீரியா]] மற்றும் [[தீ நுண்மம்|வைரஸ்களின்]] தொற்று ஏற்படும் வழிமுறைகளில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளன.<ref>http://www.chemistryexplained.com/Ge-Hy/Glycoprotein.html</ref>
 
கிளைக்கோபுரதத்தின் அமைப்பில் 8பொதுவாக ஒற்றைச்சர்க்கரைடுகள்8 மட்டுமேஒற்றைச்சர்க்கரைகள் இணைந்துள்ளன. ஓலிகோசர்க்கரைடுகள் புரதங்களுடன் N- அல்லது O- கிளைக்கோசைடிக் பிணைப்பினால் இணைக்கப்பட்டுள்ளன. [[லெக்டின்|லெக்டின்கள்]], மியுசின்கள், பாலிபெப்டைடு [[இயக்குநீர்|இயக்குநீர்கள்]] கிளைக்கோபுரதங்கள் ஆகும்.<ref>https://www.sciencedirect.com/topics/agricultural-and-biological-sciences/glycoprotein</ref>
 
சர்க்கரை, செல்களில் எண்டோபிளாச வலைப்பின்னல் மற்றும் கோல்கை உறுப்புகள் ஆகியவற்றில் புரதத்துடன் இணைக்கப்படலாம். N- மூலமாக இணைக்கப்பட்ட சர்க்கரைடுகள் எண்டோபிளாச வலைப்பின்னலுடனும், மேலும் O- மூலமாக இணைக்கப்பட்ட கிளைக்கோபுரதங்கள் கோல்கை உறுப்புக்களுடனும் இணைகின்றன. மூன்று வெவ்வேறு வகையான கிளைக்கோ புரதங்கள் உள்ளன. அவை அவற்றின் தொகுப்பு வினைவழிமுறை மற்றும் அமைப்பு மூலம் வேறுபடுத்தப்படுகின்றன. இந்த கிளைகோபுரதங்கள் N- ஆல் இணைக்கப்பட்டவை, O- ஆல் இணைக்கப்பட்டவை மற்றும் நொதியல்லாத கிளைக்கோப்புரதங்கள் என்பவை ஆகும்.<ref>https://www.reference.com/science/functions-glycoproteins-9541ff78d0d60647#</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2524641" இருந்து மீள்விக்கப்பட்டது