64 இருமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
'''64 இருமம்''' (64bit) / 64 பிட் என்பது [[கணினி கட்டுமானம்|கணினி கட்டுமானத்தின்]] வரையறைப்படி, கணனியின் மின்னணுப் பாகமான செயலியின் திறனையும், இயல்பையும் குறிக்கிறது. அச்செயலியின் தரவுப்பாதையின் அகலத்தை, இது தெரிவிக்கிறது. 64 இலக்க இருமங்களை அடிப்படையாகக் கொண்டு, நினைவகங்களையும், தரவுகளையும் கொண்டுள்ள நுண்செயலிகளையும், நுண்கணினியும் இவ்வகையான கட்டுமானத்தில் இயங்கி வருகின்றவை, 64-இருமம் [[கணினி]] எனவும், அதற்கு பயன்படுத்தப்படும் மென்பொருட்களை, 64 - இரும மென்பொருட்கள் எனவும் அழைப்பார்கள். ஒரு கணினியை, நமது இலக்கிற்கு, பயன்பாட்டிற்கு தேர்ந்தெடுக்கும் போதே, அது எத்தகையது என்பதை நாம் அறிந்து கொள்ளல் அவசியம் ஆகும். இந்நோக்கில், கணினி விளையாட்டுகள், நிகழ்படத்தொகுப்பு போன்றவற்றிற்கு, பெரும்பாலும், 64 இரும [[வன்பொருள்|வன்பொருட்களும்]], [[மென்பொருள்|மென்பொருட்களும்]] சிறந்தவையாகத் திகழ்கின்றன. [[உரைக்கோப்பு]] போன்ற எளிய மேலாண்மைக்கு, [[32 இருமம்|32 இரும]] கணினிகளே போதுமானது.
 
== கண்டறிதல் ==
 
ஒரு [[கணினி]] நன்கு செயற்பட அதன் வன்பொருள், அந்த வன்பொருளுக்கு ஏற்ற சரியான இருமம் கொண்ட மென்பொருள் என்ற இரண்டுமே மிகவும் முக்கியமானது ஆகும். இவை (32 இருமம்/64 இருமம்) பற்றிய குறிப்புகளை, நமது கணினியிலேயும், அதன் மென்பொருளிலேயும், நாம் அறிந்து கொள்ளும் வகையில், அதனுள்ளேயேத் தெரியப்படுத்தப்பட்டுள்ளன. இவை குறித்த விவரங்களை, உரிய இணையப்பக்கத்திலும் காண இயலும். <ref>[https://support.microsoft.com/en-us/help/15056/windows-7-32-64-bit-faq வின்டோசு 7 இயக்குதளத்தில் அறியும் முறை]</ref> 64 இரும வகை வன்பொருள் திறன் கொண்ட கணினியில், 32 இரும வகை [[இயக்குதளம்|இயக்குதளத்தை]] நிறுவிப் பயன்படுத்தலாம். ஆனால், 32 இரும வகை வன்பொருள் திறன் கொண்ட, ஒரு கணினியில் 64 இரும வகை இயக்குதளத்தை நிறுவி பயன்படுத்த முடியாது. ஒரு [[லினக்சு]] வகை இயக்குதளத்தை உருவாக்கும் போதே, இருவகையான இரும வகைக்கும் ஏற்றவகையில், தனித்தனியே உருவாக்கித் தரப்படுகிறது. நமது வன்பொருள் திறனுக்கு ஏற்ப, 32 இருமம் / 64 இருமம் என, இதில் ஏதாவது ஒன்றினைத் தேர்ந்தெடுத்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 
 
கணினிக் கட்டமைப்பில், '''64 இருமக் கணிப்பு''' ''(64-bit computing)'' என்பது 64 இருமங்கள் அல்லது எட்டு எண்மங்கள் அகலம் உள்ள செயலிகளையும் தரவுத்தட அகலங்களையும் நினைவக முகவரியையும் கொண்ட கணினிக் கட்டமைப்பு ஆகும். மையச் செயலகங்களுக்கும் எண்ணியல் ஏரண அலகுகளுக்குமான 64 இருமக் கட்டமைப்பு என்பதில் செயலிப் பதிவகங்கள், முகவரிப் பெருந்தடங்கள், தரவுப் பெருந்தடங்கள் ஆகியவையும் அதே அளவைக் கொண்டிருக்கும். மென்பொருள் கண்ணோட்டத்தின்படி, 64 இருமக் கணிப்பு என்பது மெய்நிகர் நினைவக முகவரிகள் 64 இரும எந்திரக் குறிமுறையைப் பயன்படுத்தும் கணிப்புமுறையைக் குறிக்கிறது. என்றாலும், அனைத்து 64 இரும கட்டளைத் தொகுப்புகள் முழுமையான 64 இரும மெய்நிகர் நினைவக முகவரிகளை ஏற்பதில்லை; x86-64, ARMv8 ஆகியவை எடுத்துகாட்டாக 48 இருமங்கள் உள்ள மெய்நிகர் முகவரிகளையே ஏற்கின்றன; மெய்நிகர் முகவரியின் எஞ்சிய 16 இருமங்கள் அனைத்தும் 0 களாகவோ அல்லது அனைத்தும் 1 களாகவோ அமைகின்றன; பல 64 இருமக் கட்டளைத் தொகுப்புகள் 64 இருமங்களை விட குறைந்த புறநிலை நினைவக முகவரிகளையே ஏற்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/64_இருமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது