புறவணியிழையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 20:
 
[[படிமம்:Illu epithelium-ta.svg|thumb|350px|புறவணியிழையத்தின் வகைகள்.]]
'''புறவணியிழையம்''' (Epithelium) அல்லது '''மேலணியிழையம்''' என்பது [[விலங்கு|விலங்கினங்களில்]] காணப்படும் நான்கு வகை அடிப்படை [[இழையம்|இழைய]] வகைகளில் [[இணைப்பிழையம்]], [[தசை|தசை இழையம்]], [[நரம்பிழையம்]] ஆகியவற்றுடன் நான்காவதாகும். புறவணியிழையங்கள் உடலின் குழிகள் அல்லது பொந்துகளைச் சுற்றியும், புறச் சூழலுடன் தொடர்புடையதாகவும், அனைத்து உள், வெளி [[டல் உறுப்புக்கள்|உறுப்புக்களையும்]] மூடியும் இருக்கும். மேலும் பல [[சுரப்பி]]கள் இவற்றால் ஆனவையே. புறவணியிழையங்களின் செயற்பாடுகள் சுரத்தல், தேர்ந்தெடுத்த உறிஞ்சல், பாதுகாப்பு, [[உயிரணு]]க்களிடையேயான போக்குவரத்து மற்றும் தொடு உணர்ச்சி என்பன ஆகும். [[கிரேக்க மொழி|கிரேக்கத்தில்]] "எபி" என்பது , "புற, மேல்," எனவும் "தீலி" என்பது "இழையம்" எனவும் பொருள்படுமாதலால் இதனை மருத்துத் துறையில் ''எப்பித்தீலியம்'' எனக் குறிப்பிடுகின்றனர்.
 
[[தோலிழையம்]] (Epidermis) என்பது உடலின் வெளிப்புறம் உள்ள [[தோல்|தோலாக]] அமைகின்ற சிறப்பு புறவணியிழையங்களாகும்.
 
புறவணியிழையங்கள், இணைப்பிழையங்களின் மீது ஒன்றன்மேல் ஒன்றாக அமையும்போது இரண்டுக்குமிடையே அடிமென்சவ்வு என அழைக்கப்படும் ஒரு படை இருந்து இரு வகை இழையங்களையும் பிரிக்கின்றது. இந்த சவ்வுகளில் மிக நெருக்கமாக கூட்டமான உயிரணுக்கள் [[இறுக்கச் சந்திப்பு]]களுடன் [[உயிரணுப் பிணை|டெஸ்மோசோம்]]களால் பிணையப்பட்டுள்ளன. புறவணியிழையங்கள் [[குருதிக் கலன்கள்]] அற்றவை. எனவே அவற்றிற்கான [[ஊட்டச்சத்து|சத்துக்களை]] கீழேயுள்ள இணைப்பிழையங்கள் மூலமாக [[பரவல்]] முறையில் பெறுகின்றன.<ref name="urlBlue Histology">{{cite web |url=http://www.lab.anhb.uwa.edu.au/mb140/ |title=Blue Histology |format= |work= |accessdate=2008-12-12}}</ref> இந்த இழையங்கள் சில இடங்களில் கூட்டமாக அமைக்கப்பட்டு [[புறச்சுரப்பி]]களாகவும் (Exocrine glands), [[நாளமில்லாச் சுரப்பி]]களாகவும் (Endocrine glands) செயல்படும். இவ்வகைச் சுரப்பிகள் குருதிக் கலன்களைக் கொண்டிருக்கும்.
வரிசை 46:
===அடித்தள மென்சவ்வு===
 
மேலணியிழையம் அடித்தள மென்சவ்வுக்கு மேல் அடுக்கப்பட்டதாக இருக்கும். மேலணியிழையத்தின் அனைத்து கலங்களும் அடித்தள மென்சவ்வுடன் தொடர்புபட்டிருப்பின் அது எளிய மேலணியிழையமாகும். மேலணியிழையத்தின் அடியிலுள்ள மேலணிக் கலங்கள் மாத்திரம் அடித்தள மென்சவ்வுடன் தொடர்புபட்டிருப்பின் அவ்விழையம் சிக்கலான மேலணியிழையமாகும். அடித்தள மென்சவ்வு [[தொடுப்பிழையம்|தொடுப்பிழையத்தாலான]] ஒரு மென்சவ்வு ஆகும். மேலணியிழையத்துக்குள் குருதிக் கலன்கள் ஊடுருவாததால் இந்த அடித்தள மென்சவ்வூடாகவே மேலணியிழையத்துக்குப் பதார்த்தப் பரிமாற்றல் நடைபெறுகின்றது.
 
===கலக்கட்டமைப்பு===
 
மேலணியிழையக் கலங்கள் இழையுருப்பிரிவடையும் ஆற்றலைத் தக்க வைத்துள்ள கலங்களாகும். தூண்டப்படும் போது பிரிவடையலாம். உதாரணமாக தோலில் உள்ள மேலணியிழையத்தின் அடியிலுள்ள கலங்கள் தொடர்ந்து இரட்டிப்படையும் கலங்களாகும். சுயாதீன மேற்பரப்பில் உராய்வினால் கலங்கள் (மேற்பரப்பில் கலங்கள் இறந்துவிட்டதால், வலி தெரியாது) இழக்கப்பட கீழிருந்து மேலாக கலங்கள் ஈடு செய்யப்படுகின்றன. சில கலங்கள் முதிர்ந்த நிலையில் இறந்து விடுவதுடன், அவற்றின் குழியவுரு [[நகமியம்|கெராட்டின்]] புரதத்தால் பிரதியீடு செய்யப்படுகின்றது. கெராட்டினேற்றப்பட்ட இறந்த கலங்கள் தோலின் மேற்பரப்பை ஆக்குகின்றன. வாய்க்குழியின் அகவணியில் கெராட்டின் ஏற்றப்படாத கலங்கள் உள்ளன. பொதுவாக மேலணியிழையக் கலங்களிடையில் பல [[கலச்சந்தி]]கள் உள்ளன. இக்கலச்சந்திகள் மேலணியிழையத்தை ஒரு தனிப்படையாகத் தொழிற்பட உதவுகின்றன.
 
===உற்பத்தி===
"https://ta.wikipedia.org/wiki/புறவணியிழையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது