"நீலகிரி மாவட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5,835 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
சி
→‎வேளாண்மை: http://www.crida.in/CP-2012/statewiseplans/Tamilnadu%20(pdf)/TNAU,%20Coimbattore/TN24-NILGIRIS%2031.3.2011.pdf
சி (→‎வேளாண்மை: http://www.crida.in/CP-2012/statewiseplans/Tamilnadu%20(pdf)/TNAU,%20Coimbattore/TN24-NILGIRIS%2031.3.2011.pdf)
1948 அக்டோபர் முதல் மரம் நடுவிழா தொடங்கியது. 20 ஆண்டு திட்டம் வகுக்கப்பட்டு 3000 ச.மைல் பரப்புக்கு காடுகளைக் கையகப்படுத்தி சவுக்கு, [[தைலம்]] ([[Eucalyptus (disambiguation)]]) வாட்டில் பட்டை மரங்களாகவும் ஏராளமாக நட்டு வளர்க்கப்பட்டது. இதன் மூலம் பல விரிந்த காடுகள் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் பரவியுள்ளன. தேக்கும், ரப்பரும் அதிகளவு வளர்ந்துள்ளன. இக்காடுகளில் உள்ள மூலிகைகள், இந்திய மருத்துவ ஆராய்ச்சித் துறையால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, நன்கு பராமரிக்கப்படுகின்றன. இதன் மூலம் பல அரிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, மக்களுக்கு உதவுகின்றன.
== வேளாண்மை ==
நீலகிரி மாவட்டத்தில் 2019 – 20 ஆண்டு கணக்கின்படி 73406.00 ஹெக்டர் பரப்பளவில் 83,125 விவசாயிகள் வேளாண்மை மேற்கொண்டு வருகின்றனர். தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை வாயிலாக நீலகிரி மாவட்ட விவசாயிகள் பயனடையும் பொருட்டு, ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி இயக்கம் (MIDH), பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத்திட்டம் (PMKSY), கூட்டுப் பண்ணையம் திட்டம் (Collective farming), சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டம் (SADP), பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY), சிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் (NADP) ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன.<ref>http://www.crida.in/CP-2012/statewiseplans/Tamilnadu%20(pdf)/TNAU,%20Coimbattore/TN24-NILGIRIS%2031.3.2011.pdf</ref>
 
=== பழச்சாகுபடி ===
1946 ஆம் ஆண்டிலிருந்து பழங்களைப் பற்றிய ஆய்வுகள் நடந்து வருகின்றன. இதன்படி நீலகிரியில் குன்னூர், பர்லியார், கல்லார் ஆகிய இடங்களில் ஆய்வு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 6000 அடி, 2,500 அடி, 1500 அடி உயரங்களில் சாகுபடி செய்யக்கூடிய பழ இனங்களைப் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு தோட்டக்கலை துறையின் கீழ் செயல்படும் பின்வரும் தோட்டக்கலை பண்ணைகளில் நாற்றுகள் சாகுபடி செய்யப்படுகின்றன.
 
'''தேவாலா பண்ணை''': சில்வர் ஓக் நாற்றுகள், காபி, பாக்கு, தேயிலை மற்றும் மிளகு நாற்றுகள்.குன்னூர் பழம் பதனிடும் நிலையம், அரசு தாவரவியல் பூங்கா, சிம்ஸ் பூங்கா, கல்லாறு, பர்லியார், சேரிங்கிராஸ் தோட்டக்கலை வணிக வளாகம் மற்றும் ரோஜா பூங்காக்களில், குன்னூரில் உற்பத்தி செய்யப்பட்ட ஜாம், ஜெல்லி, பழரசம், ஊறுகாய் விற்பனை செய்யப்படுகின்றன.
 
=== தோட்டக்கலை ===
தமிழ்நாட்டிலுள்ள நீலகிரி மாவட்டமானது ஒரு பிரதான தோட்டக்கலை மாவட்டமாகும். மேலும் இங்கு மலைகளின் உயரத்திற்கு ஏற்றவகையில் மலைப்பயிர்களும் விளைவிக்கப் படுகின்றன. பயிர் சாகுபடியிலும், சீதோசண நிலையிலும் அண்டைய மாவட்டங்களைக் காட்டிலும் பெருமளவு வேறுபட்டது. மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 2545 சதுர கிலோ மீட்டராகும் இம்மாவட்டத்தில் 6 வருவாய் வட்டம் உள்ளது, மேலும் நீலகிரி மாவட்டத்தின் தனிச் சிறப்பு மொத்த பரப்பளவில் 56மூ காடுகளை கொண்டதாகும் கடல் மட்டத்திலிருந்து 900 – 2636 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் சராசரி மழையளவு ஆண்டொன்றிற்கு 1522.7 மி.மீ ஆகும். நீலகிரி மாவட்டத்தில் நிலவக்கூடிய தட்பவெட்ப நிலை பல்வேறு பயிர்கள் சாகுபடிக்கு உகந்ததாக உள்ளது, முறையே காய்கறிகள், பழங்கள், வாசனை திரவிய பயிர்கள், மலர்கள், மருத்துவ தாவரங்கள் மற்றும் மலைத்தோட்ட பயிர்கள் ஆகியவை படிமட்டங்கள் (Terrace cultivation) மற்றும் சில கிராமங்களில் குறுகிய சரிவான பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தின் உயரத்தை பொருத்து, குளிர்கால பயிர்கள் (Temperate Crops), மிதவெப்ப மண்டல பயிர்கள் (Sub -Tropical Crops), வெப்ப மண்டல பயிர்கள் என மூன்று விதமான நிலைகளில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.<ref>https://nilgiris.nic.in/departments/department-of-horticulture-and-plantation-crops/</ref> மலையின் உயரமான பரப்பில் உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், கேரட், பீன்ஸ், பிளம், பீச், பேரி, மற்றும் இதர வகைபயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. மலையின் இடைப்பட்ட பகுதிகளில் கமலாஆரஞ்சு, காப்பி சாகுபடி செய்யப்படுகிறது. குறைந்த உயரப்பகுதிகளில் கிராம்பு, ஜாதிக்காய், மிளகு, இஞ்சி மற்றும் துரியன், லிச்சி, ரம்பூட்டான், மங்குஸ்தான் போன்ற பழங்கள் பயிரிடப்பட்டு வருகிறது. தோட்டக்கலை பயிரான காய்கறிகள் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டிற்கு, நீர்போகம், கார்போகம் (Main Season), கடைபோகம் (Autumn Season) என மூன்று பருவங்களாக சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவையாவன
 
== உள் கட்டமைப்பு ==
22,322

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2829094" இருந்து மீள்விக்கப்பட்டது