ஆஷ் துரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி KanagsBOTஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்/விக்கித்தரவு
|fetchwikidata=ALL
| dateformat = dmy
| noicon=on
}}
[[File:VanchiManiyachiJunction.JPG|right|thumb|250px|மணியாச்சி ரயில் நிலையம், தற்போது வாஞ்சிமணியாச்சி என்று பெயரிடப்பட்டுள்ளது]]
'''ராபர்ட் வில்லியம் எஸ்கோர்ட் ஆஷ்''' (''Robert William Escourt Ashe'') ICS (இந்திய நிர்வாகப் பணி) (பிறப்பு [[நவம்பர் 23]], [[1872]] – இறப்பு [[ஜூன் 17]], [[1911]]) [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானிய அரசின்]] கீழ் [[திருநெல்வேலி]] மாவட்டத்தின் தற்காலிக ஆட்சியாளராகவும் நீதிபதியாகவும் இருந்தவர்.<ref>[http://www.s-asian.cam.ac.uk/Handlist_A.htm Ashe papers]</ref><ref name=aurobindo>[http://www.sriaurobindoashram.org/research/show.php?set=doclife&id=25 Documents in the Life of Sri Aurobindo]</ref><ref>[http://www.hinduonnet.com/thehindu/mag/2003/01/26/stories/2003012600160200.htm When Gandhi visited Madras]</ref> திருநெல்வேலிக்கும் [[தூத்துக்குடி]]க்கும் இடையேயுள்ள [[வாஞ்சி மணியாச்சி சந்திப்பு|மணியாச்சி தொடருந்துச் சந்திப்பில்]] சுட்டுக் கொல்லப்பட்டார்.<ref>[http://www.thoothukudi.tn.nic.in/upinfo/tourism/vanchimaniyachi.html Vanchi Maniyachi]</ref> சுட்டவர் [[திருவிதாங்கூர்]] சமத்தானத்தின் [[செங்கோட்டை]]யைச் சேர்ந்த [[வாஞ்சிநாதன்]] என்கிற சங்கர அய்யர். ஆஷைக் கொன்றபின் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். கொலை நடந்தபோது வாஞ்சியுடன் இருந்த சங்கர கிருஷ்ண அய்யர் என்ற இளைஞர் தப்பித்து ஓடிவிட்டார். ஆனால் அவர் சீக்கிரமே பிடிபட்டு தண்டனையளிக்கப்பட்டார்.<ref>[http://www.kalachuvadu.com/issue-118/page12.asp In The Foot Steps Of Ashe]</ref> [[இந்திய விடுதலை இயக்கம்|இந்தியச் சுதந்திரப் போராட்ட]] இயக்கத்தின் போது தென்னிந்தியாவில் [[படுகொலை]] செய்யப்பட்ட பிரித்தானிய ஆட்சியாளர் ஆஷ் ஒருவர் மட்டும்தான். [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானிய அரசு]] 1913ல் [[தூத்துக்குடி]]யில் அவருக்கு ஒரு நினைவுச் சின்னம் எழுப்பியது. இப்பொழுது அந்த நினைவுச் சின்னம் பாழடைந்த நிலையிலுள்ளது.<ref>[http://www.hinduonnet.com/fline/fl2619/stories/20090925261908500.htm An Irish Link]</ref><ref>[http://timesofindia.indiatimes.com/city/chennai/Memorial-to-man-shot-by-Vanchinathan-lies-dilapidated/articleshow/5233611.cms Memorial to man shot by Vanchinathan lies dilapidated]</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஆஷ்_துரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது