இலந்தனைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 68:
முறைசாரா வேதியியல் குறியீடான Ln என்பதை இலந்தனைடுகளைக் குறிக்கும் பொதுக் குறியீடாக விவாதங்களில் பயன்படுத்துகிறார்கள். இக்குறியீடு எந்தவொரு இலந்தனைடையும் குறிக்கும். இக்குழுவில் உள்ள 15 தனிமங்களில் ஒன்றைத் தவிர அனைத்தும் f- தொகுதித் தனிமங்களாகும். அது இலந்தனம் அல்லது லியுதேத்தியம் இவற்றில் ஒன்றாக இருக்கலாம். அது டி தொகுதி தனிமமாக கருதப்படுகிறது. ஆனால் வேதியியல் ஒற்றுமைகள் காரணமாக அதையும் இக்குழுவில் சேர்த்துக் கொள்கிறார்கள். 14 தனிமங்களின் எலக்ட்ரான்கள் 4 f- ஆர்பிட்டால்களில் படிப்படியாக நிரப்பப்படுகின்றன <ref>[http://chemistry.tutorvista.com/inorganic-chemistry/f-block-elements.html F Block Elements, Oxidation States, Lanthanides and Actinides]. Chemistry.tutorvista.com. Retrieved on 2017-12-14.</ref>. இதனால் இவற்றை 4 f- தனிமங்கள் என்றும் அழைக்கிறார்கள். அனைத்து இலந்தனைடு தனிமங்களும் மூவிணைதிற நேர்மின் அயனிகளாக (Ln3+) உருவாகின்றன.இவற்றின் வேதியியல் அயனி ஆரத்தை பொருத்து அமைகிறது. இது இலந்தனம் தொடங்கி லியுதேத்தியம் வரை படிப்படியாகக் குறைகிறது.
 
இக்குழுவில் உள்ள தனிமங்கள் யாவும் இலந்தனத்தின் பண்புகளை ஒத்திருப்பதால் இத்தனிமங்களை இலந்தனைடுகள் என்கிறார்கள். சரியாகச் சொல்வதென்றால் இலந்தனம் மற்றும் லியுதேத்தியம் இரண்டையும் 3 ஆவது நெடுங்குழுத் தனிமங்கள் என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் அவை 5டி கூட்டில் ஓர் இணைதிறன் எலக்ட்ரானைப் பெற்றுள்ளன. இருப்பினும் அவற்றை இலந்தனைடுகள் தொடர்பான விவாதங்களில் இணைத்துக் கொள்கிறார்கள். இலந்தனம், லியுதேத்தியம் இரண்டையும் ஒப்பிடுகையில் பெரும்பாலும் இலந்தனம் இக்குழுவில் இருந்து விலக்கப்படுகிறது. ஏனெனில் இவற்றின் பண்புகள் 3 ஆவது குழுத்தனிமங்களின் பெயருக்கேற்ற வகையில் பொருந்தி இருப்பதுதான் காரணமாகும். இலந்தனம் என்பது இலந்தனம் என்ற தனிமத்தைக் குறிக்குமே ஒழிய அது இலந்தனைடு அல்ல என்று வாதிடுவோரும் உண்டு. ஐயுபிஏசியும் இதன் பயன்பாட்டு கருதியே இக்குழுவில் இதைச் சேர்த்துக் கொண்டுள்ளது<ref name = "Greenwood&Earnshaw">{{Greenwood&Earnshaw|pages=1230–1242}}</ref>
 
இலந்தனம் மற்றும் அதைத் தொடர்ந்து வரும் 14 தனிமங்களின் அணு நிறை பேரியம் மற்றும் ஆஃபினியம் தனிமங்களின் நிறைகளுக்கு இடைப்பட்டதாக இருப்பதால் 4f தனிமங்கள் இவ்விரண்டு தனிமங்களுக்கு இடையில் தனிம வரிசை அட்டவணையில் வைக்கப்பட்டுள்ளன. பேரியம் காரமண் உலோகமாகும். இது IIஏ தொகுதி தனிமமாகும். ஆஃபினியம் தைட்டானியம் மற்றும் சிர்க்கோனியம் தனிமங்களின் பண்புகளைப் பெற்றுள்ள IIபி தொகுதி தனிமமாகும். எனவே இவை III pi தொகுதியில் இட்ரியத்திற்கு கீழே வைக்கப்படவேண்டும். இருப்பினும் இவை தனிம வரிசை அட்டவணையின் கீழே அடிப்பகுதியில் 4ஃ தனிமங்கள் என தனியாக வைக்கப்படுகின்றன. அட்டவணையை ஒழுங்குபடுத்தும் நோக்கிலேயே இலந்தனைடுகளும் ஆக்டினைடுகளும் ஆறு மற்றும் ஏழு தொகுதிகளுக்குப் பதிலாக அடியில் தனியாக வைக்கப்பட்டுள்ளன.
 
"https://ta.wikipedia.org/wiki/இலந்தனைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது