முடியுருக் குருதிச்சுற்றோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎முடியுரு நாடி: *விரிவாக்கம்*
→‎முடியுரு நாடி: *திருத்தம்*
வரிசை 30:
இடது முடியுரு நாடியில் இருந்து இடது முற்புற இறங்கு நாடியும் சுற்றுவளை நாடியும் கிளையாகப் பிரிகின்றன. இவை இதயத்தின் இடது மேலறை, கீழறைகளுக்கும் கீழறைப் பிரிசுவருக்கும் குருதியை வழங்குகின்றன. சுற்றுவளை நாடி வலது முடியுரு நாடியின் சிறுகிளைகளுடன் இணைந்து கொள்கின்றது. முற்புற இறங்கு நாடியின் (வேறு பெயர்: முற்புறக் கீழறையிடை நாடி) சிறுகிளைகள் வலது முடியுரு நாடியின் பிற்புற இறங்கு நாடி கிளைகளுடன் பொருந்துகின்றன. இவை முடியுரு நாடிப் பின்னல்கள் அல்லது முடியுரு தமனிப் பின்னல்கள் ஆகும்.
 
இந்த முடியுரு நாடிப்பின்னல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. முதன்மையான நாடியில் அடைப்பு ஏற்பட்டு, குருதி ஊட்டக்குறை ஏற்படும்போது வேறொரு நாடி குருதி வழங்குதலை முழுவதுமாக எடுத்துக்கொள்கின்றது. இவ் இயக்கத்துக்கு நாடிகளில் உள்ள அழுத்த வேறுபாடு முக்கிய பங்கு வகிக்கின்றது. உயர் அழுத்தம் காரணமாக நாளடைவில் புதிதாகத் திறந்து விடப்பட்ட கிளை நாடியின் பருமன் கூடி விரிவடையும். எனினும் இதயத்தில் உள்ள நாடிப் பின்னல்கள் மெய்யானவை அல்ல, தொழிற்பாட்டு முடிவுறுத் தமனி எனப்படுபவை. உடலின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் பெரும்பாலும் தொழிற்பாடு குன்றிய நிலையில் இருக்கின்றன. ஒரு முடியுரு நாடியில் அல்லது அதன் கிளையில் அடைப்பு ஏற்படும்போது அவை குருதியை வழங்கும் பகுதிகள் இறக்கின்றன. முடியுரு நாடியின் இதுவே இதயத் தசை இறப்புக்கான காரணியாக உள்ளது. [[குருதி ஊட்டக்குறை இதய நோய்|குருதியூட்டக்குறை இதய நோய்]] அல்லது முடியுருநாடி இதய நோய் உள்ளவர்களில் ஏற்படக்கூடிய முடியுரு நாடி கூழ்மத்தடிப்பு மிகவும் மந்தமாக ஏற்படும் பட்சத்தில் தொழிற்படாத நாடிப் பின்னல்கள் நாளடைவில் புதிய நாடிகளைத் திறந்துவிடும் வாய்ப்பு உண்டு.
 
முடியுரு நாடிப் பின்னல்களில் புதிதாக நாடிக்கிளைகள் திறந்துவிடப்படுவதற்கு உடற்பயிற்சியும் ஒரு காரணமாகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/முடியுருக்_குருதிச்சுற்றோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது