ஆர். முத்துராமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 23:
அக்காலத்திய முன்னணி இயக்குனர்களான [[ஸ்ரீதர்]], [[கே. பாலச்சந்தர்]] ஆகியோரின் திரைப்படங்கள் பலவற்றில் இவர் நடித்தார்.
 
== தொடக்க கால வாழ்க்கை ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
 
தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு அருகே ஒக்கநாடு, என்ற கிராமம் முத்துராமனின் சொந்த ஊர் ஆகும். அங்குள்ள பள்ளியில்தான் 5ஆம் வகுப்பு வரை படித்திருக்கிறார். முத்துராமனுக்கு பூர்வீகத்தில் 6 ஏக்கர் நன்செய் நிலமும், ஒரு வீடும் சொந்தமாக இருந்திருக்கிறது. முத்தராமனுடைய தந்தையார் ஒரு வழக்கறிஞர். இவருடைய மாமா ஒரு காவல் துறை அதிகாரி. குடும்பத்தில் யாருக்கும் நாடக அல்லது திரைத்தொழிலில் தொடர்பு கிடையாது. இருப்பினும் முத்துராமனுக்கு நுண்கலை மற்றும் திரைத்துறையில் ஆர்வம் இருந்திருக்கிறது. முத்துராமன் தனது குடும்பத்தின் வற்புறுத்தலின் பேரில் முதலில் ஒரு அரசு ஊழியராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கியிருக்கிறார். மிகவும் தாமதமாகவே அவர் திரைத்துறைக்கு வந்திருக்கிறார்.

== திரையுலக வாழ்க்கை==
முன்னணிக் கதாநாயகனாக பல படங்களில் நடித்தபோதும், தன்னை முன்னிறுத்தாத, கதாநாயகியை முன்னிறுத்தும் பல படங்களில் ([[கே. ஆர். விஜயா]], [[சுஜாதா (நடிகை)|சுஜாதா]] ஆகியோருடன்) நடித்துள்ளார். மேலும், அப்போதைய முன்னணி நட்சத்திரங்களாக இருந்த [[எம்.ஜி.ஆர்]] ('என் அண்ணன்', 'கண்ணன் என் காதலன்' போன்றவை) மற்றும் [[சிவாஜி கணேசன்]] ('[[பார் மகளே பார்]]', '[[நெஞ்சிருக்கும் வரை]]', '[[சிவந்த மண்]]' போன்றவை) ஆகியோருடன் பல திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். தனது காலத்தில் அல்லது தனக்குப்பின் அறிமுகமான ஜெய்சங்கர் ([[கனிமுத்துப் பாப்பா]]), ரவிச்சந்திரன் ('[[காதலிக்க நேரமில்லை]]') ஏ. வி. எம். ராஜன் ('பதிலுக்குப் பதில்', '[[கொடிமலர்]]') ஆகியோருடன் இரண்டாவது நாயகனாகவும் நடித்துள்ளார். தனது திரைப்படங்கள் பலவற்றிலும் மிகைப்படுத்தாத தன்னம்பிக்கை மிகுந்த நடிப்பிற்காகப் பெயர் பெற்றார்.
 
இவரது இறுதிப்படம் [[ரஜினிகாந்த்]] இரட்டை வேடத்தில் நடித்த போக்கிரி ராஜாவாகும். இதில் வில்லன் வேடம் ஏற்றிருந்த முத்துராமன், ஒரு வெளிப்புறப்படப்பிடிப்பிற்காக [[ஊட்டி]] சென்றிருந்தபோது மாரடைப்பால் காலமானார். அச்சமயமே, இவரது மகனான கார்த்திக் கதாநாயகனாக [[பாரதிராஜா]] வின் புகழ்பெற்ற [[அலைகள் ஓய்வதில்லை]] திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகவாகவிருந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/ஆர்._முத்துராமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது