திருவாரூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வரலாறு: https://tiruvarur.nic.in/about-district/history/
சி →‎வரலாறு: https://www.iran-inde.cnrs.fr/scientific-events/events-2019/15th-international-workshop-on-tamil-epigraphy.html?lang=fr
வரிசை 53:
7, 8ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த சைவக்குரவர்களான [[திருஞானசம்பந்தர்]], [[திருநாவுக்கரசர்]], [[சுந்தரர்]] ஆகியோர் இயற்றிய [[தேவாரம்|தேவாரத்தில்]] சிறப்பித்துக் கூறப்பட்டுள்ள பாடல்பெற்ற தலமாக திருவாரூர் அமைந்துள்ளது. மார்கழி ஆதிரை விழா, பங்குனி உத்திரப்பெருநாள், வீதிவிடங்கனுக்கு நீதி செய்த முறை ஆகியவற்றை இப்பாடல்களின் மூலம் அறியலாம். இக்கோயில் 9ஆம் நூற்றாண்டில் முதலாம் ஆதித்ய சோழனால் கற்கோயிலாக கட்டப்பெற்றதாகும். அதன்பின்னர், [[முதலாம் இராஜராஜ சோழன்|முதலாம் இராஜராஜசோழன்]] காலத்தில் புனரமைக்கப்பட்டது. பிற்காலச் சோழர்கள் மற்றும் [[பாண்டியர்]]களின் கல்வெட்டுகள் இக்கோயிலில் உள்ளன.
 
[[முதலாம் குலோத்துங்க சோழன்|முதலாம் குலோத்துங்க சோழர்]] காலத்தில் திருவாரூர் தலைநகராமாகவும், சைவ வளர்ச்சி மையமாகவும் திகழ்ந்ததாக இக்கோயில் கல்வெட்டுகளின் மூலம் அறியலாம். 13ஆம் நூற்றாண்டில், [[இரண்டாம் இராஜேந்திர சோழன்|இரண்டாம் இராஜேந்திரசோழர்]] காலத்தில், சோழர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் பாண்டியர்கள் மற்றும் ஹோய்சாலர்கள் ஆதிக்கத்தில் இம்மாவட்டம் இருந்துள்ளது. [[நாயக்கர் அரச மரபு|நாயக்கர்கள்,]] [[விஜயநகரப் பேரரசு|விஜயநகர அரசு]]கள், [[மராட்டியப் பேரரசு|மராத்தியர்கள்]] காலத்திலும் தொடர்ந்த அரசின் ஆதரவு காரணமாக இம்மாவட்டம் கலாச்சார மையமாக திகழ்ந்துள்ளது. மராத்தியரின் ஆட்சிக்காலத்தில் [[சிதம்பரம் நடராசர் கோயில்|சிதம்பரம்]] நடராஜரின் தற்காலிக வீடாகவே திருவாரூர் இருந்துள்ளது. 1759இல் ல்ல்லியின் கீழ் செயல்பட்ட [[பிரெஞ்சு மக்கள்|பிரெஞச்சு]]படைகள் திருவாரூர் [[தியாகராஜ சுவாமிகள்|தியாகராஜ சுவாமி கோயிலில்]] மறைக்கப்பட்ட பொக்கிஷங்களை தேடி சூறையாடினர். அப்போது கோயிலைச் சேர்ந்த 5 அந்தணர்கள், ஆங்கிலேயர்களுக்கு உளவு பார்க்கிறார்கள் என சந்தேகிகப்பட்டு கொல்லப்பட்டனர்.மேலும், பல கல்வெட்டு ஆய்வுகள் நடத்துவதற்கு உகந்த தமிழக இடங்களில் ஒன்றாக திருவாரூர் உள்ளது.<ref>https://www.iran-inde.cnrs.fr/scientific-events/events-2019/15th-international-workshop-on-tamil-epigraphy.html?lang=fr</ref>
 
சுதந்திரத்திற்குப் பிறகு திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக 1991 வரையிலும், பின்னர் 1997க்குப் பின்னர் நாகப்பட்டினம் மாவட்டத்தின் ஒரு பகுதியாகவும் இருந்தது. வரலாற்று ரீதியாக திருவாரூர் சமயம், கலை மற்றும் அறிவியல் ஆகியவற்றில் சிறந்தவர்களின் மையமாகத் திகழ்ந்தது. [[திருவிழிமிழலை ஊராட்சி|திருவிழிமிழலை]], [[திருப்பாம்புரம்]], [[திருமீயச்சூர்]], [[திருவாஞ்சியம் ஊராட்சி|திருவாஞ்சியம்]], தில்லைவிளாகம், திருக்கண்ணமங்கை போன்ற வரலாற்றில் பிரபலமான கோவில்கள் இம்மாவட்டத்தில் அமைந்துள்ளன. முத்துப்பேட்டை அருகே ஜாம்புவானோடையில் பழமையும், புகழும் மிக்க தர்கா அமைந்துள்ளது. கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், [[முத்துசாமி தீட்சிதர்]], [[சியாமா சாஸ்திரிகள்|சியாமா சாஸ்திரி]] ஆகியோர் திருவாரூரில் பிறந்தவர்கள். இவர்கள் இம்மாவட்டத்திற்கு புகழையும், கண்ணியத்தையும் சேர்க்கிறார்கள்.<ref>https://tiruvarur.nic.in/about-district/history/</ref>
"https://ta.wikipedia.org/wiki/திருவாரூர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது