ஜமால் அப்துல் நாசிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
சான்றில்லை வார்ப்புரு நீக்கம் (edited with ProveIt)
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 99:
|signature = Nasser(PresidentofEgypt).jpg
}}
'''ஜமால் அப்துந் நாசிர் உசைன்''' ({{lang-ar|جمال عبد الناصر حسين}}) என்னும் முழுப்பெயர் கொண்ட '''ஜமால் அப்துந் நாசிர்''' (''Gamal Abdel Nasser'', [[சனவரி 15]], [[1918]] - [[செப்டெம்பர் 28]], [[1970]])<ref>{{cite book | title=Nasser and His Generation | publisher=Croom Helm | author=Vatikiotis, Panayiotis J. | year=1978 | location=London | pages=23–24 | isbn=978-0-85664-433-7}}</ref> [[எகிப்து|எகிப்தின்]] இரண்டாவது சனாதிபதியாக இருந்தார். 1956 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டில் இறக்கும்வரை அவர் இப்பதவியை வகித்தார். எகிப்து நாட்டுப் படையில் கேணல் தரத்தில் இருந்த அப்துந் நாசிர், பின்னர் நாட்டின் முதலாவது சனாதிபதியாக இருந்த [[முகம்மது நஜீப்]]புடன் இணைந்து, 1952 ஆம் ஆண்டில் இடம்பெற்ற [[1952 எகிப்தியப் புரட்சி|எகிப்தியப் புரட்சி]]க்குத் தலைமை தாங்கினார். இப் புரட்சி மூலம் எகிப்து, [[சூடான்]] முடியாட்சி கவிழ்க்கப்பட்டது. இதன் மூலம் எகிப்தில் [[நவீனமயமாக்கம்|நவீனமயமாக்கத்துக்கான]] பாதை திறந்துவிடப்பட்டது. குறுகிய காலமே நிலைத்திருந்த [[எகிப்து-சிரியா இணைப்பு]] உட்படப் [[பேரரேபியத் தேசியவாதம்]] பெருமளவு வளர்ச்சி பெற்றதுடன் எகிப்தில் சோசலிசச் சீர்திருத்தங்களும் இடம்பெற்றன.
 
நாசிர் தற்கால அராபிய வரலாற்றிலும், 20 ஆம் நூற்றாண்டில் அரசியலிலும் ஒரு முக்கியமான தலைவராகக் கருதப்பட்டார். இவரது தலைமையின் கீழ் எகிப்து [[சுயஸ் கால்வாய்|சூயெசுக் கால்வாயை]] நாட்டுடைமை ஆக்கியதுடன், அரபு உலகிலும், ஆப்பிரிக்காவிலும் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் முக்கியமான பங்களிப்பையும் செய்தது. [[சூயெசு நெருக்கடி]] முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபோது அரபு உலகம் முழுவதிலும் நாசிர் ஒரு வீரராகக் கருதப்பட்டார். அனைத்துலக [[கூட்டுசேரா இயக்கம்|அணிசேரா இயக்கத்தைத்]] தொடங்குவதில் நாசிரின் பங்கு முக்கியமானது. நாசிர், அவரது தேசியவாதக் கொள்கைக்காகவும், நாசிரியம் என அழைக்கப்பட்ட இவரது வகைப் பேரரேபியவாதத்துக்காகவும் பெரிதும் அறியப்பட்டவர். இவரது இக்கொள்கைக்கு 1950 களிலும், 1960 களிலும், அரபு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு இருந்தது. இசுரேலுடனான [[ஆறு நாள் போர்|ஆறு நாள் போரில்]] அரேபியப் படைகள் தோல்வியடைந்தது, அரபுலகின் தலைவர் என்ற இவரது நிலைக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.<ref>{{cite book | title=How Rivalries End | publisher=University of Pennsylvania Press | author=Rasler, Karen | year=2013 | location=Philadelphia | pages=38–39 | isbn=978-0-8122-4498-4 | author2=Thompson, William R. | author3=Ganguly, Sumit}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜமால்_அப்துல்_நாசிர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது