நருமதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
==தோற்றம்==
கிழக்கு மத்தியப்பிரதேசத்தின் [[அனூப்பூர் மாவட்டம்|அனூப்பூர் மாவட்டத்திலுள்ள]] அமர்கண்டிலுள்ள நரும்தை குளத்தில் தோன்றும் நர்மதா ஆறு அங்கிருந்து பாய்ந்து கபிலதாரா என்ற அருவியை உருவாக்குகிறது. மலைகளுக்கிடையே நெளிந்து ஓடும் இவ்வாறு கடின பாறைகளுக்கிடையே பாய்ந்து இராம்நகரிலுள்ள சிதிலமடைந்த அரண்மனையை அடைகிறது. ராம்நகருக்கும் [[மண்ட்லா]]விற்கும் இடைபட்ட 25 கி.மீ தூரம் பாறைகள் காரணமாக ஆழமாக இருந்ததுடன் அதிக வளைவுகள் இன்றி நேராக இருந்தது. வடமேற்காக சிறிது பயணித்து [[ஜபல்பூர்|சபல்பூரை]] அடைந்தது. அந்நகருக்கு அருகில் நருமதையின் 29 அடி உயர தூவந்தர் அருவி உள்ளது. அவ்வருவியில் இருத்து 3 கிமீக்கு மக்னீசியம் [[சுண்ணக்கல்|சுண்ணக்கல்லும்]] பசால்ட்டு பாறையும் உடைய [[பளிங்குக்கல் பாறைகள்]] என அழைக்கப்படுவதன் ஊடாக 295 அடி ஆறானது 59 அடி ஆறாக குறுகி ஓடியது. இதன் பின் அரபிக்கடலில் கலக்கும் வரை நருமதை மூன்று குறுகிய பள்ளத்தாக்குகளை வடக்கிலிருக்கும் சாத்பூரா மலைத் தொடருக்கும் தெற்கிலிருக்கும் விந்திய மலைத்தொடருக்கும் இடையில் சந்திக்கிறது. பல இடங்களில் பள்ளத்தாக்கின் தென் பகுதி அகலமாக உள்ளது. இந்த மூன்று பள்ளத்தாக்குகளும் சாத்பூரா மலைத்தொடராலும் குத்தான மலைத்தொடராலும் பிரிக்கப்படுகின்றன.
 
பளிங்குகல் பாறைகளை விட்டு வெளிவரும் நருமதை முதன் முறையாக வளமான மண் நிறைந்த வடிநிலத்தை அடைகிறது. 320 கிமீ நீளமுடை இதன் அகலம் தெற்கில் 35 கிமீ ஆகும், வடக்கில் இதன் அகலம் குறைவு. நருமதாபுரம் என அழைக்கப்படும் ஹோசங்காபாத்துக்கு எதிரிலுள்ள பர்கரா மலை வடபகுதி வடிநிலத்தை தடுப்பதால் அதன் அகலம் குறைவாகவுள்ளது. முதல் பள்ளத்தாக்கில் தெற்கிலிருந்து பல ஆறுகள் நருமதையுடன் இணைகின்றன. சாத்பூரா மலைச்சரிவிலிருந்து நிறைய நீர் நருமதையுடன் கலக்கிறது. 172 கிமீ நீளமுடைய தவா ஆறு இதில் பெரியதாகும்.
 
==நர்மதா பரிக்ரமா==
"https://ta.wikipedia.org/wiki/நருமதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது