முடியுருக் குருதிச்சுற்றோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்* முடியுருக் குருதிச்சுற்றோட்ட விளக்கப்படம்.
சி →‎முடியுரு நாடி: *விரிவாக்கம்*
வரிசை 28:
anatomy||year=2006|isbn=9781405138048|publisher=Blackwell Publishing|accessdate=15 October 2019|page=33}}</ref> பெருநாடி அடைப்பிதழ்களின் ஒவ்வொரு இதழ்களும் நாடியின் சுவர்களும் சேர்ந்து மூன்று குழிவுகளை உருவாக்குகின்றன. இவை பெருநாடிக் குழிவுகள் (aortic sinus) அல்லது வல்சல்வாவின் குழிவுகள் எனப்படுகின்றன. இடது பிற்புறப் பெருநாடிக் குழிவில் இருந்து இடது முடியுரு நாடியும் முற்புறப் பெருநாடிக் குழிவில் இருந்து வலது முடியுரு நாடியும் தோன்றுகின்றன. வலது பிற்புறப் பெருநாடிக் குழிவில் இருந்து முடியுருநாடி தோன்றாமையால் அது முடியுருநாடியிலாக் குழிவு எனப் பெயர் கொண்டுள்ளது.<ref name="Grays">{{cite book |title=Gray's Anatomy|last= Standring|first=Susan |authorlink= |year=|publisher=Elsevier Limited |edition=40|location= |isbn=978-0-8089-2371-8|page= |chapter=Coronary arterial supply |pages= |accessdate=October 17, 2019 |url=}}</ref> பெருநாடிக் குழிவுகளின் பெயரீட்டில் வேறுபாடுகள் உள்ளது. இவை இடது பிற்புறப் பெருநாடிக் குழிவு, முற்புறப் பெருநாடிக் குழிவு, வலது பிற்புறப் பெருநாடிக் குழிவு என்று மரபு வழிப் பெயரிட்டாலும் இடது, வலது, பிற்புறக் குழிவுகள் என்று சில மூலங்களிலும் பெயரிடப்பட்டுள்ளது.<ref name="Ho1">{{cite journal |last1=Ho |first1=SY |title=Structure and anatomy of the aortic root. |journal=European journal of echocardiography : the journal of the Working Group on Echocardiography of the European Society of Cardiology |date=January 2009 |volume=10 |issue=1 |pages=i3-10 |doi=10.1093/ejechocard/jen243 |pmid=19131496}}</ref>
 
இடது முடியுரு நாடியில் இருந்து இடது முற்புற இறங்கு நாடியும் சுற்றுவளை நாடியும் கிளையாகப்கிளைகளாகப் பிரிகின்றன. இவை இதயத்தின் இடது மேலறை, கீழறைகளுக்கும் கீழறைப் பிரிசுவருக்கும் குருதியை வழங்குகின்றன. சுற்றுவளை நாடி வலது முடியுரு நாடியின் சிறுகிளைகளுடன் இணைந்து கொள்கின்றது. முற்புற இறங்கு நாடியின் (வேறு பெயர்: முற்புறக் கீழறையிடை நாடி) சிறுகிளைகள் வலது முடியுரு நாடியின் பிற்புற இறங்கு நாடி கிளைகளுடன் பொருந்துகின்றன. இவை முடியுரு நாடிப் பின்னல்கள் அல்லது முடியுரு தமனிப் பின்னல்கள் ஆகும். இடது சுற்றுவளை நாடியில் இருந்து இடது விளிம்பு நாடி தோன்றுகின்றது. வலது முடியுரு நாடியில் இருந்து பிற்புற இறங்கு நாடியும் வலது விளிம்பு நாடியும் தோன்றுகின்றது. இவை வலது மேலறை, கீழறைகளின் பகுதிகள், கீழறைப் பிரிசுவர் மற்றும் இதய மின்கடத்துகை ஒருங்கியம் ஆகியனவற்றுக்கு குருதியை விநியோகிக்கின்றது.<ref name="CNX2014">{{cite book|last1=Betts|first1=J. Gordon|title=Anatomy & physiology|date=2013|isbn=1938168135|url=http://cnx.org/content/m46676/latest/?collection=col11496/latest|accessdate=11 August 2014|pages=787–846}}</ref>
 
=== முடியுரு நாடிப்பின்னல்கள் ===
 
இந்த முடியுரு நாடிப்பின்னல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. முதன்மையான நாடியில் அடைப்பு ஏற்பட்டு, குருதி ஊட்டக்குறை ஏற்படும்போது வேறொரு நாடி குருதி வழங்குதலை முழுவதுமாக எடுத்துக்கொள்கின்றது. இவ் இயக்கத்துக்கு நாடிகளில் உள்ள அழுத்த வேறுபாடு முக்கிய பங்கு வகிக்கின்றது. உயர் அழுத்தம் காரணமாக நாளடைவில் புதிதாகத் திறந்து விடப்பட்ட கிளை நாடியின் பருமன் கூடி விரிவடையும். எனினும் இதயத்தில் உள்ள நாடிப் பின்னல்கள் மெய்யானவை அல்ல, தொழிற்பாட்டு முடிவுறுத் தமனி எனப்படுபவை. உடலின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் பெரும்பாலும் தொழிற்பாடு குன்றிய நிலையில் இருக்கின்றன. ஒரு முடியுரு நாடியில் அல்லது அதன் கிளையில் அடைப்பு ஏற்படும்போது அவை குருதியை வழங்கும் பகுதிகள் இறக்கின்றன. இதுவே இதயத் தசை இறப்புக்கான காரணியாக உள்ளது. [[குருதி ஊட்டக்குறை இதய நோய்|குருதியூட்டக்குறை இதய நோய்]] அல்லது முடியுருநாடி இதய நோய் உள்ளவர்களில் ஏற்படக்கூடிய முடியுரு நாடி கூழ்மத்தடிப்பு மிகவும் மந்தமாக ஏற்படும் பட்சத்தில் தொழிற்படாத நாடிப் பின்னல்கள் நாளடைவில் புதிய நாடிகளைத் திறந்துவிடும் வாய்ப்பு உண்டு.
"https://ta.wikipedia.org/wiki/முடியுருக்_குருதிச்சுற்றோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது