கரூர் கல்யாணபசுபதீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சொற்பிழை திருத்தம்
No edit summary
வரிசை 78:
 
கோவிலின் தென்மேற்கு மூலையில் பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கரூவூராரின் சன்னிதி உள்ளது. இச்சித்தர் ஆநிலையப்பரோடு ஐக்கியமானதால் கருவறையில் சுயம்புலிங்கமாக உள்ள பெருமான் சற்றே சாய்ந்த நிலையில் உள்ளார்.
 
== கோயிலின் கட்டடக்கலை அம்சங்கள் ==
இக்கோயில் திராவிடக் கட்டடக்கலை அம்சத்தை கொண்டுள்ளது. திராவிடக்கலை என்பது தென்னிந்திய கோயில் கலை பாணியாகும். இக்கோயிலின் அமைப்பு மிகச் சிறப்பானது. கோயிலின் மையப் பகுதியில் அமைந்திருப்பது கருவறையாகும். இப்பகுதி தான் முதன் முதலில் கட்டப்பட்ட பகுதியாகும். இக்கருவறை சதுரவடிவில் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் மேல் விமானம் அமைக்கப்பட்டுள்ளது. அவ்விமானம் வட்டவடிவில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் கலசம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பே ஆரம்பகாலத்தில் கோயில் கட்டும் முறையாக இருந்தது.
 
கருவறையை அடுத்து இருப்பது அா்த்தமண்டபம் ஆகும். இந்த முறை பிற்காலகட்டத்தில் தோன்றியதாக கருதப்படுகிறது. பெரும்பாலும் இந்து கோயில்கள் கருவறை , அதை ஒட்டி அமைந்திருக்கும் அா்த்தமண்டபம் இந்த அமைப்பை கொண்டே கட்டப்பட்டிருக்கின்றன. அா்த்தமண்டபத்தை அடுத்து மகா மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மகாமண்டபங்கள் பிற்காலத்தில் ஏற்படுத்தப்பட்டதாகும். இந்த மண்டபங்கள் அதிகப்படியான கற்றூண்களை கொண்டதாக அமைத்தனா்.
 
கருவறையை சுற்றி பிரகாரம் அமைக்கப்பட்டுள்ளது. இதுவும் பொரும்பாலும் எல்லா இந்து கோயில்களிலும் காணப்படும் அமைப்பாகும். இப்பிரகாரத்தை அடுத்து கோயிலின் இடது, பின், வலது புறங்களில் சுற்றிலும் திண்ணையோடு கூடிய சிறு மண்டபம் போன்ற அமைப்பு காணப்படுகின்றது. இது பெரும்பாலும் பாடசாலையாவோ வேதபாராயணம் செய்யும் இடமாகமவோ இருந்திருக்க வேண்டும்.
 
கருவறையின் தெற்கு புறசுவற்றில் தட்சினாமூா்த்தியும், மேல்புற சுவற்றில் லிங்கோத்பவரும், வடபுற சுவற்றில் பிரம்மாவும் துா்க்காதேவியும் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது. இது சைவ குறிப்பாக சிவன் கோயிலின் கட்டடக்கலைப் பாங்கின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.
 
கருவறையின் தென்புற திண்ணையில் நாயன்மாா்கள் காட்சியளிக்கிறன்றனா். பின்புறத்தில் ஈசான விநாயகா், முருகன், கஜலட்சுமி போன்ற சைவ கோயில் அமைப்பின் அம்சத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.
 
கருறையின் வடபுறத்தில் சண்டிகேசுவரா் அமைக்கப்பட்டுள்ளது. இதுவும் சைவ கோயிலின் அம்சத்தை கொண்டு விளங்குகிறது. இக்கோயில் பெரும்பாலும் கிரானைட் கற்களால் கட்டப்பட்டுள்ளது. அழகிய சிற்பவேளைபாடுகளுடன் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தூண்கள் மற்றும் பிற கட்டடஅமைப்பை உற்று நோக்கும் போது புதிதாக கட்டப்பட்டது என்ற எண்ணம் தோன்றும். மிக புராதனமான இக்கோயில் இத்தனை காலம் எவ்வித பாதிப்பும் இல்லாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை.
 
இக்கோயில் சோழா்காலத்தில் கட்டப்பட்டு சேர, பாண்டியா், கொங்கு சோழா், நாயக்கா் காலங்களில் படிப்படியாக வளா்ந்து பெரிய கோயிலாக உருவாயிருக்க வேண்டும். பிற்காலத்தில் ஏற்பட்ட இஸ்லாமியா் ஆட்சிகாலத்தில் கவனிப்பாரற்று சிதைவடைந்த நிலையை அடைந்திருக்க வேண்டும். எனவே தான் ஆங்கிலேயா் ஆட்சி காலத்தில் கரூரில் வசித்த நாட்டுக்கோட்டை செட்டியாா்கள் 1905 ல் இக்கோயிலை இடித்து கட்டப்பட்டதாக கல்வெட்டு கூறுகிறது. அதன் பிறகு தான் இன்றைய நிலையில் இருக்கும் கோயிலின் அமைப்பை காணமுடிகிறது. ஆக நாட்டுக்கோட்டை செட்டியாா்கள் முடிந்தவரை பழமை மாறாமல் கட்ட நினைத்தாா்கள் போலும். அதனால் தான் இக்கோயில் மிக சமீபத்தில் கட்டியது போன்று புதுப் பொலிவுடன் காட்சி அளிக்கிறது.
 
மகா மண்டபத்தை அடுத்து சுற்று சுவருடன் கூடிய கோபுற நுழைவாயில் அமைப்பப்பட்டுள்ளது. இந்நுழைவாயில் பாண்டியா் கலைப்பாணியில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. அதனைத் தொடாந்து வெறிப்புறம் சுற்றுசுவருடன் கூடிய கோபுறம் காணப்படுகின்றது. இது நாயக்கா் கட்டடக்கலை பாணியை சோ்ந்ததாக கருதப்படுகிறது.
 
இக்கோயில் மிக சமீபத்தில் கட்டப்பட்டது என்பதற்கு இன்னொரு சான்று தற்போது புகழ் சோழா் மண்டபம் என அழைக்கப்படும் மண்டபமாகும். இதை காணும் போது காலப்போக்கினால் ஏற்பட்ட பாதிப்பு நன்கு தெரிகிறது. தூண்கள் மற்றும் கட்டடங்களில் இருக்கும் நோ்த்தி மழுங்கி போயிருப்பதை காணலாம். ஆனால் கோயிலின் தூண்கள் மற்றும் கட்டடங்கள் முனை மழுங்காமல் மிக நோ்த்தியாக இருப்பதையும் அழகுற இருப்பதையும் காணலாம்.
 
இக்கோயில் ஆகம விதிகளின் படியும் வாஸ்த்து சாஸ்த்திரத்தின் படியும் சைவ சிந்தாந்த நெறிப்படியும் கட்டப்பட்டிருப்பது விளங்கும்.
 
== தல வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/கரூர்_கல்யாணபசுபதீசுவரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது