கணுக்காலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பிழைதிருத்தம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 69:
 
# '''திரில்லோபைட்டுக்கள்''': பேர்மியன் காலத்து உயிரினங்கள்; தற்போது அழிவடைந்துள்ளன.
# '''செலிசரேட்டா''': சிலந்தி, தேள், உண்ணி போன்ற வகுப்பு அரக்னிடா அங்கிகளை உள்ளடக்கியது. இவற்றின் வாயிற்குவாய்க்கு அருகில் கொடுக்குக் கொம்பு (செலிசரேட்) எனும் தூக்கம் இருக்கும். இவற்றின் உடல் தலை, முன்மூர்த்தம், பின்மூர்த்தம் என மூன்று தக்குமாக்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும். இதில் முன்மூர்த்தத்தில் 4 சோடிக் கால்கள் காணப்படும். இவற்றில் உணர்கொம்புகள் காணப்படுவதில்லை. சுவாசம் ஏட்டு நுரையீரல் மூலம் மேற்கொள்ளப்படும். கழிவகற்றல் மல்பீசியன் சிறுகுழாய்கள் மூலம் நிகழும். இவற்றில் கழிவுப் பொருளாக யூரிக் அமிலம் வெளியேற்றப்படும். அனேகமானவை ஊனுண்ணிகளாகவும் சில ஒட்டுண்ணிகளாகவும் உள்ளன. இவற்றில் முன்சோடிக் கால்கள் புலனங்கமான உணரடியாகத் திரிபடைந்திருக்கும். அரக்னிட்டுக்களில் எளிய கண்கள் பார்வைக்காக உள்ளன. தேளில் வாலில் நச்சு உகிர் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
# '''[[பலகாலி|மைரியபோடா]]''': மரவட்டை, பூரான் போன்ற உயிரினங்களை உள்ளடக்கியது. இவற்றின் உடல் பல துண்டங்களாலானது. ஒவ்வொரு துண்டமும் ஒரு சோடி அல்லது இரு சோடி தூக்கங்களைக் கொண்டிருக்கும். உதாரணமாக மரவட்டையில் (வகுப்பு டிப்லோபோடா) துண்டத்துக்கு இரு சோடி தூக்கங்களும் (துண்டத்துக்கு 4 கால்கள்), பூரானில் (வகுப்பு கைலோபோடா) துண்டத்துக்கு ஒரு சோடி தூக்கங்களும் காணப்படும். அனைத்திலும் மல்பீசியன் சிறுகுழாய்கள் மூலம் கழிவகற்றல் மேற்கொள்ளப்படும். இவற்றில் ஒரு சோடி உணர்கொம்புகளும், இரு சோடி எளிய கண்களும் புலனங்கங்களாக உள்ளன. வாதனாளித் தொகுதி மூலம் சுவாசம் மேற்கொள்ளப்படும்.
# '''கிரஸ்டேசியன்கள்''': பொதுவாக நீர்வாழ் உயிரினங்கள். நண்டு, இறாள், பர்னக்கிள் மற்றும் மேலும் பலவற்றை உள்ளடக்கிய உபகணம். இவற்றில் புலனங்கங்களாக இரு சோடி உணர்கொம்புகளும், காம்புடைய ஒருசோடி கூட்டுக்கண்களும் உள்ளன. இவற்றில் இரண்டாம் சோடி சிறிய உணர்கொம்பிற்குக் கீழுள்ள பசுஞ்சுரப்பியினால் கழிவகற்றல் மேற்கொள்ளப்படும். அனேகமாக கழிவுப் பொருளாக அமோனியா காணப்படுகின்றது. பூக்கள் மூலம் சுவாசம் மேற்கொள்ளப்படும். நண்டுகளின் புறவன்கூட்டில் கைட்டினுடன் வலுவூட்டுவதற்காக சுண்ணாம்பும் சேர்க்கப்பட்டிருக்கும். இவற்றில் நோபிளியஸ் எனும் குடம்பிப் பருவம் வாழ்க்கை வட்டத்தில் உருவாக்கப்படுகின்றது. இவற்றின் உடலானது தலைநெஞ்சு, வயிறு என இரு தக்குமாக்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/கணுக்காலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது