ஈப்பிடிப்பான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
 
== வாழிடம் ==
இவை பெரும்பாலும் மரங்களில் இலை, புல், சிறு வளார், வேர், பாசம் முதலியவற்றைக் கொண்டு கிண்ணம்போன்ற கூடு கட்டும் சாதாரணமாக 3-5 [[முட்டை]]கள் இடும். மாசி முதல் ஆடி வரையில் இவை குஞ்சு பொரிக்குங்காலம். இவற்றின் ஒலி சாதாரணமாகக் கிண்கிணி போலச் செவிக்கு[[செவி]]க்கு இனிமையாக இருக்கும். தென்னிந்தியாவிலுள்ள சில இனங்கள் இங்குக் குறிக்கப்படுகின்றன. கருநீல ஈப்பிடிப்பான் (மஸ்க்கிகாப்புலா டிக்கெல்லியீ) ஊர்க்குருவி அளவுள்ளது. ஆண் முதுகுபுறம் நீலி. நெற்றியும் புருவமும் தோளும் பளிச்சென்ற நீலம். மார்பு இரும்புத் துருபோன்ற மங்கலான செந்நிறம். வயிற்றுப்புறம் இறங்கி வரவர வெண்மை நிறம் மிகும். பெண் ஆணைவிட மங்கலாக வெளுத்துத் தோன்றும். இவை தனித்தனியாக இருக்கும். செறிவில்லாத முட்செடிக் குறுங்காடுகளிலும் [[இலையுதிர் காடுகள்|இலையுதிர் காடுகளிலும்]] வசிக்கும். மேடு பள்ளமான மலையடிவாரப் பள்ளத்தாக்குக்களில் குளிர்ச்சியான நிழலுள்ள சோலைகளிலும் மூங்கில் புதர்களிலும் இருக்கும். வீட்டுத்தோட்டங்கள் தோப்புக்களிலும் வரும்.
 
[[பகுப்பு:தமிழ்நாட்டுப் பறவைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஈப்பிடிப்பான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது