பேச்சு:சுரோடிங்கர் சமன்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎சுரோடிங்கரின் ஈடுகோள் ஒரு அடிப்படை முதற்கோட்பாடு: :செல்வா, இதுபோன்ற அடிப்படையான கருப்பொரு
வரிசை 4:
 
==சுரோடிங்கரின் ஈடுகோள் ஒரு அடிப்படை முதற்கோட்பாடு ==
ஆங்கில விக்கியில், சுரோடிங்கர் சமன்பாடு ஏதோ மேலும் அடிப்படையான கருத்துக்களில் இருந்து வருவிப்பது போல காட்டியிருப்பது '''தவறு'''. இச் சமன்பாடு அடிப்படை முதற்கொள்கை ஆகும். ஒரு வாறு<u>ஒருவாறு புரிந்து கொள்ள</u> பிற கருத்துக்களில் இருந்து "வருவிப்பது" <u>போல</u> காட்டலாமே ஒழிய, இது ''வேறு எதனில் இருந்தும் வருவிக்க முடியாத முதற்க்கோட்பாடுமுதற்கோட்பாடு''. ஒரு பொருள்பொருளானது இச்சமன்பாட்டில் கூறப்பட்டவாறு ஒழுகினால் (நடத்துகொண்டால்) அது இச்சமன்பாட்டைப் பின்பற்றியதுபின்பற்றும் பொருள் அது எனலாம். அவ்வளவே. இச்சமன்பாட்டின் தீர்வுகளில் இருந்து [[எதிர்மின்னி]] போன்ற அணுத்துகள்களின் அலைப்பண்புகளும், அவை ஏற்கவல்ல ஆற்றல் நிலைகளும், வியப்பூட்டும் விதமாகத் துல்லியமாக வருவதால், இச்சமன்பாட்டுக்கு உயிர் (பயன்) உள்ளது. நியூட்டனின் விதியாகிய F = ma என்பதும் இப்படிப்பட்ட முதற்கொள்கைதான். அதனை வேறு இன்னும் அடிப்படையான கொள்கைகளில் இருந்து வருவிக்க முடியாது. [[விசை]] என்பது காலத்தால் மாறுபடும் உந்தத்தின் அளவு என்று சொன்னாலும், அது ஒரு முதற்கொள்கைதான். நடைமுறையில் காண்பதோடு ஒத்து வருவதால் அது ஏற்கப்பட்ட ஒரு விதி. இதனை அடிப்படையாகக் கொண்டு வருவிக்கும் பல்லாயிரக்கணக்கான பிற துணை விதிகளும் இயல்புகளும் உண்மை என்று நாம் உணர்வதால், நியூட்டனின் விதியை விதி, அடிப்படை விதி என்று ஏற்றுக்கொள்கிறோம்.
--[[பயனர்:செல்வா|செல்வா]] 22:46, 20 ஜூன் 2008 (UTC)
 
வரிசை 10:
 
:செல்வா, இதுபோன்ற அடிப்படையான கருப்பொருள்களில் தவறைத் திருத்தியமைக்கு நன்றி. மயூரநாதன், இத்தகு தலைப்புகளில் கட்டுரைகளைத் துவக்கியதற்கு மிக்க நன்றி. -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 05:51, 21 ஜூன் 2008 (UTC)
 
::மயூரநாதன் நீங்கள் இக்கட்டுரையையும், இது தொடர்பான பல கட்டுரைகளையும் தொடங்கியமைக்கு மிக்க நன்றி. இத் தொடக்கங்களே பெரும் உந்துகோலாகவும் உள்ளன. சுந்தர் உங்கள் பாராட்டுக்கு நன்றி. குவாண்டம் பொறிமுறை என்பதில் உள்ள பொறிமுறை என்பதை இயங்கியல் என்று கூறுவது பொருந்தும் என்று நினைக்கிறேன். Mechanics என்பதற்குப் பிற இடங்களில் விசையியல் என்பது பொருந்தும் (ஜே கே என்னும் பயனர் இது பற்றி முன்னர் உரையாடியுள்ளார். பார்க்கவும் [[பேச்சு:விசையியல்]].--[[பயனர்:செல்வா|செல்வா]] 14:46, 21 ஜூன் 2008 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:சுரோடிங்கர்_சமன்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சுரோடிங்கர் சமன்பாடு" page.