லின்டன் பி. ஜான்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 78:
ஜான்சன் "ஏழ்மை மீதான போர்" தொடுத்தார். மக்களின் வாழ்தரம் மேம்பாட்டிற்காக பல அரசுத் திட்டங்களை முன்னெடுத்தார். ''அருமையான சமூகம்'' எனப் பெயரிடப்பட்ட திட்டங்களின் கீழ் ஏழ்மையை குறைக்கவும் இன வேறுபாட்டை அழிக்கவுமான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றில் பொதுப் பரப்புரை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மூத்தோருக்கான மருத்துவக் காப்பீடு, ஏழைகளுக்கு மருத்துவ உதவி ஆகியன அடங்கும். ஆபிரிக்க அமெரிக்கர்களின் குடிசார் உரிமைகளுக்கு ஆதரவளித்தார். கென்னடியின் பாதையில் தொடர்ந்து பயணித்து அவர்களுக்கு விடுதலை அளித்தார். அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை அரசுகள் மறுக்கவியலாதவாறு 1965இல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. கென்னடியால் முடியாத சட்டங்களுக்கும் ஜான்சனால் சக உறுப்பினர்களை வலியுறுத்தி சம்மதம் பெற முடிந்தது.
 
அதே நேரம் ஜான்சன் வியத்நாம் போரில் அமெரிக்காவின் ஈடுபாட்டைக் கூட்டினார். அவரது பணிக்காலத்தில் 16000 துருப்புகளிலிருந்து 500,000ஆக உயர்ந்தது. இதனால் மக்களிடையே புகழ் மங்கியது. போரின் தீவிரமும் கூடி வந்தது. 1968இல் 1000 அமெரிக்க இளைஞர்கள் இப்போரில் உயிரிழந்தும் எதிரிகளை வெல்ல முடியவில்லை. எனவே மார்ச் மாதத்தில் தான் மீண்டும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு நிற்கப்போவதில்லை என அறிவித்தார்.
==ஓய்வுக்காலம்==
சனவரி 1969இல் குடியரசுத் தலைவராக ஜான்சனின் பணிக்காலம் முடிவடைந்தது. டெக்சசில் இசுடோன்வாலில் இருந்த தமது பண்ணை வீட்டிற்கு திரும்பினார்.
==இறப்பு==
ஜான்சன் சனவரி 22, 1973இல் தமது பண்ணை வீட்டில் [[மாரடைப்பு|மாரடைப்பால்]] காலமானார். அப்போது அவருக்கு 64 அகவைகள். அவருக்கு அரசு மரியாதையுடன் உடலடக்கம் செய்யப்பட்டது. இறுதி சடங்குகள் சனவரி 25 அன்று நிகழ்ந்தன. [[வாசிங்டன், டி. சி.]] நகரின் தேசிய கிறித்தவத் தேவாலயத்தில் நடைபெற்றது. வியட்நாம் போரில் தோல்வியுற்றாலும் குடிசார் உரிமைகளை நிலைநாட்டியதற்காக வரலாற்றாசிரியர்கள் ஜான்சனை நல்ல குடியரசுத் தலைவராகவே மதிப்பிடுகின்றனர். 1973இல் The Manned Spacecraft Center in [[ஹியூஸ்டன்|ஹியூஸ்டனிலில் ]] உள்ள ஆளுள்ள விண்வெளி மையத்திற்கு லின்டன் பி. ஜான்சன் விண்வெளி மையம் எனப் பெயர் சூட்டப்பட்டது.
 
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/லின்டன்_பி._ஜான்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது