மூச்சுத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
[[படிமம்:Respiratory system complete no labels.svg|thumb|right|300px|மனித மூச்சியக்கத் (சுவாசத்) தொகுதியின் அமைப்பு.]]
பல்கல உயிரினங்களில், '''மூச்சுத் தொகுதி''' அல்லது '''மூச்சியக்கத் தொகுதி''' அல்லது '''சுவாசத் தொகுதி''' (respiratory system) என்பது உடற் செயற்பாடுகளுக்குத் தேவையான [[வளிமம்|வளிமங்களை]] உள்ளிழுத்து, [[வளிமப் பரிமாற்றம்|வளிமப் பரிமாற்றத்திற்கு]] உதவி, தேவையற்ற வளிமத்தை (காபனீரொக்சைட்டை) வெளியேற்றும் பணியைச் செய்யும் ஒரு [[உடற்கூற்றியல்]] தொகுதியாகும். தனிக்கல உயிரினங்களில் மூச்சுத் தொகுதி காணப்படுவதில்லை. அவற்றில் நேரடி பரவல் மூலம் வாயுக்கள் பரிமாற்றப்படுகின்றன ([[கலச் சுவாசம்]])<ref name="Farabee">{{cite web | url=https://www2.estrellamountain.edu/faculty/farabee/biobk/BioBookRESPSYS.html | title=THE RESPIRATORY SYSTEM | publisher=M.J. Farabee | accessdate=14 மே 2017}}</ref>. சிறிய பல்கல உயிரினங்களிலும் மேற்பரப்பு:கனவளவு வீதம் அதிகமாக இருப்பதால் வாயுக்கள் உடற்கலங்களுடன் நேரடியாகப் பரிமாற்றப்படுகின்றன. அவ்வாறான சிறிய பல்கல விலங்குகள் அதற்கேற்ப தட்டையான அல்லது உருளை வடிவிலான உடலமைப்பைக் கொண்டிருக்கும்<ref name="Farabee"/>. <br />
எனினும் பெரிய பல்கல உயிரினங்களில் உடலின் உட்பகுதியிலிருக்கும் கலங்களில் நேரடி வாயுப்பரிமாற்றம் நடைபெற முடியாது. இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காகவே மூச்சுத்தொகுதி பல்கல உயிரினங்களில் கூர்ப்படைந்துள்ளது. மூச்சுத்தொகுதியால் [[உள்மூச்சு]] மூலம் [[ஒக்சிசன்]] வீதம் அதிகமுள்ள வளிமம் உள்ளெடுக்கப்பட்டு, [[வெளிமூச்சு]] மூலம் [[காபனீரொக்சைட்டு]] வீதம் அதிகமுள்ள வளிமம் வெளியிடப்படுகின்றது. பயன்படும் வளிமங்கள், தொகுதியின் உடற்கூறு அல்லது அமைப்பு, வழங்கப்படும் வளிமங்களின் பயன்பாடு என்பன [[உயிரினம்|உயிரினங்களைப்]] பொறுத்து வேறுபடுகின்றன. [[பூச்சி]]கள் போன்ற உயிரினங்களில் மூச்சுத் தொகுதி மிகவும் எளிமையான உடற்கூற்றியல் அமைப்பைக் கொண்டனவாக உள்ளன. [[நிலநீர் வாழிகள்|ஈரூடகவாழி]]களில், அவற்றின் [[தோல்|தோலும்]] கூட வளிம மாற்றீட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. <ref name="Net Industries">{{cite web | url=http://science.jrank.org/pages/5848/Respiratory-System.html | title=Respiratory System - Respiration In Insects, Respiratory System Of Fish, Respiration In Terrestrial Vertebrates, Human Respiratory System - Respiration in the earthworm Read more: Respiratory System - Respiration In Insects, Respiratory System Of Fish, Respiration In Terrestrial Vertebrates, Human Respiratory System - Respiration in the earthworm - JRank Articles http://science.jrank.org/pages/5848/Respiratory-System.html#ixzz4h3PQH8aq | publisher=Net Industries and its Licensors | accessdate=14 மே 2017}}</ref>. [[மனிதர்|மனிதர்களிலும்]], பிற [[பாலூட்டி]]களிலும் மூச்சுத் தொகுதியின் உடற்கூற்று அம்சங்களாக [[மூக்கு]] அல்லது [[வாய்]], [[தொண்டை]], [[மூச்சுக் குழாய்]]கள், [[நுரையீரல்]], மூச்சியக்கத் [[தசை]]நார்கள் என்பன காணப்படுகின்றன. [[ஆக்சிசன்]] மூலக்கூறுகளும், [[காபனீரொட்சைட்டு]] மூலக்கூறுகளும் [[பரவல்]] மூலம், வெளிச் சூழலுக்கும், [[குருதி]]க்கும் இடையே மாற்றீடு செய்துகொள்ளப் படுகின்றன. இம் மாற்றீடு நுரையீரலின் நுண்குழியப் பகுதியில் நடைபெறுகின்றது<ref name="WebMD">{{cite web | url=http://www.webmd.com/lung/how-we-breathe | title=How the Lungs and Respiratory System Work | publisher=WebMD | accessdate=14 மே 2017}}</ref>.
 
[[தாவரம்|தாவரங்களிலும்]] மூச்சியக்கத் தொகுதி உள்ளது. இவற்றில் ஒரு பகுதியிலிருந்து வேறொரு பகுதிக்கு வளிமம் மிக அரிதாகவே எடுத்துச் செல்லப்படு. வளிமப் பரிமாற்றம் தாவரத்தின் வேர், தண்டு, இலைகள் என வெவ்வேறு பகுதிகளிலும் தனியாகவே நடைபெறும். தாவரங்களின் மூச்சுத் தொகுதியின் முக்கியமான உடற்கூற்று அம்சமாக [[இலை]]களின் கீழ்ப் பகுதியில் அமைந்துள்ள நுண்துளைகள் உள்ளன. வேர்கள் தமது ஆற்றலுக்குத் தேவையான வளிமப் பரிமாற்றத்திற்கு மண் இடைவெளிகளிலுள்ள வளிமத்தை வளிமப்பரிமாற்றம் மூலம் பெற்றுக் கொள்ளும்.<ref name="byjus">{{cite web | url=http://byjus.com/biology/plant-respiration/ | title=Respiration In Plants: Do Plants Breathe? | publisher=byju's | accessdate=14 மே 2017}}</ref>
வரிசை 26:
====மீன்களின் பூக்கள்====
[[File:Carp gill defect.jpg|thumb|மீனின் செவுள்பகுதி]]
மீன்கள் பூக்கள் அல்லது [[செவுள்]] (இந்திய வழக்கு) மூலம் சுவாசிக்கின்றன. பூக்களைப் பயன்படுத்தி நீரில் கரைந்துள்ள ஒக்சிசன் வாயு வடித்தெடுக்கப்பட்டு குருதியிலுள்ள செங்குருதிக் கலங்களுக்கு மாற்றப்படும். மீன்களின் பூக்களில் நீர்ச் சுற்றோட்டமும் குருதிச் சுற்றோட்டமும் எதிர்ச் சமாந்திரமாகக் காணப்படுவதால் வாயுப் பரிமாற்றத்தின் வினைத்திறன் அதிகமாக உள்ளது. பூக்களுக்குள் உள்ளெடுக்கப்படும் நீரில் கரைந்துள்ள ஒக்சிசனில் கிட்டத்தட்ட 85% ஆனது குருதிக்குள் மாற்றப்படுவது மீன்களின் பூக்களின் அதிக வினைத்திறனை எடுத்துக்காட்டுகின்றது.
 
====முலையூட்டிகளின் மூச்சுத்தொகுதி====
வரிசை 40:
 
=====கட்டுப்பாடு=====
[[File:Illu_conducting_passages-ta.svg|thumb|right|]]
சுவாசச் செயன்முறை [[நீள்வளைய மையவிழையம்|நீள்வளைய மையவிழையத்தாலும்]], வரோலியின் பாலத்தாலும் கட்டுப்படுத்தப்படுகின்றது. இது தன்னாட்சி நரம்புத்தொகுதியின் ஒரு பகுதியாகும். சிறிது நேரத்துக்கு இச்சையுடன் சுவாசத்தைக் கட்டுப்படுத்த இயலுமாயினும் அனேகமான நேரங்களில் நீள்வளைய மையவிழையத்தால் சுவாசம் எம் இச்சையில்லாமலேயே சுவாசம் கட்டுப்படுத்தப்படும். நரம்புத் தொகுதியின் நீள்வளைய மையவிழையத்துக்குப் பாதிப்பு ஏற்படுமாயின் சுவாசம் நிறுத்தப்பட்டு இறப்பு நேரிடும். குருதியில் காபனீரொக்சைட்டின் செறிவுத் தளம்பலுக்கு ஏற்றபடி சுவாசச் செயன்முறை கட்டுப்படுத்தப்படும். குருதியில் காபனீரொக்சைட்டின் செறிவு அதிகமானால் (உதாரணமாக அதிக உடற்பயிற்சியின் போது) அது தொகுதிப் பெருநாடி (குருதியின் pH மாற்றத்துக்கு உணர்திறன் உள்ளது) மற்றும் நீள்வளைய மையவிழையத்திலுள்ள (மூளைய முன்னாண் பாய்பொருளில் ஏற்படும் pH மாற்றத்துக்கு உணர்திறன் உள்ளது) இரசாயன உணரிகளால் உணரப்பட்டு நீள்வளைய மையவிழையத்துக்குத் தகவல் அனுப்பப்படும். நீள்வளைய மையவிழையம் நுரையீரலைத் தூண்டி அதிக தடவை சுவாசிக்கச் செய்யும். எனவே தான் வேகமாக ஓடுதல் போன்ற உடற்பயிற்சியின் போது அதிகம் சுவாசிக்கின்றோம்.
நீள்வளைய மையவிழையத்தில் pneumotaxic center, மற்றும் apneutic centre எனும் இரு நரம்புப் பிரதேசங்கள் முறையே உட்சுவாசத்தை நிரோதிப்பதிலும், உட்சுவாசத்தத்தைத் தூண்டுவதிலும் ஈடுபடுகின்றன. இவற்றில் நியூமோடாக்சிக் பிரதேசம் நேரடியாக வரோலியின் பாலத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. நுரையீரலின் சுவாசப்பைச் சிறுகுழாய்களிலும் ஈர்த்த வாங்கிகள் (stretch receptors) உள்ளன. அதிகளவில் வளி நுரையீரலுக்குள் உள்ளெடுக்கப்படும் போது இவை உட்சுவாசத்தை வரோலியின் பாலத்தினூடாக நியூமோடாக்சிக் பிரதேசத்தைத் தூண்டுவதால் நிரோதிக்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/மூச்சுத்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது