வெடிபொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 60:
 
வெடிபொருட்கள், தாழ் வெடிபொருட்கள், உயர் வெடிபொருட்கள் என அவற்றின் எரிதல் வீத அடிப்படையில் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. தாழ் வெடிபொருட்கள் விரைவாக எரியக்கூடியவை. உயர் வெடிபொருட்கள் வெடிக்கக் கூடியவை. இந்த வரைவிலக்கணங்கள் தெளிவாக இருப்பினும், விரைவான சிதைவைத் துல்லியமாக அளவிடுவது கடினமானது என்பதால் நடைமுறையில் வெடிபொருட்களை வகைபடுத்துவது அவ்வளவு எளிதல்ல.
 
=== முதல்நிலை வெடிபொருள் ===
 
சிறிய அளவு வெப்பத்திற்கும் அதிர்ச்சிக்கும் கூட செயல்படக் கூடிய வெடிபொருள்கள் முதல்நிலை வெடிபொருள்கள் எனப்படும். இவை சிறிதளவு வெப்பத்தால் தீப்பற்ற வைத்தாலும், அதிர்ச்சியூட்டினாலும் உடனே வெடித்துச் சிதறும். உயர்தர வெடிபொருள்களின் செயல்பாட்டைத் தொடங்கவே இவற்றைப் பயன்படுத்தலாம் என்பதால் துவக்க வெடிபொருள்கள் என்றும் இவற்றை அழைக்கலாம். அதிக எச்சரிக்கையுடன் இவை கையாளப்பட வேண்டும்.
 
ஈய அசைடு, பாதரச பல்மினேட்டு, டெட்ரசீன், டையசோடைநைட்ரோபீனால் உள்ளிட்டவை இதற்கு எடுத்துக் காட்டுகளாகும்.
 
=== கீழ்த்தர வெடிபொருள் ===
 
இவை எரியும். ஆனால் வெடிப்பதில்லை. இவை வலிமை குறைந்த வெடிபொருட்கள் ஆகும். இதனால் வெளியாகும் வாயுக்களின் கன அளவை கணக்கிடவும் கட்டுப்படுத்தவும் முடியும். பட்டாசுகள், இராக்கெட்டுகளில் உந்துப் பொருளாக இவற்றை பயன்படுத்துகிறார்கள்.
 
துப்பாக்கி ரவை, புகைபொடி உள்ளிட்டவை இதற்கு எடுத்துக் காட்டுகளாகும்.
 
=== உயர்தர வெடிபொருட்கள் ===
முதல்நிலை வெடிபொருட்களைப் பயன்படுத்தி இவற்றை வெடிக்கச் செய்ய வேண்டும். திவைப்பதால் இவை வெடிப்பதில்லை. வெடிப்பதால் அதிக சிதறலும், அதிக வெப்ப வெளியீடும் இருக்கும். ஒரு பொருளாகவோ அல்லது பொருட்களின் கலவையாகவோ இவை இருக்கும்.
 
பிக்ரிக் அமிலம், அமோனியம் நைட்ரேட்டு போன்றவை இதற்கு சில எடுத்துக்காட்டுகளாகும்.
 
மரபான வெடிபொருள்களின் இயங்குமுறை, கரிமத்தையும் நீரகத்தையும் அதிர்ச்சு மூட்டும் உயிரகமேற்றம் வழியாக சார்ந்துள்ளது கரி ஈருயிரகியாகவும் கரி ஓருயிரகியாகவும் நீராவி வடிவிலான நீராகவும் மாற்ருவதே ஆகும். கரிம்ம், நீரகம் கலந்த எரிபொருளை எரிக்க தேவையான உயிரகத்தை நைட்டிரேட்டுகள் தருகின்றனஉயர்வெடிபொருள்கள் ஒரே கரிம மூலக்கூறில் கரிமம், நீரகம், உயிரகம் பெற்றுள்ளன. குறைந்த வெடிதிறப் பொருள்களான ANFO போன்றவை கரிம,நீரக எரிம எண்ணெயும் அம்மோனியம் நைட்டிரேட்டும் கலந்த சேர்மானங்களைக் கொண்டுள்ளன. அலுமினியத்தூள் போன்ற வெடிதிறமூட்டிகளை வெடிபொருளுக்கு வெடிப்பு ஆற்றலைக் கூட்டுவதற்காகச் சேர்க்கலாம். வெடித்ததுமே காலகப் பகுதி, காலக வளிமமாகவும் நச்சுள்ள காலக உயிரகியாகவும் மாறுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/வெடிபொருள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது