அவகாதரோ மாறிலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit |
|||
வரிசை 11:
'''அவகாதரோ மாறிலி''' (''Avogadro constant'') அல்லது '''அவகாதரோ எண்''' (''Avogadro's Number'', '''அவோகாட்ரோ எண்''') என்பது [[வேதியியல்]] கணக்கீடுகளில் பயன்படுத்தப்படும் ஒரு [[மாறிலி]] ஆகும். இது ஒரு மிகப்பெரிய எண். ஒரு [[மோல்]] அளவு உள்ள எந்தப் பொருளாக இருந்தாலும் அதில் உள்ள [[மூலக்கூறுகள்]] அல்லது [[அணு|அணுக்கள்]] அல்லது அயனிகள் இவற்றின் மொத்த எண்ணிக்கையே ''அவகாதரோ எண்'' என்பதாகும். இதனைக் கண்டறிந்தவர் [[அமேடியோ அவகாதரோ]].<ref>சி. சண்முகம், அறிவியல் ஒளி, ஆகஸ்ட் 2010 இதழ்</ref>
சுருங்கக் கூறினால், அவகாதரோ எண் என்பது துல்லியமாக 12 கி கார்பன்-12 என்னும் பொருளில் காணும் அணுக்களின் மொத்த எண்ணிக்கை ஆகும்.
ஒரு [[மோல்]] அளவுள்ள எந்தப் பொருளாக இருந்தாலும் அதில் உள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கை எப்போதுமே {{gaps|6.022|14X|×|10<sup>23</sup>}} ஆகும். சுருக்கமாகக் கணித வடிவில் குறிப்பிடும் இவ்வெண்ணின் உண்மையான வடிவம். 602 300 000 000 000 000 000 000 என்று வரும் . எடுத்துக்காட்டாக ஒரு மோல் அளவாகிய 18 கிராம் [[நீர்]], 180 கிராம் [[குளுக்கோசு]], 44 கிராம் [[கார்பன்-டை-ஆக்சைடு]], 32 கிராம் [[ஆக்சிசன்]], இரண்டே இரண்டு கிராம் [[ஐதரசன்]] மூலக்கூறு, இப்படி அவ்வப் பொருள்களில் உள்ள மூலக்கூறுகளை எண்ணிப் பார்த்தால் ஒரே எண்ணிக்கைதான் கிடைக்கும். அதுதான் '''அவகாதரோ எண்''' ஆகும்.
|