வாருங்கள்!

வாருங்கள், GangadharGan26, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:31, 22 ஏப்ரல் 2016 (UTC)

கவனிக்க

தொகு

தங்களுக்கு இதுவே கடைசி எச்சரிக்கை, இன்னொரு முறை ஒரு பக்கத்தின் தலைப்பை நகர்த்துவதற்கான விதிமுறைகளை பின்பற்றாமல், தலைப்பை நகர்த்தினால், எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர். ஒரு பக்கத்தின் தலைப்பை நகர்த்தனும் என்றால் அப்பக்கத்தின் பேச்சு பக்கத்தில் தெரிவிக்கவும் அல்லது தலைப்பை மாற்றுக என்னும் வார்ப்புருவை கட்டுரையில் சேர்க்கவும், மற்ற பயனருடன் உரையாடல் இன்றி பக்கத்தின் தலைப்பை நகர்த்துவது, விக்கியின் கொள்கைக்கு முரணானது --அருளரசன் (பேச்சு) 04:47, 23 செப்டம்பர் 2019 (UTC)

தலைப்பை மாற்றுக வார்ப்புருவை சேர்த்தால் உடனே நீக்கிவிடுகிறீர்களே! பிறகு எதற்கு இந்த வெற்று அறிவுரை? GangadharGan26 (பேச்சு) 12:33, 25 செப்டம்பர் 2019 (UTC)

September 2019

தொகு

  Hello, GangadharGan26, welcome to Wikipedia and thank you for your contributions. Your editing pattern indicates that you may be using multiple accounts or coordinating editing with people outside Wikipedia. Our policy on multiple accounts usually does not allow this, and users who use multiple accounts may be blocked from editing. If you operate multiple accounts directly or with the help of another person, please disclose these connections. Thank you. AntanO (பேச்சு) 17:15, 23 செப்டம்பர் 2019 (UTC)

  Welcome to Wikipedia and thank you for your contributions. I am glad to see that you are discussing a topic. However, as a general rule, talk pages are for discussion related to improving the article, not general discussion about the topic or unrelated topics. If you have specific questions about certain topics, consider visiting our reference desk and asking them there instead of on article talk pages. Thank you. AntanO (பேச்சு) 02:23, 24 செப்டம்பர் 2019 (UTC)

 
உங்களுடைய பயனர் கணக்கு ஒரு மாத கால அளவிற்கு தடை செய்யப்பட்டுள்ளது. நீங்கள் ஆக்க நோக்கில் இல்லாத தொகுப்புகளை தொடர்ந்து செய்ததால், இவ்வாறு செய்யப்பட்டது. தடை காலாவதியானதும், விக்கிப்பீடியாவின் வழிகாட்டுதலின் படி பயனுள்ள பங்களிப்பைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
உங்களுடைய தடையை நீக்க தகுந்த காரணங்கள் இருப்பதாக நீங்கள் கருதினால், உங்களுடைய தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம். உங்கள் உரையாடல் பக்கத்தில் உள்ள தடை அறிவிப்புக்கு கீழேயான, உங்களுடைய காரணத்தை சேர்க்கவும்: {{unblock|reason=Your reason here ~~~~}}.  Kanags \உரையாடுக 08:20, 25 செப்டம்பர் 2019 (UTC)

பயனர்:Fahimrazick, பழந்தமிழருக்கு எந்த மதமும் கிடையாது. பிறர் புகுத்திய மதங்களை ஏற்றுக்கொண்டோம் அல்லவா? அதுபோல் கிரந்த எழுத்துக்களை ஏற்றுக்கொள்வதில் என்ன தவறு உள்ளது? பழந்தமிழருக்கு ஜ, ஸ, ஹ போன்ற ஒலிப்புகள் தேவைப்படவில்லை. ஆனால் காலப்போக்கில் பிறமொழிச் சொற்களைக் குறிக்க அவை தேவைப்பட்டது. எனவே காலத்திற்கேற்பத் தகவமைத்துக் கொள்வதுதானே இயற்கையின் நியதி? சூரியன், சந்திரன் போன்ற பிறமொழிச் சொற்களால் தான் தமிழின் தனித்தன்மை பாதிக்கிறது. கிரந்த எழுத்துக்களால் தமிழுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. தற்போதும் அவை பரவலாக பயன்பாட்டில் உள்ளன. தாங்கள் உருசியா உரையாடலில் குறிப்பிட்டுள்ளதை நான் கடுமையாக எதிர்க்கிறேன். இந்தியா பல்வேறு மொழிகளைப் பேசும் நாடு. அங்கு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால் இலங்கையில் அவ்வாறு இல்லை. எனவே தங்கள் ஒப்பீடு முற்றிலும் முரணானது. தாங்கள் தமிழகத்தில் வந்து இசுக்கொட்லாந்து, யப்பான் என்று எழுதிக் காண்பித்தால் பலருக்கும் புரியாது. தங்கள் பெயரையே பாஹிம் என்றுதானே எழுதுகிறீர்கள்? அதில் கிரந்தம் இல்லையா? GangadharGan26 (பேச்சு) 12:31, 25 செப்டம்பர் 2019 (UTC)


தமிழ் விக்கிப்பீடியாவில் இலங்கையைச் சேர்ந்த நிர்வாகிகளே பெருமளவில் உள்ளனர். அவர்கள் தங்கள் விருப்பப்படி தலைப்புகளை அமைத்துக் கொள்கின்றனர். அவர்களின் கைகளில் பல காலமாக அகப்பட்டுள்ள தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. கிரந்த எழுத்துக்களை இங்கு வேண்டுமானால் நீக்கிக் கொள்ளலாம். ஆனால் தமிழர் வாழ்வில் இருந்து அவற்றை நீக்குவது சாத்தியமில்லை. இனி இந்த விக்கிப்பீடியாவை இலங்கைத் தமிழர் விக்கிப்பீடியா என்று பெயர்மாற்றம் செய்துவிடுங்கள். தமிழகத் தமிழருக்கென தனி விக்கிப்பீடியாவை உருவாக்குங்கள். அதுவே நியாயமாக இருக்கும். இல்லையென்றால் இங்கு நிர்வாகிகள் இழைத்துவரும் அநியாயத்திற்கு நிச்சயம் ஒருநாள் பலன் கிடைக்கும். இனி இதுபற்றி நான் வருத்தப்படப் போவதில்லை. தங்களைக் கேள்வி கேட்கவும் கட்டுப்படுத்தவும் யாரும் இல்லை என்பதால் நிர்வாகிகள் ஆணவத்துடன் தங்கள் விருப்பப்படி செயல்பட்டு வருகின்றனர். ஒருநாள் அதிகாரம் கைமாறும். அப்போது என் கருத்துக்களுக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. GangadharGan26 (பேச்சு) 11:36, 25 செப்டம்பர் 2019 (UTC)

  வணக்கம், விக்கிப்பீடியாவுக்கு யாரும் ஆக்கநோக்கில் பங்களிக்கலாம் என்றாலும், ஏனைய பயனர்களுடன் ஊடாடும்போது, நல்லெண்ண நம்பிக்கையுடன் செயற்படும்படி கேட்டுக்கொள்கின்றேன். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நன்றி. நந்தகுமார் (பேச்சு) 11:44, 25 செப்டம்பர் 2019 (UTC)

தாங்களே கூறுங்கள். கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்துவதில் என்ன தவறு உள்ளது? அவற்றை என்ன காரணத்திற்காக எதிர்க்க வேண்டும்? GangadharGan26 (பேச்சு) 11:50, 25 செப்டம்பர் 2019 (UTC)

Kanags, பாரதியாரும் தன் பாடல்களில் கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தியுள்ளாரே? அதுபோல் இங்கு பயன்படுத்துவதில் என்ன தவறு? உருசியா என்ற பெயரை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இசுக்கொட்லாந்து போன்ற தலைப்புகளை நிச்சயம் மாற்ற வேண்டும். பொறுப்பற்ற நடவடிக்கைகள் என்று கூறி என்னைத் தடைசெய்து உள்ளீர்கள். ஆனால் உண்மையில் தங்களைப் போன்ற நிர்வாகிகளே பொறுப்பற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். GangadharGan26 (பேச்சு) 11:50, 25 செப்டம்பர் 2019 (UTC)

இறுதிவரை போராடுவேன்

தொகு

தமிழ் விக்கிப்பீடியாவில் அனைவரும் பங்களிக்க முடியும் என்ற நம்பிக்கையில் இங்கு வந்தேன். என் தாய்மொழியில் அமைந்துள்ள அறிவுக்களஞ்சியத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவ விரும்பினேன். அதற்கு 1 மாதம் தடை ஏற்பட்டுள்ளது. இந்த தடைக்காலத்தில் விக்கிப்பீடியாவின் கொள்கைகள் பற்றியும் கிரந்தம் குறித்த உரையாடல்களில் உள்ள பயனர்களின் கருத்துக்களையும் கண்டறியவுள்ளேன். கிரந்தம் குறித்து நான் பதிவிட்ட நியாயமான கருத்துக்களுக்கு இதுவரை யாரும் நியாயமான பதிலளிக்கவில்லை. நியாயம் இல்லாத இடத்தில் என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. ஆனால் நியாயம் கிடைக்க இறுதிவரை போராடுவேன். GangadharGan26 (பேச்சு) 01:21, 28 செப்டம்பர் 2019 (UTC)

September 2019

தொகு
 
Your ability to edit this talk page has been revoked as an administrator has identified your talk page edits as inappropriate and/or disruptive.

(block logactive blocksglobal blocksautoblockscontribsdeleted contribsabuse filter logcreation logchange block settingsunblockcheckuser (log))


If you think there are good reasons why you should be unblocked, you should read the guide to appealing blocks, then contact administrators by submitting a request to the Unblock Ticket Request System. If the block is a CheckUser or Oversight block, was made by the Arbitration Committee or to enforce an arbitration decision (arbitration enforcement), or is unsuitable for public discussion, you should appeal to the Arbitration Committee.
Please note that there could be appeals to the unblock ticket request system that have been declined leading to the post of this notice.

 AntanO (பேச்சு) 02:31, 28 செப்டம்பர் 2019 (UTC)

சில குறிப்புகள்

  • நான் ஏற்கெனவே குறிப்பிட்டபடி, இங்குள்ளவர்களுக்கு கிரந்தம் குறித்து உரையாட ஆர்வம் இல்லை. காரணம், இது குறித்து நிறையவே உரையாடப்பட்டுவிட்டது. மீண்டும் உரையாடி நேரத்தை வீணடித்து, விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் தடை ஏற்படுத்த விரும்பவில்லை.
  • பிராந்தியவாதமிக்க உங்கள் பேச்சுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதுவே உமக்கு இறுதியான எச்சரிக்கை. த.வி.யின் ஒற்றுமைப்போக்கிக்கு பாதகமாக பேசும் ஒருவரை நிரந்தரமாக தடை செய்ய ஒரு நிருவாகிக்கு இடம் உள்ளது.
  • எத்தனை கணக்கு உருவாக்கினாலும் சரி, வேறு ஏதும் வழிகளில் விக்கிப்பீடியாவில் கொள்கைக்கு எதிராகச் செயற்பட்டால் நிரந்தரமாக தடை செய்யப்படுவீர்.
  • உமது கேள்விகள் போன்ற பல கேள்விகளைக் கேட்டு இங்குள்ளவர்கள் சலிப்படைந்துள்ளார்கள். ஆகவே பதில் சொல்லி நேரத்தை வீணடிப்பதைவிட்டுவிடுவதே ஏற்புடையது. ஏன் கிரந்தம் கூடாது என்பதற்கு இங்கு பல இடங்களில் நடந்த உரையாடல்களில் பதில் உள்ளது. கிரந்தம் பயன்படுத்துவது ஏற்புடையது என்பதற்கு உள்ள நியாயமான காரணங்கள் போல் கிரந்த எதிர்ப்பிற்கும் நியாயமான காரணங்கள் பல உள்ளன. ஆகவே, முடிவிற்கு வரவியலா இடங்களில் பொது நன்மை கருதி ஒரு நடுநிலைமையில் பங்களிக்கிறோம். இதனை தாமும் ஏற்றுக் கொண்டு பங்களியுங்கள்.
  • //நியாயம் கிடைக்க இறுதிவரை போராடுவேன்//. - இவ்வாறான கருத்துங்கள் விக்கியில் வரவேற்கப்படுவதில்லை. விக்கிப்பீடியா ஒன்றும் சமூக வலைத்தளமோ அல்லது சனநாயக அமைப்போ இல்லை. இதற்கொன்று ஒரு கொள்கை உள்ளது. அதை ஏற்றுக் கொண்டவர்கள் பங்களிக்கிறார்கள்.
  • இறுதியாக, 3 மாத காலத்தடை நீங்கியதும் பயனுள்ள பங்களிப்புச் செய்யுங்கள். இதைவிடுத்து, பேச்சுப்பக்கங்களில் தேவையற்ற கருத்திடுவது, கொள்கைப் பங்கங்களில் தாமாகவே கருத்துக்களைச் சேர்ப்பது, பிராந்திய வாதம் பேசுதல் போன்ற விக்கி வழிகாட்டலுக்கு பொருத்தமற்ற செயற்பாடுகளில் ஈடுபட்டால் நிரந்தரமாகத் தடை செய்யப்படுவீர்.

--AntanO (பேச்சு) 03:00, 28 செப்டம்பர் 2019 (UTC)

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:GangadharGan26&oldid=3184140" இலிருந்து மீள்விக்கப்பட்டது