விக்கிப்பீடியா:உசாத்துணைப் பக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 44:
அனைவருக்கும் வணக்கம். கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்துவது சரியா தவறா என்ற வாதம் தமிழ் விக்கிப்பீடியாவில் இன்றுவரை தொடர்ந்துகொண்டே வருகிறது. சரியான ஒலிப்புடன் எழுதுவதற்கு கிரந்தம் தேவை என்பது மறுக்க முடியாத வாதமாகும். தமிழில் கலந்துவிட்ட பிறமொழிச் சொற்களே அதன் தனித்தன்மையை பாதிக்கின்றது. தன்னிடம் இல்லாத ஒரு ஒலியைக் குறிக்க இல்லாத ஒரு எழுத்தைப் பயன்படுத்துவதால் தமிழின் தனித்தன்மைக்கு எவ்வித பாதிப்புமில்லை. ஸ்வீடன், ஸ்காட்லாந்து போன்ற பெயர்களை இசுவீடன், இசுக்காட்லாந்து என்று எழுதுவதால் ஒலிப்புப் பிழை ஏற்படும்.
 
வடமொழி அறிஞர்கள் நூல்களைத் தமிழில் எழுத கிரந்த முறையை அறிமுகப்படுத்தினர். அதில் ஒருசில எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். எனவே கிரந்தம் தமிழை பாதிக்கவில்லை. தமிழக அரசு [[தமிழ் அனையெழுத்துக் குறியேற்றம்|Tamil All Character Encoding (TACE16)]] என்ற குறியேற்றத்தை 2010ஆம் ஆண்டு ஏற்றுக்கொண்டது. எனவே தற்போது ஜ, ஶ, ஸ, ஷ, க்ஷ ஆகிய ஐந்து கிரந்த எழுத்துக்களும் சட்டப்படி தமிழ் எழுத்துக்களில் ஒரு பகுதியாகும்பகுதியாகிவிட்டது. அவற்றைப் பயன்படுத்துவதில் எந்தத் தவறுமில்லை. எனவே இனியும் கிரந்தம் குறித்த தவறான கண்ணோட்டத்தைக் களைந்துவிட்டு தமிழ் விக்கிப்பீடியாவை மேம்படுத்த முயற்சிப்போம். நன்றி. [[பயனர்:GangadharGan26|GangadharGan26]] ([[பயனர் பேச்சு:GangadharGan26|பேச்சு]]) 03:27, 24 செப்டம்பர் 2019 (UTC)