பெஞ்சமின் புளூம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags, பெஞ்சமின் சாமுவேல் புளும் பக்கத்தை பெஞ்சமின் புளூம் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்
வரிசை 21:
== தொடக்க கால வாழ்க்கை மற்றும் கல்வி ==
இவர் [[பென்சில்வேனியா|பென்சில்வேனியாவிலுள்ள]], லேன்ஸ்போர்டு என்னுமிடத்தில் 12 பிப்ரவரி 1913 ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது பெற்றோர் [[யூதர்|யூதர்களாக]] இருந்த காரணத்தால் [[உருசியா|உருசியாவில்]] பாகுபாட்டிற்கு ஆளாக்கப்பட்டு அதன் காரணமாக இடம் பெயர்ந்தவர்கள் ஆவர். <ref name=":1">{{Cite book|title=Fifty Modern Thinkers on Education: From Piaget to the Present Day|last=Bresler|first=Liora|last2=Cooper|first2=David|last3=Palmer|first3=Joy|publisher=Routledge|year=2002|isbn=041522408X|location=Oxon|pages=86}}</ref> பென்சில்வேனியா மாநிலக் கல்லூரியில் தனது இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டத்தை 1935 ஆம் ஆண்டு பெற்றார். [[சிக்காகோ பல்கலைக்கழகம்|சிக்காகோ பல்கலைக்கழகத்தில்]] 1942 ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்று அங்கேயே கல்வித்துறையில் பயிற்றுவிப்பாளராகவும் தேர்வுத்துறை உறுப்பினராகவும் பணிபுரிந்தார். இவர் 1957-ல் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டு மதிப்பீடு சார்ந்த பணிமனைகள் நடத்தினார். இது இந்தியக் கல்வி முறையில் மாற்றங்களுக்கு வழிவகுத்தது. இவரது கல்விக்கான பங்களிப்பாக கற்றலின் வகைப்பாடு கருதப்படுகிறது.
 
== பணிகள் ==
1956 ஆம் ஆண்டில், புளூம் கல்வியியல் நோக்கங்களின் வகைப்பாடு என்ற நூலின் முதல் தொகுதியை வெளியிட்டார். இந்த நூல் கல்வியில் கற்றல் நோக்கங்களை வகைப்படுத்தியதோடு புளூமின் வகைப்பாடு என்று பரவலாக அறியப்பட்டது. இந்த நூலே மீத்திறம் மிக்க மாணவர்களின் மனச் செயல்பாடுகளுக்கு வடிவம் கொடுத்ததும் அறிதல் திறன் செயல்பாடுகளை வகைப்படுத்திய முதல் அமைப்புமாகும். <ref>{{Cite book|title=Profiles of Influence in Gifted Education: Historical Perspectives and Future Directions|last=Karnes|first=Frances|last2=Nugent|first2=Stephanie|publisher=Prufrock Press Inc.|year=2004|isbn=1882664973|location=Waco, TX|pages=18}}</ref> இந்த நூல் கல்விச் சமுதாயத்திற்கு அடிப்படையானதும், அவசியமானதுமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அரால்டு ஜி சான் மற்றும் 1994 கல்வியியல் கல்விக்கான தேசியக் கழகத்தின் 1994 ஆம் ஆண்டு ஆண்டு மலர் ஆகியவை இணைந்து "1906–81 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கலைத்திட்டத்தில் தாக்கம் ஏற்படுத்திய முக்கியத்துவம் வாய்ந்த எழுத்துகள்" என்ற தலைப்பிலான கருத்துக் கணிப்பில் மேற்கூறப்பட்ட உண்மையானது வெளியானது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பெஞ்சமின்_புளூம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது