"ஐசாக் நியூட்டன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

60 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
Added a link
(Added a link)
'''ஐசக் நியூட்டன்''' ([[டிசம்பர் 25]], [[1642]] – [[மார்ச் 20]], [[1727]])<ref>அக்காலத்தில் வழக்கிலிருந்த [[ஜூலியன் நாட்காட்டி]]யின்படி: [[டிசம்பர் 25]], 1642 – [[மார்ச் 20]], 1727; அல்லது [[கிரெகோரியின் நாட்காட்டி]]யின்படி: [[ஜனவரி 4]], [[1643]] – [[மார்ச் 31]], 1727.</ref>, ஒரு ஆங்கிலக் [[கணிதம்|கணிதவியலாளரும்]], [[அறிவியல்|அறிவியலாளரும்]], [[மெய்யியல்|தத்துவஞானியும்]] ஆவார். அறிவியல், கணிதம், இயந்திரவியல் துறைகளிலும், ஈர்ப்பு விசை பற்றியும் பெரிதும் ஆய்வுகள் மேற்கொண்டவர் நியூட்டன். இது நாள் வரை வாழ்ந்த அறிவியலாளர்களுள் மிகவும் செல்வாக்கு உள்ளவர்களுள் ஒருவராகவும், [[அறிவியல் புரட்சி]]யில் முக்கியமான ஒருவராகவும் இவர் இருந்தார்.
 
[[1687]]ல் [[ஈர்ப்பு விதி|ஈர்ப்பு]] சம்பந்தமான விளக்கங்களை உள்ளடக்கிய, ''Philosophiae Naturalis Principia Mathematica'' என்னும் நூலை வெளியிட்டார். இவருடைய [[நியூட்டனின் இயக்க விதிகள்|இயக்க விதிகள்]] மூலம், [[மரபார்ந்த விசையியல்]] (''classical mechanics'') என்னும் துறைக்கு வித்திட்டார். [[கோட்பிறைட் வில்ஹெல்ம் லீப்னிஸ்]] என்பவருடன் சேர்ந்து, வகையீட்டு [[நுண்கணிதம்|நுண்கணிதத்]] துறையின் உருவாக்கத்தில் பங்கு கொண்டார்.
 
நியூட்டனின் ''பிரின்சிப்பியா''விலேயே, பின்வந்த மூன்று நூற்றாண்டுகளில் பௌதீக அண்டம் தொடர்பான அறிவியலாளரின் நோக்கில் ஆதிக்கம் செலுத்திய, இயக்க விதிகள், பொது ஈர்ப்பு ஆகியவை உருவாக்கம் பெற்றன. இது புவியில் பொருட்களின் இயக்கங்களையும், அண்டவெளியில் உள்ள கோள்கள் முதலிய பொருட்களின் இயக்கங்களையும் ஒரே கோட்பாடுகளின் அடிப்படையில் விபரிக்கலாம் என விளக்கியது.
7

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2548822" இருந்து மீள்விக்கப்பட்டது