பிளாண்டர்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
*விரிவாக்கம்*
வரிசை 54:
பரப்பளவைப் பொருத்து இது [[பெல்ஜியம்|பெல்ஜியத்தின்]] மிகப்பெரும் பகுதியில்லாவிடினும் மிகுந்த மக்கள்தொகை கொண்ட பகுதியாக, பெல்ஜியத்தின் 11,491,346 பேரில் 7,876,873 பேர் (68.5%) (பிரசெல்சு நகரின் இடச்சு பேசும் பிளெமியப் பகுதிகளை உள்ளிட) இங்கு வசிக்கின்றனர்.
 
இடைக்காலத்தில் "ஃபிளாண்டர்சு கவுன்ட்டி" என்பது கிபி 900இல் [[டோவர் நீரிணை]]யிலிருந்து [[செல்ட் ஆறு]] [[கயவாய்]] வரை இருந்த பகுதியாகும்; இது மேலும் விரிவாக்கப்பட்டது. இந்த கவுண்ட்டி தற்போதைய பெல்ஜியத்தில் உள்ள கிழக்கு பிளாண்டர்சையும் மேற்கு பிளாண்டர்சையும் ஒன்றுசேர்த்தப் பகுதியுடன் அடுத்துள்ள [[பிரான்சு]], [[நெதர்லாந்து|நெதர்லாந்து]] பகுதிகளும் இணைந்தது. பழைய நிலப்பகுதி வரையறை இன்னமும் பொருந்தும் என்றாலும் பிளாண்டர்சு என்ற சொல் 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் இடச்சு பேசும் [[மியூசே ஆறு]] வரையான அனைத்துப் பகுதிகளையுமே குறிக்கப் பயன்படுத்தப்படலாயிற்று. தவிரவும் பிளெமிசக் கலை என்பது இடச்சு பேசும் மக்களின் கலை என்பதாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. 20ஆம் நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்ட நிர்வாகச் சீர்திருத்தற்கப்பால் பெல்ஜிய நாட்டினுள் உள்ள பிளாண்டர்சு பகுதி இரண்டு அரசியல் அமைப்புகளாக வரையறுக்கப்பட்டன.: "பிளெமிச சமூகம்" ({{lang-nl|Vlaamse Gemeenschap}}), "பிளெமிச மண்டலம்" ({{lang-nl|Vlaams Gewest}}). இவை இரண்டும் இணைக்கப்பட்டன, இருப்பினும் புவியியல்படி பிளெமிச சமூகம் பிரசெல்சை உள்ளடக்கும், பிளெமிச மண்டலம் உள்ளடக்காது.
எந்த வரையறையானாலும், பிளாண்டர்சு ஐரோப்பிய வரலாற்றில் முதன்மையாக இருந்துள்ளது. [[நடுக் காலம் (ஐரோப்பா)|நடுக்காலத்தின்]] பிற்பகுதியில் கென்ட், புர்ஜெசு, [[ஆண்ட்வெர்ப்]], [[பிரசெல்சு நகரம்|பிரசெல்சு]] போன்ற நகரங்கள் ஐரோப்பாவின் மிகவும் செல்வச்செழிப்புள்ள நகரியமாக்கப்பட்டவையாக விளங்கின. அடுத்துள்ள பகுதிகளிலிருந்த [[கம்பளி]]யை நெய்து துணித் தயாரித்தன; உள்நாட்டுத் தேவைகளுக்கு மட்டுமன்றி ஏற்றுமதியும் செய்தன. இதனால் மிகவும் உயர்தர பண்பாடு உருவானது; கலை, கட்டிடக்கலை ஆகியவற்றில் இத்தாலிக்கு இணையான மேம்பாட்டை எட்டியிருந்தது. 19ஆம் நூற்றாண்டின் [[தொழிற்புரட்சி]] மையங்களில் ஒன்றாக பெல்ஜியம் விளங்கியது. இதற்கு முன்பே பிளாண்டர்சை பிரான்சியம் பேசிய வல்லோனியா கைப்பற்றியது. 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிளாண்டர்சின் பொருளியல் விரைவாக வளர்ந்தது. இன்றைய நாளில் பிளாண்டர்சு குறிப்பிடத்தகளவில் தெற்கத்தியப் பகுதிகளை விட செல்வச் செழிப்புடன் உள்ளது. பொதுவாகவும் ஐரோப்பா மற்றும் உலகின் செல்வமிக்க பகுதிகளில் ஒன்றாக விளங்குகின்றது.<ref>{{cite web|url=https://www.state.gov/r/pa/ei/bgn/2874.htm|title=Belgium|work=U.S. Department of State|accessdate=21 June 2015}}</ref>
 
புவியியல்படி, பிளாண்டர்சு பொதுவாக சமவெளியாகும். வடக்கு கடலை ஒட்டி சிறியக் கடலோரம் உள்ளது. பிளாண்டர்சின் பெரும்பகுதி பயிரிட்டு வேளாண்மை செய்யத் தகுந்தது. அடர்ந்த மக்கள்தொகை உடைய இதன் மக்களடர்த்தி சதுர கி.மீக்கு 500 பேராக (சதுர மைலுக்கு 1200 பேர்) உள்ளது. மேற்கில் பிரான்சுடனும் வடக்கிலும் கிழக்கிலும் நெதர்லாந்துடனும் தெற்கில் வல்லோனியாவுடனும் எல்லைகளைப் பகிர்ந்துள்ளது. அலுவல்முறையாக இருமொழியுடைய [[பிரசெல்சு]] பிளாண்டர்சு பகுதிக்குள் அடைபட்டுள்ளது. கிழக்கில் வல்லோனியாவிற்கும் நெதர்லாந்திற்கும் இடையே அடைபட்டுள்ள வோரேனும் வடக்கே உள்ள பார்லே-எர்டோகும் (இதன் 22 பகுதிகளை நெதர்லாந்து சூழ்ந்துள்ளது) இதன் வெளிப்புறப் பகுதிகளாகும்.
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:பெல்ஜிய மண்டலங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பிளாண்டர்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது