புருசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 118:
வட-கிழக்கு செருமனி பெரும்பாலும் [[சீர்திருத்தத் திருச்சபை]]யினராகையால் பல புருசியர்களும் சீர்த்திருத்தவாதிகளே. இருப்பினும் இரைன்லாந்து, கிழக்கு புருசியா, போசென், சிலேசியா, மேற்கு புருசியா, எர்ம்லாந்து பகுதியிலுள்ள மக்கள் [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க திருச்சபையினராகும்]]. தெற்கு செருமனியின் மாநிலங்கள் (குறிப்பாக [[ஆஸ்திரியா]]வும் [[பவேரியா]]வும்) கத்தோலிக்கத் திருச்சபையினராகையால், புருசியாவின் செல்வாக்கை விரும்பவில்லை. புருசியா பெரும்பாலும் செருமானியர்களாக இருந்தபோதும் 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் புதிய போலிய பகுதிகளில் ஏராளமான போலிய மக்கள் வாழ்ந்து வந்தனர். 1918இல் இந்தப் போலிய பகுதிகள் [[போலந்து|போலந்திற்குத்]] திருப்பி யளிக்கப்பட்டன.
== துவக்க வரலாறு ==
1226இல் போலிய இளவரசர் கான்ராடு, டிரான்சில்வேனியாவின் டியூட்டானிக்க மறவர்களை தனது எல்லையிலிருந்த புருசிய பழங்குடிகளுடன் சண்டையிட தனது இடமான வடபோலந்திருந்த மசோவியாவிற்கு வர வேண்டினார். இந்தச் சண்டை 100 ஆண்டுகளுக்கும் மேல் நடந்தது. அப்போது புதிய நாட்டையும் உருவாக்கினர். தொடர்ந்து இந்த நாடு இன்றைய [[எசுத்தோனியா]], [[லாத்வியா]], [[லித்துவேனியா]]வின் பெரும் பகுதிகளையும் வடக்குப் போலந்தின் சில பகுதிகளையும் உள்ளடக்கியிருந்தது. 1466 முதல் இம்மறவர்கள் போலந்து அரசரின் ஆளுகையில் இருந்தனர்.<ref>Norman Davies, ''God's Playground: A History of Poland Vol. l'' (1982) p. 81.</ref> 1525இல் மறவர்களின் தலைவர் சீர்திருத்தத் திருச்சபைக்கு மாறினார். தனது மறவர்கள் இருந்த இடத்தை போலந்து அரசரின் கீழ், புருசியா சிற்றரசாக உருவாக்கினார்.
 
அக்காலத்தில் புருசியா சிற்றரசின் நிலப்பகுதி விசுத்துலா ஆற்றின் கழிமுகத்தின் கிழக்கே இருந்தது. 1618இல் புருசியாவின் புதிய சிற்றரசராக பிராண்டன்பர்கின் ஜான் சிகிசுமன்ட் பதவி ஏற்றார். இவர் ''திருத்தந்தையை தேர்ந்தெடுக்கும் உரிமை'' பெற்றவர். அச்சமயத்தில் பிராண்டன்பர்கை ஓயென்சோலர்ன் குடும்பம் ஆண்டு வந்தது. பிராண்டன்பர்கு [[புனித உரோமைப் பேரரசு|புனித உரோமைப் பேரரசில்]] இல்லாதிருந்தது. எனவே இப்பேரரசில் இணைய பிரசியாவுடன் இணைய விரும்பியது. புதிய நாட்டிற்கு ''பிரண்டென்பேர்க்-புருசியா'' எனப் பெயரிட்டது. இந்நாட்டின் நடுவே போலியப் பகுதிகள் இருந்தன; இருப்பினும் பிரண்டென்பேர்க்-புருசியா போலந்திலிருந்து விலகத் துவங்கியது. முதலாம் பிரெடெரிக் காலத்தில் புருசியா மாக்டெபர்கிலும் [[ரைன் ஆறு|ரைன் ஆற்றின்]] மேற்கிலுமுள்ள பகுதிகளை கைப்பற்றியது.
"https://ta.wikipedia.org/wiki/புருசியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது