மாதவி (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிறு திருத்தங்கள்
வரிசை 5:
 
== திரைத்துறையில் ==
 
=== தெலுங்கு ===
 
இவரின் பதின்ம பருவத்தில் தெலுங்கு மொழியில்  தசரி நாராயண ராவோவின் இயக்கத்தில் "தூர்ப்பு படமரா" எனும் படத்தில் நடித்தார். இப்படம்  பெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர் தெலுங்கு திரையுலகின் பெரிய நடிகரான சிரஞ்சீவியுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். இவர் 1982 ஆம் ஆண்டு முதன்முதலில் சிரஞ்சீவியுடன் இணைந்து நடித்த படம் "இன்ட்லோ ராமையா வீடில்லோ கிருஷ்ணையா". பின்னர் மீண்டும் சிரஞ்சீவியுடன் "கைதி" எனும் படத்தில் இணைந்து நடித்தார். இப்படம் இவருக்கு பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. தெலுங்கில் இவரது இறுதி படம் "பிக் பாஸ்" (Big boss) என்பதாகும்.
 
=== தமிழ் ===
இவர் கே. பாலச்சந்தரின் "மரோ சரித்ரா" (1978 Maro charitra) எனும் படத்தில் துணை கதாபாத்திர வேடமேற்று நடித்தார். இப்படம் இந்தியில் "ஏக் தூஜே கே லியே" (Ek Duuje Ke Liye , 1981) எனும் பெயரில் மீளுருவானது. இப்படம் 1981ம் ஆண்டு பெரும் வருவாய் வசூலித்த படமாகவும் திகழ்ந்தது. மாதவி இவ்விரு படங்களிலும்  கமலஹாசனுடன்  காதல் கொள்ளும் ஒரு செல்வந்தப் பெண்ணாக நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் இவருடைய நடிப்பின் தன்மையினால் "பிலிம் பெயர்" விருது வழங்கும் விழாவில் சிறந்த துணை நடிகைக்கான பெயர் பட்டியலில் இடம் பிடித்தார். மேலும் இவ்விரு படங்களிலும் இவரது நடிப்பைப் பார்த்து வியந்த கே. பாலச்சந்தர் முதன்முதலில் தமிழ் திரையுலகிற்கு " தில்லு முல்லு " எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். இப்படம் தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியானமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.
 
மேலும் மாதவி கமலஹாசனுடன் "ராஜ பார்வை, டிக் டிக் டிக், காக்கி சட்டை, சட்டம், எல்லாம் இன்பமயம் மற்றும் மங்கம்மா சபதம் " ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளார். மேலும் இவர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "கர்ஜனை, தில்லு முல்லு, தம்பிக்கு எந்த ஊரு, உன் கண்ணில் நீர் வடிந்தால் மற்றும் விடுதலை " ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
 
=== மலையாளம் ===
இவர் பல மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். பிரதானமாக மலையாள சூப்பர் ஸ்டாரான மம்முட்டி மற்றும் மோகன்லால் அவர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். "ஒரு வடக்கன் வீர கதா" எனும் படத்தில் மிகவும் தத்ரூபமாக நடித்ததன் மூலம் தேசிய விருதையும் பெற்றார். "ஆகாசதூது" எனும் படத்தில் நடித்தமைக்காக கேரள அரசின்  மாநில விருதை சிறந்த இரண்டாம் நடிகைக்காக பெற்றார். மேலும் இப்படத்தில் நடித்தமையால்  1993ம் ஆண்டு சிறந்த நடிகைக்கான "பிலிம் பேர் " விருதுகளையும் பெற்றார். இப்படத்தில் இவர் புற்றுநோயுள்ள ஒரு தாயாக நடித்தமை குறிப்பிடத்தக்கது. இவர் கேரள அரசிடம் இருந்து 3 மாநில விருதுகளை பெற்றுள்ளார். அவற்றுள் ஒன்று சிறந்த நடிகைக்காகவும் மேலும் இரண்டு சிறந்த இரண்டாம் நடிகைக்காகவும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
 
=== கன்னடம் ===
இவர் பல கன்னட மொழி படங்களிலும் நடித்தவராவார். பிரதானமாக கன்னட திரையுலகின் பிரபலமான நடிகர்களான  " ராஜ்குமார், விஷ்ணுவர்த்தன், அன்னட் நக் மற்றும் அம்பரீஷ்  " ஆகியோர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். இவர் ராஜ்குமாருடன் இணைந்து நடித்த பல படங்கள் வர்த்தக ரீதியாக பெரும் வெற்றி பெற்றதுடன் பாராட்டுக்களையும் குவித்தது.
 
"https://ta.wikipedia.org/wiki/மாதவி_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது