சிங்கப்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Replacing Coat_of_arms_of_Singapore_(blazon).svg with File:Coat_of_arms_of_Singapore.svg (by CommonsDelinker because: File renamed: Criterion 4 (harmonizing names of file set)).
No edit summary
வரிசை 60:
}}
 
'''சிங்கப்பூர்''' அல்லது அலுவல்முறையாக '''சிங்கப்பூர் குடியரசு''' (''The Republic of Singapore'', [[சீன மொழி|சீனம்]]: 新加坡共和国, ''Xīnjīapō Gònghéguó''; [[மலாய் மொழி|மலாய்]]: ''Republik Singapura'') [[தென்கிழக்காசியா]]வில் உள்ள ஒரு தீவு நாடு. [[மலேசியத் தீபகற்பம்|மலேசியத் தீபகற்பத்தின்]] தென் முனையில் அமைந்துள்ளது, [[ஜொகூர் நீர்ச்சந்தி]] இதனை [[மலேசியா]]விடமிருந்து பிரிக்கிறது. தெற்கில் [[சிங்கப்பூர் நீரிணை|சிங்கப்பூர் நீர்ச்சந்தி]] [[இந்தோனேசியா]]வின் [[ரியாவு தீவுகள்|ரியாவு]] தீவுகளைப் பிரிக்கின்றது. சிங்கப்பூர் பெரிதும் [[நகராக்கம்|நகரமயம்]] ஆன நாடாகும் . மிகக்குறைவான அளவிலேயே மழைக்காடுகள் உள்ளன. நிலச்சீரமைப்பு மூலம் கூடுதலான நிலங்கள் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டுள்ளன.
 
கிபி 2 ஆம் நூற்றாண்டில் மனிதக் குடியேற்றம் தொடங்கிய நாளிலிருந்து சிங்கப்பூர் பல உள்ளூர் இராச்சியங்களின் பகுதியாக விளங்கி வந்துள்ளது. [[1819]] ஆம் ஆண்டில் [[ஜொகூர்]] சுல்தானகத்தின் அனுமதியுடன் [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்]] சிங்கப்பூரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. [[1824]] இல் [[பிரித்தானியா]]வின் நேரடி ஆட்சியினுள் வந்தது . [[1826]] இல் [[தென்கிழக்காசியா]]வின் ஒரு பிரித்தானிய குடியேற்ற நாடாக ஆனது. [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது [[ஜப்பான்|சப்பானி]]யர்களால் சிறிது காலம் ஆக்கிரமிக்கப்பட்ட சிங்கப்பூர் மறுபடியும் [[1945]]ல் [[ஆங்கிலேயர்]] ஆட்சியின் கீழ் வந்து பிறகு [[1963]]ல் ஏனைய பிரித்தானிய குடியேற்றப் பகுதிகளோடு சேர்ந்து [[மலேசியா]]வோடு இணைந்து பிரித்தானியாவிடமிருந்து விடுதலை அடைந்தது. [[1965]] [[ஆகத்து 9]] இல் மலேசியாவிலிருந்து பிரிந்து, விடுதலை பெற்று தனிக் குடியரசு நாடாக உருவானது. அன்றிலிருந்து சிங்கப்பூரின் வளம் பெருமளவு விரிவடைந்து [[நான்கு ஆசியப் புலிகள்|நான்கு ஆசியப் புலிகளில்]] ஒன்றானது.
 
சிங்கப்பூர் [[வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமை]]யில் ஓரங்க நாடாளுமன்றக் குடியரசு ஆட்சியைக் கொண்டுள்ளது. 1959 ஆம் ஆண்டு முதல் [[மக்கள் செயல் கட்சி]] அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று ஆட்சி நடத்தி வருகிறது.
வரிசை 77:
சிங்கப்பூரின் வரலாறு [[14ம் நூற்றாண்டு|14 ஆம் நூற்றாண்டிலிருந்து]] குறிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன் சிங்கப்பூரும் மலேசியாவும் [[கடாரம்]] கொண்ட [[சோழர்|சோழ]] மண்டலத்தின் ஆட்சிக்கு உட்பட்டிருக்கலாம் என்று [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] வரலாறு காட்டுகிறது. 14ம் நூற்றாண்டில் அது [[துமாசிக்]] என்ற பெயர் கொண்ட நகரமாகக் காட்சியளித்தது. அது [[சுமாத்திரா]]வில் இயங்கிய [[சிறீவிஜயம்|ஸ்ரீ விஜயப் பேரரசின்]] ஆட்சிக்கு உட்பட்டது. சிங்கை தீவில் ஒரு நகரம் இருந்தது என்றும் அந்த நகரம் [[தென்கிழக்காசியா]]வில் ஒரு முக்கிய வர்த்தக மையமாக விளங்கியது என்று மலாய் மக்களின் வரலாறு கூறுகிறது.
 
ஸ்ரீவிஜய பேரரசு மறைந்த பிறகு, துமாசிக் மற்ற அரசுகளால் தாக்கப்பட்டது. [[ஜாவா]]வில் இருந்த மாஜாபாஹித் பேரரசு, [[தாய்லாந்து|தாய்லாந்தில்]] இயங்கிய [[அயுத்திய அரசு]] போன்றவை அந்த நகரை தம் ஆட்சிக்குள் கொண்டு வர முயன்றன. தாய்லாந்தின் அயுத்திய அரசு குறைந்தது ஒரு முறை துமாசிக் தீவைத் தாக்க முயன்று தோல்வி அடைந்தது என்று வரலாறு காட்டுகிறது. அந்நேரத்தில் - [[15ம் நூற்றாண்டு|15ம் நூற்றாண்டின்]] தொடக்கப் பகுதியில் - துமாசிக் நகருக்கு "சிங்கப்பூரா" என்ற புதிய பெயர் சூட்டப்பட்டது.
 
=== குடியேற்றவாத ஆட்சி ===
வரிசை 83:
[[படிமம்:Stamford Raffles statue.jpg|thumb|left|200px| தொமஸ் ஸ்டேம்ஃபர்ட் ராஃபிள்ஸ்]]
 
1819 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் நாள், சர் தாமஸ் ஸ்டாம்போர்ட் ராபிள்ஸ் என்பார் தலைநிலப்பகுதியில் வந்து இறங்கினார். இப்பகுதியின் புவியியல் அமைவிட முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்ட அவர், வணிக நிலையொன்றை அமைப்பதற்காக 1819 பெப்ரவரி மாதம் 6 ஆம் தேதி [[சுல்தான் ஹுசேன் ஷா]]வுடன் [[பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி]] சார்பில் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டார். இவ்வொப்பந்தப்படி சிங்கப்பூரின் தெற்குப்பகுதியில் வணிக நிலையொன்றையும், குடியேற்றம் ஒன்றையும் அமைக்கும் உரிமையைப் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி பெற்றுக்கொண்டது. ஆகஸ்ட் 1824 ஆம் ஆண்டுவரை சிங்கப்பூர் மலே ஆட்சியாளரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாகவே இருந்தது. ஆகஸ்ட் 1824ல் பிரித்தானியா முழுத்தீவையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபோது சிங்கப்பூர் ஒரு பிரித்தானியக் [[குடியேற்றநாடு]] ஆகியது. சிங்கப்பூரிலிருந்த இரண்டாம் வதிவிட அதிகாரியான ஜான் குரோபுர்ட் என்பவரே சிங்கப்பூரை பிரித்தானியாவுக்கு உரியதாக்கியவர். இவர் 1824 ஆகஸ்ட் 2 ஆம் தேதி சுல்தான் ஹுசேன் ஷாவுடன் ஒப்பந்தமொன்றைச் செய்தார். இதன் அடிப்படையில் சுல்தான் தீவு முழுவதையும் பிரித்தானியாவுக்குக் கையளித்தார். இதுவே நவீன சிங்கப்பூரின் தொடக்கம் எனலாம். ராபிள்சின் உதவி அதிகாரியான [[வில்லியம் பர்குகார்]] (''William Farquhar'') சிங்கப்பூரின் வளர்ச்சியையும், பல்லின மக்களின் உள்வருகையையும் ஊக்கப்படுத்தினார். இந்த உள்வருகை கட்டுப்பாடற்ற வருகுடியேற்றக் கொள்கை காரணமாக ஏற்பட்டது. 1856 ஆம் ஆண்டிலிருந்து பிரித்தானிய இந்திய அலுவலகம் சிங்கப்பூரை ஆட்சிசெய்தது. ஆனால் 1867 ஆம் ஆண்டில், சிங்கப்பூர், மக்கள் பிரித்தானியாவின் [[முடிக்குரிய குடியேற்ற நாடு|முடிக்குரிய குடியேற்ற நாடாக]], பிரித்தானிய அரசரின் நேரடி ஆட்சியின்கீழ் கொண்டுவரப்பட்டது. 1869 ஆம் ஆண்டளவில் சுமார் 100,000 மக்கள் இத்தீவில் வாழ்ந்தனர். சிங்கப்பூரின் முதலாவது நகரத் திட்டமிடல் முயற்சி ஒரு பிரித்தாளும் உத்தியாகவே மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டப்படி தீவின் தெற்கு பகுதியில் வெவ்வேறு இன மக்கள் தனித்தனிப் பகுதிகளில் குடியேற்றப்பட்டனர்.
 
[[சிங்கப்பூர் ஆறு]], பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்த வணிகர்களும், வங்கியாளர்களும் நிறைந்த பகுதியாக விளங்கியது. சீன, இந்தியக் கூலித் தொழிலாளர்கள் படகுகளில் பொருட்களை ஏற்றியிறக்கும் வேலை செய்துவந்தனர். மலாயர்கள் பெரும்பாலும் [[மீனவர்]]களாகவும், [[கடலோடி]]களாகவும் இருந்தனர். அராபிய வணிகரும், அறிஞர்களும் ஆற்றுக் கழிமுகத்தின் தென்கிழக்குப் பகுதியில் வாழ்ந்தனர். அக்காலத்தில் மிகவும் குறைவாகவேயிருந்த ஐரோப்பியக் குடியேற்றக்காரர் கானிங் ஹில் கோட்டைப் பகுதியிலும், ஆற்றின் மேல் பகுதிகளிலும் வாழ்ந்தனர். ஐரோப்பியரைப் போலவே இந்தியர்களும் தீவின் உட்பகுதியிலேயே குடியேறினர். இன்று சின்ன இந்தியா என்று அழைக்கப்படும் பகுதி இருக்கும் இடமே இது. விடுதலைக்குப் பின்னர் 1960களில் பெருமெடுப்பிலான மீள்குடியெற்ற நடவடிக்கைகளின்போது அறிபப்பட்டது தவிர, அக்காலத்தின் நாட்டுப்புறத் தனியார் குடியேற்றங்கள்பற்றி மிகக்குறைவாகவே அறியவருகிறது.
 
=== உலகப்போர் ===
[[பினாங்கு]], [[மலாக்கா]] ஆகிய நகரங்களுடன் சிங்கப்பூர் நீரிணைக் குடியேற்றங்களின் (''Straits Settlements'') ஒரு பாகமாக இருந்தது. சப்பானியருடைய எழுச்சிக்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே அவர்கள் வேகமாகத் தமது படைகளைப் பெருக்கிவருவதைப் பிரித்தானியா அறிந்திருந்தது. தென்கிழக்காசியாவில் இருந்த தமது சொத்துக்களைப் பாதுகாப்பதற்காகச் சிங்கப்பூரின் வட முனையில் கடற்படைத் தளம் ஒன்றை அமைப்பதற்குப் பிரித்தானியா முடிவு செய்திருந்தது. ஆனால் [[ஜெர்மனி]]யுடன் ஏற்பட்ட போரினால் [[போர்க் கப்பல்]]களையும், தளவாடங்களையும் ஐரோப்பாவுக்குக் கொண்டுவரவேண்டி இருந்ததனால் இத் திட்டம் நிறைவேறவில்லை. [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது சப்பானியப் படைகள்(ஜப்பன் படைகள் ) [[மலாயா]]வைக் கைப்பற்றிக் கொண்டன. அப்படைகள் சிங்கப்பூரைத் தாக்கியபோது, பெரும்பாலான தமது படைகளை ஐரோப்பாவுக்கு அனுப்பிவிட்டுக் குறைந்த படைபலத்துடன் இருந்த பிரித்தானியர் 6 நாட்களில் தோல்வியடைந்ததுடன், புகமுடியாதது என்று சொல்லப்பட்ட கோட்டையையும் 1942 பெப்ரவரி 15 ஆம் தேதி சப்பானியத் தளபதி [[தொமோயுக்கி யாமாஷித்தா]]விடம் (''Tomoyuki Yamashita'') ஒப்படைத்துச் சரணடைந்தனர். இத்தோல்வியை "பெரும் இழப்பு" என்றும் "பிரித்தானிய வரலாற்றில் மிகப்பெரிய சரணாகதி" என்றும் அப்போதைய பிரித்தானியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் குறிப்பிட்டார். சிங்கப்பூரின் கடற்படைத் தளத்தைச் சப்பானியர் பயன்படுத்தாமல் இருப்பதற்காக, அது சப்பானியரிடம் வீழ்ச்சியடையு முன்பே அழிக்கப்பட்டுவிட்டது. சப்பானியர் சிங்கப்பூரின் பெயரை "ஷோவாவின் காலத்தில் பெறப்பட்ட தெற்குத் தீவு" என்னும் சப்பானியத் தொடரைச் சுருக்கி "ஷொனான்டோ" என மாற்றினர். உலகப் போரில் சப்பானியர் தோல்வியுற்ற ஒரு மாதத்தின் பின்னர் 1945 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 12 ஆம் தேதி சிங்கப்பூர் மீண்டும் பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது.
 
=== தற்போதைய சிங்கப்பூர் ===
வரிசை 101:
சிங்கப்பூர் 63 தீவுகளை உடையது, இதில் பெரிய முதன்மை தீவு சிங்கப்பூர் தீவென அழைக்கப்படுகிறது <ref>{{cite book |first1 =Victor R. |last1= Savage |first2= Brenda S.A. |last2= Yeoh |title=Toponymics: A Study of Singapore's Street Names |accessdate=1 May 2011 |year=2004 |publisher=Eastern Universities Press |location =Singapore |isbn=978-981-210-364-2}}</ref>. மலேசியாவின் ஜொகூர் மாநிலத்துடன் இரண்டு சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. வடக்கில் உள்ள இணைப்பு சாலைக்குப் பெயர் ஜொகூர்-சிங்கப்பூர் காசுவல் வே, மேற்கில் உள்ள இணைப்பு சாலைக்கு டுவசு என்று பெயர். சந்தோசா, புளாவ் மேகோங்ர புளாவ் யுபின், ஜூராங் தீவு ஆகியவை மற்ற குறிப்பிடதக்க தீவுகள் ஆகும்.
 
கடலிலிருந்து நிலத்தை மீட்கும் திட்டம் செயலில் உள்ளது. இதன் காரணமாக 1960ல் 581.5 ச. கிமீ (224.5 சதுர மைல்) இருந்த நிலப்பரப்பு தற்போது் 704 ச.கிமீ (272 சதுர மைல்) ஆக உள்ளது. 2030ம் ஆண்டில் மேலும் 100 ச. கிமீ நிலம் மீட்கப்பட்டுவிடுமென எதிர்பார்க்கப்படுகிறது <ref>{{cite web |title=Towards Environmental Sustainability, State of the Environment 2005 Report |url= http://app.nea.gov.sg/counter/nea_soecover.asp |archiveurl= http://web.archive.org/web/20110623124946/http://www.nea.gov.sg/cms/ccird/soe/soe_cover.pdf |archivedate=23 June 2011 |publisher=Ministry of the Environment and Water Resources |accessdate=22 April 2010}}</ref>. சில நிலமீட்பு திட்டங்களில் சிறிய தீவுகள் ஒன்றிணைக்கப்பட்டு பெரிய தீவு உருவாக்கப்படுகின்றன. நகரமயமாக்கல் பெரும்பாலான முதன்மை மழைக்காடுகளை அழித்துவிட்டாலும் 5% நிலமானது இயற்கை காடுகளாகப் பாதுகாக்கப்படுகிறது <ref>{{cite web |url=http://www.nparks.gov.sg/cms/index.php?option=com_content&view=article&id=198&Itemid=66#_ftnref2 |title=Interesting facts of our Garden City |publisher=National Parks Board |accessdate=31 July 2012}}</ref>. புகிட் திமா என்பது குறிப்பிடத்தகுந்த அழிக்கப்படாத காடாகும்.
 
சிங்கப்பூர் அயனமண்டல தட்பவெப்பநிலை உள்ள நாடாகும். ஆண்டு முழுவதும் வெப்பநிலையில் பெரிய மாறுதல்கள் இருக்காது. அதிகளவு ஈரப்பதம், மழைப்பொழிவு இருக்கும். இந்தோனேசியாவில் காடுகளை எரிப்பதால் இங்கு வானம் மங்கலாக மூட்டத்துடன் காணப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/சிங்கப்பூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது