புவி மணிநேரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 10:
'''புவி மணி''' (''Earth Hour'') என்பது, [[வீடு]]களிலும், வணிக நிறுவனங்களிலும் உள்ள [[மின் விளக்கு]]களையும், தேவை இல்லாத மின் கருவிகளையும் ஒரு மணி நேரம் நிறுத்தி விடுமாறு கோரும் ஒரு அனைத்துலக நிகழ்வாகும். இது உலகளாவிய இயற்கை நிதியம் நிறுவிய ஆண்டுதோறும் மார்ச்சில் கடைபிடிக்கும் ஆற்றல் வளம் பேணும் நாளாகும். இந்த நிகழ்ச்சி தனியர்களையும் குமுகங்களையும் வணிக அமைப்புகளையும் ஊக்குவித்து மார்ச்சு இறுதியில் ஒருநாளில் ஒருமணி நேரத்துக்கு தேவையற்ற விளக்குகளை இரவு 8:30 மணியில் இருந்து இரவு 9:30 மணி வரையில் புவிக்கோளுக்காக அணைத்துவைக்குமாறு வேண்டும் நாளாகும்.<ref>{{cite web| url=http://www.earthhour.org/about-us |title=About Us |publisher=Earth Hour |accessdate=2014-03-31}}</ref> இது ஆத்திரேலியாவில் சிட்னி நகரில் விளக்கணைப்பு நாளாக 2007 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அதர்குப் பிறகு இது 7,000 நகரங்களிலும் நகரியங்களிலும் 187 நாடுகளிலும் ஆட்சிப் பகுதிகளிலும் கடபிடித்த பெரிய நிகழ்ச்சியாக வளர்ந்தது.<ref>{{cite web|url=http://awsassets.panda.org/downloads/Earth_Hour_Report_2017.pdf|title=Earth Hour 2017 report|author=|first=|date= |website=www.earthhour.org |publisher= |archive-url=|archive-date=|dead-url=|accessdate=}}</ref>
 
அடிக்கடி, புனித சனி மார்ச்சில் கடை வாரத்தில் வரும் ஆண்டுகளில், புவி மணிநேரக் கடைபிடிப்பு வழக்கமான நாளினும் ஒருவாரம் முன்னகர்த்தப்படுகிறது. 2018 ஆம் ஆண்டின் புவி மணி மார்ச்சு 24இல் இரவு 8:30 மணியில் இருந்து இரவு 9:30 மணி வரையில் கடைபிடிக்கப்பட்டது.
 
==வரலாறு==
வரிசை 21:
 
==2008 ஆம் ஆண்டு==
[[File:Earth Hour Sky Tower Auckland.jpg|thumb|நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து வான்கோபுரம் தனது பேரொளிவீச்சு விளக்கைப் புவி மணிநேரத்தில் அணைத்து பிறகு மீண்டு ஏற்றியது. (நடுச் சிவப்பு விளக்குக் காட்சிகள் வானூர்தி எச்சரிக்கை விளக்குகள் ஆகும்) ]]
உலக இயற்கை நிதியத்தின் சார்பில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் கடைசி சனிக்கிழமையன்று கடைபிடிக்கப்படும் புவி மணிநேரம் என்ற நிகழ்ச்சி மார்ச்சு 29ஆம் நாள் சனிக்கிழமை நடைபெற்றது. அன்றைய தினம் ஒரு மணி நேரத்திற்கு (பிற்பகல் 8 மணிக்கும் 9 மணிக்கும் இடையிலான காலப்பகுதி) விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டன. இது [[மின் ஆற்றல் சேமிப்பு|மின் ஆற்றல் சேமிப்பை]] ஊக்குவிப்பதையும், [[கரிமம்|கரிம]] வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது. [[ஒளிசார் மாசடைதல்|ஒளிசார் மாசடைதலைக்]] குறைப்பதற்கும் இது உதவக்கூடும். [[2008]] ஆம் ஆண்டின் புவி மணி, [[ஐக்கிய அமெரிக்கா]]வில் [[தேசிய இருள் வான் வாரம்|தேசிய இருள் வான் வாரத்தின்]] தொடக்கத்துடன் பொருந்தி வந்தது. புவி தட்பவெப்ப மாற்றத்தின் விளைவை மக்களுக்கு உணர்த்தும் வகையில் விழிப்புணர்வுக்காக இந்த நிகழ்ச்சியை உலக இயற்கை நிதியம் நடத்தி வருகிறது. 2008 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 400 நகரங்களில் இந்த புவி மணிநேரம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் 5 கோடி பேர் கலந்து கொண்டனர். உலகப் புகழ் பெற்ற சிட்னி ஓப்பரா மாளிகை, உரோமை நகரின் கொலீசியம், அண்டார்ட்டிகாவின் இசுகாட் நிலையம் ஆகியவற்றில் விளக்குகள் முழுமையாக அணைக்கப்பட்டன.<ref>{{cite news|title=World Cities Shut Lights for Earth Hour 2008|url=http://www.foxnews.com/story/2008/03/29/world-cities-shut-lights-for-earth-hour-2008/|agency=Associated Press|accessdate=February 4, 2014}}</ref>
 
வரிசை 44:
மிகவும் அருமையான விளைவாக நியூசிலாந்து கிறிஸ்து பேராலய நகரில் அதாவது 13% மின்நுகர்வு குறைந்ததாக அறியவந்துள்ளது. என்றாலும்r, தேசிய மின்கட்டமைப்பு இயக்குநர் நியூசிலாந்து நாட்டின் மின்நுகர்வு புவி மணிநேரத்தில் 335 மெகாவாட்டாக, அதாவது முந்தைய இரு சனிக்கிழமைகளின் மின்நுகர்வான 328 மெகாவாட்டை விடக் கூடுதலாக இருத்தாக அறிவித்துள்ளார்.<ref>[http://www.stuff.co.nz/4457620a11.html Lights on, power use up for Earth Hour]. Kelly Andrew. ''The Dominion Post''. Monday, March 31, 2008.</ref> ஆத்திரேலியாவில் மெல்பர்னில் 10.1% மின்நுகர்வும் 2007 இலும் 2008 இலும் புவி மணிநேர நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட சிட்னியில் 8.4% மின்நுகர்வும் குறைந்துள்ளது. என்றாலும் இது முந்தைய ஆண்டின் 10.2% மின்நுகர்வு குறைவை ஒப்பிடும்போது மிகவும் குறைவே; என்றாலும் புவி மணிநேர செயல் இயக்குநர் ஆகிய ஆண்டி இரிடுலே பிழை வரம்புக் காரணியை வைத்து நகரின் பங்களிப்பு அதே அளவில் இருந்தது எனக் கூறுகிறார்.<ref>{{cite news |url=https://www.thestar.com/article/407472 |title= Where do we go from here? |work=Toronto Star |pages=A1, A17 |date= March 31, 2008 |accessdate = 2008-03-31 | first=Peter | last=Gorrie}}</ref>
 
கனடா நாட்டு கால்கரியில் மிக அருகிய விளைவு பெறப்பட்டுள்ளது. நகரின் மின் நுகர்வு உச்ச மின்தேவையில் 3.6% அளவு மிகுந்துள்ளது.<ref>{{cite news|url=http://www.canada.com/globaltv/calgary/story.html?id=1b997ecc-3465-499f-ab5c-913213ba229a&k=48356 |title=Calgary's Earth Hour effort uses more power, not less |publisher=Global Calgary |date=March 30, 2008 |accessdate=2008-03-30 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20090305044146/http://www.canada.com/globaltv/calgary/story.html?id=1b997ecc-3465-499f-ab5c-913213ba229a&k=48356 |archivedate=March 5, 2009 |df= }}</ref> கால்கரியின் மின்நுகர்வு பெரிதும் அந்நகர வானிலையைச் சார்ந்தமைகிறது. நகரில் கடந்த தொடக்க ஆண்டை விட வெப்பநிலை 12°செ ( 22&nbsp;°F) அளவு குறைந்துள்ளது.<ref>{{cite news|url=http://www.canada.com/edmontonjournal/news/cityplus/story.html?id=5f6ba0de-d209-45e6-b568-d1df7772d4b4&k=44185 |title=Edmontonians cut power consumption by 1.5 per cent during Earth Hour |work=Edmonton Journal |date=April 1, 2008 |accessdate=2008-04-07 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20090305053537/http://www2.canada.com/edmontonjournal/news/cityplus/story.html?id=5f6ba0de-d209-45e6-b568-d1df7772d4b4&k=44185 |archivedate=March 5, 2009 |df= }}</ref> என்மேக்சு எனும் நகர மின்வழங்கும் குழுமம் பிந்தைய ஆண்டுகளில் கால்கரிய்ர்கள் புவி மனிநேர முயற்சியை ஆதரிக்கவில்லை எனவும் 2010, 2011 அம் ஆண்டுகளில் மின் நுகர்வி 1% அளவே குறைந்ததாகவும் 2012, 2013 ஆம் ஆண்டுகளில் மின் நுகர்வில் கணிசமான மாற்றம் ஏதும் காணப்படவில்லை எனவும் உறுதிப்படுத்தியுள்ளது.<ref>{{cite web|last=Nolais |first=Jeremy |url=http://metronews.ca/news/calgary/27937/earth-hour-sees-little-change-in-calgary-electricity-use |title=Earth Hour sees little change in Calgary electricity use &#124; Metro |publisher=Metronews.ca |date= |accessdate=2013-09-30}}</ref><ref>{{cite news|url=http://www.cbc.ca/news/canada/calgary/story/2013/03/24/calgary-earth-hour.html |title=CBC News report 24 March 2013 |publisher=Cbc.ca |date=March 24, 2013 |accessdate=2013-09-30}}</ref>
 
===பங்கேற்ற நாடுகளும் ஆட்சிப்பகுதிகளும்===
வரிசை 229:
2013ஆம் ஆண்டு புவி மணிநேர நிகழ்வின் சில சிறப்புக் கூறுகள் இவை:
*உகாண்டா நாட்டில் ஒவ்வொரு மாதமும் 6000 [[எக்டேர்]] காடுகள் அழிந்துவருகின்றன. இந்த அழிவைத் தடுக்க முதல் முயற்சியாக புவி மணிநேரம் உகாண்டாவில் நிகழ்ந்தது. சீரழிந்துள்ள சுமார் 2700 எக்டேர் நிலங்களில் தனிமனிதர், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலர்கள் 2013ஆம் ஆண்டில் குறைந்தது 500,000 மரங்கள் நட வேண்டும் என்று உகாண்டா [[இயற்கைக்கான உலகளாவிய நிதியம்]] திட்டம் வகுத்துச் செயல்படுத்தத் தொடங்கியது. "நீ செய்தால் நானும் செய்வேன்" (''I will if you will'') என்னும் விருதுவாக்கு இதற்கு செயலூக்கம் அளித்தது. ஓர் உகாண்டா வங்கி 250,000 மரங்கள் நடுவதாக உறுதியளித்தது.<ref>http://www.earthhour.org/uganda2013</ref>
 
*போட்சுவானா நாட்டின் முன்னாள் அதிபர் ஃபெஸ்டல் மோகே (Festus Mogae) என்பவர் நான்கு ஆண்டுக் காலத்தில் ஒரு மில்லியன் மரங்கள் நடப்போவதாக வாக்களித்தார்.<ref>http://www.earthhour.org/blog/botswana-plant-one-million-trees-restore-forests</ref>
*"நீ செய்தால் நானும் செய்வேன்" (இந்தோனேசிய மொழியில் ''Ini Aksiku! Mana Aksimu?'') என்னும் விருதுவாக்கைப் பின்பற்றி இந்தோனேசியா [[டுவிட்டர்]] ஊடகத்தைப் பயன்படுத்தி மக்கள் புவி மணிநேரத்துக்குப் பிறகும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபட ஊக்குவித்தது.
*சுற்றுச்சூழல் பேணலில் அனைவரும் ஈடுபட வேண்டும் என்பதை ஊக்குவிக்க "நீ செய்தால் நானும் செய்வேன்" பரப்புரை 50 நாடுகளுக்கு மேலாக இதில் பங்கேற்க வழிகோலியது.<ref>http://www.news24.com/Green/News/Earth-Hour-spreads-20130227</ref>
 
*புவி மணிநேரத்தின் தலைவரும் இணைநிறுவுனருமான ஆண்டி ரிட்லீ (''Andy Ridley'') என்பவர் பின்வருமாறு கூறினார்:
{{cquote|புவி மணிநேரம் என்னும் முனைப்பாட்டின் உயிர்மூச்சாக இருப்பவர்கள் உலகம் எங்கும் பரவியுள்ள சாதாரண மக்களே. அவர்கள் வெவ்வேறு நிலைகளைச் சார்ந்தவர்கள். புவி மணிநேரம் உலகளாவிய ஒரு முயற்சி. அடைய வேண்டிய குறிக்கோளில் ஆழ்ந்த பிடிப்பு இருந்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உலக மக்கள் ஒவ்வொரு நாளும் எண்பித்துவருகிறார்கள். அனைவரும் ஒத்துழைத்தால் அதிசய செயல்களை நிகழ்த்த முடியும் என்பதை அவர்கள் காட்டியுள்ளார்கள்.}}<ref>http://earthhour.org/global-launch-2013</ref><ref>[http://www.thehindu.com/news/cities/Delhi/delhi-joins-the-world-to-celebrate-earth-hour/article4543938.ece இந்தியாவில் புவி மணிநேரம்]</ref><ref>[http://www.bbc.co.uk/news/world-21913931 படங்கள்]</ref>
"https://ta.wikipedia.org/wiki/புவி_மணிநேரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது