"90 எம்எல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5,278 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
*விரிவாக்கம்*
(*விரிவாக்கம்*)
'''''90 எம்எல்''''' என்பது 2019இல் வெளியான இந்திய, [[தமிழ்]] மொழி, [[நகைச்சுவைத் திரைப்படம்]] ஆகும். இதை அனிதா உதீப் எழுதி இயக்கியுள்ளார். <ref>{{Cite web|url=https://www.filmibeat.com/tamil/movies/90-ml.html|title=90 ML (2018) {{!}} 90 ML (Ninety ML) Tamil Movie {{!}} 90 ML Review, Cast & Crew, Release Date, Photos, Videos|website=FilmiBeat|language=en|access-date=2018-12-10}}</ref> 90 எம்எல் திரைப்படத்தில் இந்திய திரைப்பட நடிகை [[ஓவியா]] முக்கிய கதாப்பாத்திரமாக நடிக்க, [[ஆன்சன் பால்]], மசூம் சங்கர், மோனிசா ராம், சிறீ கோபிகா மற்றும் பொம்மு இலக்சுமி ஆகியோர் துணை கதாப்பாத்திரங்களாக நடித்துள்ளனர். என்விஸ் என்டெர்டெய்ன்மெண்ட் எனும் பெயரில் இத்திரைப்படம் உதீப் அவர்களால் தயாரிக்கப்பட்டுள்ளது.<ref>{{Cite web|url=https://indianexpress.com/article/entertainment/tamil/oviya-next-90-ml-simbu-5064845/|title=Oviya’s next is titled 90 ML, Simbu to compose music|date=2018-02-15|website=The Indian Express|language=en|access-date=2018-12-10}}</ref> இந்த திரைப்படத்துக்கு [[சிலம்பரசன்]] இசை அமைத்துள்ளார்.<ref>{{Cite web|url=https://www.newsbugz.com/90-ml-tamil-movie/|title=90 ML Tamil Movie (2018) {{!}} Cast {{!}} Songs {{!}} Teaser {{!}} Trailer {{!}} Review|last=RajKumar|date=2018-08-03|website=News Bugz|access-date=2018-12-10}}</ref> அத்துடன் [[ஆண்டோனி]] தொகுக்க அரவிந்த் கிருசுனா இத் திரைப்படத்தினை ஒளிப்பதிவு செய்துள்ளார். 90 எம்எல் திரைப்படம் மார்ச் 1 2019 அன்று திரை அரங்குகளில் வெளியானது.<ref name=":0">{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/oviyas-90-ml-censored-with-an-a-certificate/articleshow/67896717.cms|title=Oviya's '90 ml' censored with an 'A' certificate! - Times of India|website=The Times of India|language=en|access-date=2019-02-08}}</ref>
 
==கதைச் சுருக்கம்==
தாமரை (பொம்மு இலக்சுமி) மற்றும் அவரது கணவர் சதீஷ் (தேஜ் ராஜ்) பிரியதர்சினி ([[தேவதர்சினி]]) எனும் உளவியலாளரை ஆலோசனை அமர்விற்காக போதைப்பொருள் தடுப்பு பிரிவில் சந்திக்கின்றனர். எனினும் ரவுடியாகிய சதீஸ் கோபத்துடன் அங்கிருந்து வெளியேறுகின்றார்.
 
தாமரை பின்னர் அவரும் அவரது அயலவர்களான காஜல் (மசூம் சங்கர்), பாரு(சிறீ கோபிகா), சுகன்யா (மோனிஷா ராம்) ஆகியோர் ரீட்டாவை ([[ஓவியா]]) சந்தித்த கதையை கூறுகின்றார். பின்னர் ஒரு நாள் இவர்கள் மதுபானக் கடையில் மது அருந்த செல்கின்றனர். இது தெரிந்த தாமரையின் கணவர் சதீஷ் தாமரையை அவரின் குடிகார நண்பிகளுடன் சகவாசம் வைக்க வேண்டாம் என அச்சுறுத்துகின்றார்.
 
சிறிது காலத்தின் பின் சுகன்யா ஒரு விருந்திற்கு அனைவரையும் அழைக்கின்றார். அங்கு அவர் தனது காதலரான கிறிஸ் பாண்டிச்சேரியில் திருமணம் செய்யப் போவதாக கூறி அழ, அவர்கள் அனைவரும் சென்று மணமக்களை கடத்தி வருகின்றனர். அங்கு சுகன்யா மணமக்களை ஓடி சென்று கட்டிப்பிடித்து அனைவரையும் அதிர்ச்சியடைய செய்கின்றார். கடைசியில் மற்றவர்கள் ஒரு போலீஸ் நிலையத்தில் மாட்டி எச்சரிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றனர். அங்கே சதீசுக்கும் ரீட்டாவின் காதலனுக்கும் சிறிய சண்டை ஏற்படுகின்றது.
 
பின்னர் ரீட்டாவின் காதலரான வெங்கி ([[ஆன்சன் போல்]]) திருமணம் செய்ய கேக்க ரீட்டா அதை மறுக்கின்றார். அதனால் அவர்கள் பிரிக்கின்றனர். பின்னர் அவர்கள் அனைவரும் சுகன்யாவையும் அவரது காதலியையும் சந்திக்கின்றனர். அங்கே அவர்கள் மதுபான பழக்கத்தில் இருந்து போதைப்பொருள் பாவிக்க தொடங்குகின்றனர். கஞ்சா வாங்க செல்லும் போது போலிசினால் துரத்தப்பட்டு சதீஸ் மற்றும் அவரின் எதிர் கும்பல் சண்டையில் மாட்டுகின்றனர். எனினும் சதீஸ் அவர்களை காப்பாற்றுகின்றார்.
 
இறுதியில் தாமரை சதீஷை அவரது முதலாளியிடம் இருந்து விடுவிக்க தனது நண்பிகளின் உதவியை நாடுகின்றார். பின்னர் அவர்கள் சென்று முதலாளியை சண்டையிட்டு பிடிக்க சதீஸ் வந்து காப்பாற்றுகின்றார்.
 
பின்னர், அவர்கள் மறுபடியும் விருந்து கொண்டாடும் பொழுது ஒருவர் தனது காதலியிடம் தனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை எனவும் தான் யாருடைய சொத்தும் இல்லை என கூற, அவர்கள் அவன் ரீட்டாவை போல் இருக்கின்றான் என கூறுகின்றனர். ரீட்டா அவனுக்கு அருகில் சென்று முத்தமிடுகின்றார்.
 
== நடிப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2819836" இருந்து மீள்விக்கப்பட்டது