கந்தகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 18:
நெகிழ்மக் கந்தகம் அல்லது காமாக் கந்தகம் [[இரப்பர்]] போன்ற தன்மையையும் ஒளி ஊடுருவிச் செல்லக் கூடிய தன்மையையும் கொண்டுள்ளது. கந்தகத்தை உயர் வெப்ப நிலைக்கு உருக்கி திடீரென்று குளிர் நீரில் குளிர்வித்து இதைப் பெறுகின்றார்கள். இதன் அடர்த்தி 1920 கிகி/கமீ. இது பிற கந்தக வேற்றுருக்களைப் போல கார்பன் டை சல்பைடில் கரைவதில்லை. நீண்ட நேர படு நிலைக்குப் பின் கந்தகம் ஒளிபுகாத, உடைந்து நொருங்கக் கூடிய வெளிர் மஞ்சள் நிறப் பொருளாக மாற்றமடைகின்றது. நெகிழ்மக் கந்தகம் கந்தகத்தின் உண்மையான வேற்றுரு இல்லை என்று சொல்வார்கள். படிக உருவமற்றவை(amorphous), மிதமக்கந்தகம்(colloidal) எனவும் கந்தகத்தை வேறுபடுத்தியுள்ளனர்.
[[File:Io highest resolution true color.jpg|thumb|left|150px| [[லோ]](வியாழன் கிரகத்தின் நிலாக்களில் ஒன்று [[:en:Io (moon)|lo]])-வின் பெரும்பாலான மஞ்சள் மற்றும் செம்மஞ்சள் நிறங்கள், உயிர் எரிமலைகள் உருவாக்கிய கந்தகம் மற்றும் கந்தக கனிமங்களினாலே. ]]
== கந்தகத்தின் சேர்மங்கள் ==
 
கந்தகம் பொதுவாக -2 முதல் +6 வரையிலான ஆக்சிசனேற்ற நிலைகளில் காணப்படுகிறது. மந்த வாயுக்களைத் தவிர மற்ற அனைத்து தனிமங்களுடனும் கந்தகம் நிலையான சேர்மங்களைக் கொடுக்கிறது.
இலேசான ஆக்சிசனேற்றும் முகவர்கள் முன்னிலையில் கந்தகம் வலிமையான அமிலக் கரைசல்களுடன் வினைபுரிந்து பல கந்தக நேர்மின் அயனிகளை உற்பத்தி செய்கிறது. கந்தகத்தை ஒலியம் எனப்படும் புகையும் கந்தக அமிலத்தில் கரைத்தால் வண்ணக் கரைசல்கள் தோன்றுவதை 1804 ஆம் ஆண்டில் சி.எப். புச்சோல் கண்டறிந்து கூறினார். ஆனால் 1960 களின் பிற்பகுதியில் மட்டுமே சம்பந்தப்பட்ட பாலி கந்தக நேர்மின் அயனிகளின் நிறத்திற்கான காரணம் மற்றும் கட்டமைப்பு போன்றவை தீர்மானிக்கப்பட்டன. S82 + ஆழ்ந்த நீலம் என்றும் S42 + மஞ்சள் மற்றும் S162 + சிவப்பு என்றும் இறுதியாக்கப்பட்டன.
== சல்பைடுகள் ==
கந்தகத்துடன் ஐதரசனை சேர்த்து வினைபுரியச் செய்தால் ஐதரசன் சல்பைடு தோன்றுகிறது. இது சற்று அமிலத்தன்மையை வெளிப்படுத்துகிறது.
:H<sub>2</sub>S {{eqm}} HS<sup>−</sup> + H<sup>+</sup>
ஐதரசன் சல்பைடு வாயுவும் ஐதரோசல்பைடு எதிர் மின்னயனியும் பாலூட்டிகளுக்கு அதிக நச்சுத்தன்மையை அளிப்பனவாக உள்ளன. ஏனெனில் இவை ஈமோகுளோபினின் ஆக்சிசன் கொண்டு செல்லும் திறனை தடை செய்கின்றன. இதே போல சயனைடுகளும் அசைடுகளும் சைட்டோகுரோம்களைத் தடை செய்கின்றன.
தனிமநிலை கந்தகத்தை ஒடுக்குவதன் மூலம் பாலிசல்பைடுகள் உருவாகின்றன. இவை S− மையங்கள் நீக்கப்பட்ட கந்தக அணுக்களின் சங்கிலிகளைக் கொண்டுள்ளன.
:2 Na + S<sub>8</sub> → Na<sub>2</sub>S<sub>8</sub>
இவ்வினை கந்தகத்தின் தனிச் சிறப்புப் பண்பான தனக்குள் இணைந்து சங்கிலியாகும் பண்பை வெளிப்படுத்துகிறது. இப்பாலி சல்பைடுகளை புரோட்டானேற்றம் செய்வதால் பாலிசல்பேன்கள் தோன்றுகின்றன. H2Sx என்ற வாய்ப்பாடு கொண்ட இவற்றில் x = 2, 3, மற்றும் 4 என்ற மதிப்புகளைக் குறிக்கும். இறுதியில் கந்தகம் ஒடுக்கும் வினை மூலமாக சல்பைடு உப்புகளைக் கொடுக்கிறது.
:16 Na + S<sub>8</sub> → 8 Na<sub>2</sub>S
இந்த இனங்களின் இடையே நிகழும் இம்மாற்றம் சோடியம்-கந்தகம் மின்கலன்களில் பயன்படுத்தப்படுகிறது.
== ஆக்சைடுகள், ஆக்சோ அமிலங்கள், ஆக்சோ எதிர்மின் அயனிகள் ==
கந்தகத்தை எரிப்பதால் முக்கியமான கந்தக ஆக்சைடுகள் தோன்றுகின்றன.
:S + O<sub>2</sub> → SO<sub>2</sub> ([கந்தக டை ஆக்சைடு]])
:2 SO<sub>2</sub> + O<sub>2</sub> → 2 SO<sub>3</sub> ([[கந்தக டிரை ஆக்சைடு]])
கந்தகத்தின் பல ஆக்சைடுகள் அறியப்படுகின்றன. கந்தக மோனாக்சைடு, இருகந்தக மோனாக்சைடு, இருகந்தக ஈராக்சைடு மற்றும் உயர் ஆக்சைடுகளைக் கொண்டுள்ள பெராக்சோ குழுக்கள் உள்ளிட்டவை கந்தகத்தை மிகுதியாகக் கொண்ட ஆக்சைடுகள் ஆகும்.
கந்தக ஆக்சோ அமிலங்களாகவும் கந்தகம் உருவாகிறது. இவற்றில் சில அமிலங்களை தனித்துப் பிரிக்க இயலவில்லை. அவற்றை உப்புகளின் வழியாக மட்டுமே அறியமுடிகிறது. கந்தக டை ஆக்சைடும் சல்பேட்டுகளும் (SO2−3) கந்தச அமிலத்துடன் தொடர்பு கொண்டுள்ளன. கந்தக டிரை ஆக்சைடும் சல்பேட்டுகளும் (SO2−4) கந்தக அமிலத்துடன் தொடர்பு கொண்டுள்ளன. SO3 உடன் கந்தக அமிலம் சேர்ந்து ஒலியம் என்ப்படும் புகையிம் கந்தக அமிலம் உருவாகிறது. இது கந்தக அமிலத்தில் பைரோகந்தக அமிலம் (H2S2O7) கலந்த கரைசலாகும்.
கந்தகம் இரண்டு ஆக்சிசனேற்ற நிலைகளில் காணப்படும் தயோ சல்பேட்டு உப்புகள் சில சமயங்களில் ஐப்போசல்பைட்டுகள் எனப்படுகின்றன. இவை புகைப்படத் தொழிலில் நிலைநிறுத்திகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. சோடியம்டைதயோனேட்டில் (Na2S2O4) அதிகமாக ஒடுக்குகின்ற டை தயோனைட்டு (S2O2−4) எதிர்மின் அயனி இடம்பெற்றுள்ளது.
== ஆலைடுகளும் ஆக்சி ஆலைடுகளும் ==
நவீன தொழிற்சாலைகளுக்கு கந்தக ஆலைடுகள் முக்கியமானவையாக உள்ளன. உயர் அழுத்த மின்மாற்றிகளில் கந்தக எக்சாபுளோரைடு மின்கடத்தா வாயுவாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும், அழுத்தக் கொள்கலன்களிலும் இது வினைபுரியாப் பொருளாகவும் நச்சுத் தன்மை அற்ற உந்துபொருளாகவும் பயன்படுகிறது. கந்தக டெட்ரா புளோரைடு எனப்படும் உயர் நச்சு அரிதாகப் பயன்படுத்தப்படும் ஒரு கரிம முகவராகும். கந்தக டை குளோரைடும் இருகந்தக இருகுளோரைடும் முக்கியமான தொழிற்சாலை வேதிப் பொருட்களாகும். சல்பியூரைல் குளோரைடும் குளோரோகந்தக அமிலமும் கந்தக அமிலத்தினுடைய வழிப்பொருட்களாகும். தயோனைல் குளோரைடு (SOCl2) கரிமத் தொகுப்பு வினைகளில் ஒரு பொது முகவராகப் பயன்படுத்தப்படுகிறது.
== நிக்நைட்டுகள் ==
முக்கியமான S–N சேர்மங்களில் ஒன்று டெட்ராகந்தக டெட்ரா நைட்ரைடு (S4N4) ஆகும். இச்சேர்மத்தை சூடாக்குவதால் கந்தக நைட்ரைடு ((SN)x) பலபடி தோன்றுகிறது. எந்த உலோக அணுக்களையும் கொண்டிருக்காவிட்டாலும் கூட இது உலோகப் பண்புகளைக் கொண்டுள்ளது. தயோசயனேட்டுகள் SCN− குழுவைக் கொண்டுள்ளன. தயோசயனேட்டை ஆக்சிசனேற்றம் செய்தால் NCS-SCN இணைப்புடனான தயோசயனோசன் (SCN)2 உருவாகிறது. பாசுபரசு சல்பைடுகளும் எண்ணற்ற அளவில் காணப்படுகின்றன. P4S10 மற்றும் P4S3 என்பவை இரண்டும் வணிக முக்கியத்துவம் கொண்டவையாகும்.
== பயன்கள் ==
[[File:Schwefel 01.jpg|thumb|Native sulfur crystals|150px]]
"https://ta.wikipedia.org/wiki/கந்தகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது