ஓசனிச்சிட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
Fixed typo
வரிசை 19:
}}
[[படிமம்:Bee hummingbird (Mellisuga helenae) adult male in flight.jpg|thumb|right|மிகவும் சிறிதான பறவையான [[தேனி ஓசனிச்சிட்டு]].]]
'''ஓசனிச்சிட்டுகள்''' (''Hummingbird'') என்னும் மிகச் சிறிய [[பறவை]]கள் [[இறகு|சிறகடித்துக்கொண்டே]] [[பூ]]வில் இருந்து [[தேன்|தேனை]] உறிஞ்சி உண்டு வாழ்பவை. இவ்வினப் பறவைகள் வட, தென் [[அமெரிக்கா|அமெரிக்கக்]] கண்டங்களில் மட்டுமே காணப்படுகின்றன. இப்பேரினத்தில் 320 வகையான ஓசனிச்சிட்டு (சுரும்புச்சிட்டு) வகைகள் உள்ளன. <ref>In Encyclopædia Britannica. Retrieved March 14, 2008, from Encyclopædia Britannica Online: http://www.search.eb.com/eb/article-9041505</ref>. உலகில் உள்ள பறவைகள் யாவற்றினும் மிகமிகச் சிறிய பறவையாகிய [[தேனி ஓசனிச்சிட்டு]] இவ்வினத்தைச் சேர்ந்த பறவை ஆகும். [[கியூபா]]வில் வாழும் இப்பறவை 5 செ.மீ நீளமே கொண்டுள்ளது, எடையும் 1.8 [[கிராம்]] மட்டுமே. ஓசனிச்சிட்டுகளின் அறிவியல் பெயர் '''டிரோச்சிலிடீ''' (Trochilidae). ''டிரோச்சிலசு'' (trochilus, τροχιλός) என்னும் [[கிரேக்க மொழி]]ச்சொல் ''ஓடு'' (விரைந்தோடு) என்னும் பொருள் கொண்டது; இதிலிருந்து இச்சொல் ஆக்கப்பட்டது. இதனைத் தமிழில் ''சடுதிப்புள்'' துணைக்குடும்பம் என்று தமிழில் வழங்குகின்றோம். தமிழில் ஓசனிச்சிட்டை ''முரல்சிட்டு, ஞிமிர்சிட்டு, சுரும்புச்சிட்டு மற்றும் ரீங்கார சிட்டு'' என்றும் அழைக்கிறார்கள். இப்பறவையின் இதயம் நிமிடத்திற்க்குநிமிடத்திற்கு 1260 முறை துடிக்கிறது. <ref>[http://tamil.thehindu.com/society/kids/%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF/article9157757.ece| லப்டப் சொல்லும் சேதி!] தி இந்து தமிழ் 28 செப்டம்பர் 2016</ref>
 
இப்பறவைகளின் புகழ்பெற்ற சிறப்பியல்புகளின் ஒன்று, இது அந்தரத்தில் பறந்துகொண்டே பூவில் இருந்து [[தேன்]] உண்ணுவது. இதன் [[இறகு|இறக்கைகள்]] [[நொடி]]க்கு 60-80 தடவை மிகமிக வேகமாக அடிப்பதால் "உசுஉசு " என்று எழும் [[ஒலி]]யால் இதற்கு ஓசனிச்சிட்டு என்று பெயர். ஓசனித்தல் என்றால் பறவைகளின் இறக்கைகள் விரைந்து அடிக்கும் பொழுது எழும் ஒலி என்று பொருள்<ref>கழகத் தமிழ் அகராதி. ஓசனித்தல் = பறவை சிறகடித்தல்</ref>. அந்தரத்தில் ஓரிடத்திலேயே பறந்துகொண்டே நிற்பது மட்டுமல்லாமல் இது பறந்துகொண்டே ''பின்னோக்கியும்'' நகரவல்லது; நெட்டாக, நேர் செங்குத்தாக, மேலெழுந்து பறந்து நகரவும் வல்லது. ஓசனிச்சிட்டுகள் அந்தரத்தில் ஓரிடத்திலேயே நின்று பறப்பதற்கு ''ஞாற்சி''<ref>ஞாற்சி அல்லது நாற்சி < ஞாலுதல் = தொங்குதல்.</ref> (அல்லது ''நாற்சி'') என்று பெயர். இப்பறவைகளின் உணவில் பூந்தேனும் சிறு பூச்சிகளும் முக்கியமானவை. உடல் வளர்ச்சிக்குத்தேவையான [[புரதம்|புரதச் சத்து]] பூச்சிகளை உண்பதால் பெறுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/ஓசனிச்சிட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது