வேலூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 88:
 
=== முத்துமண்டபம் ===
[[இலங்கை]]யை ஆண்ட கடைசி தமிழ் மன்னனின் கல்லறை, முத்து மண்டபத்தில் உள்ளது. கண்டியில் கமிம் மன்னர்கள் [[மதுரை நாயக்கர்கள்|மதுரை நாயக்க வம்சம்]] சார்ந்த, விஜயராசசிங்கன் கி.பி 1739- 1747 ஆம் ஆண்டு வரையிலும், ராசாதி ராச சிங்கன் கி.பி. 1782 - 1798 ஆம் ஆண்டு வரையிலும், கர்த்தி ராஜசிங்கன் கி.பி. 1747-1782 ஆம் ஆண்டு வரையிலும், விக்ரம ராச சிங்கன் கி.பி.1798-1815 ஆண்டு வரையிலும் ஆட்சி நடத்தினர்.விக்ரம் ராச சிங்கன் இலங்கையில் சிறப்பாக ஆட்சி செய்த கடைசி தமிழ் மன்னன் என வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. ஆங்கில அரசு, இம் மன்னன் மீது, நான்கு முறை போர் தொடுத்தது. இப்போர்கள் கடுமையாக இருந்தன எனக் கூறப்படுகிறது. இறுதியில் அத்தமிழ் மன்னரும், அவரின் பட்டத்தரசிகளும் கப்பல் வழியே, தமிழகம் கொண்டு வரப் பெற்றனர். அதன் பின், 1818 ஆம் ஆண்டு, வேலுார்க் கோட்டையில் உள்ள தற்போதைய பதிவு அலுவலகம் அறையில் 16 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டனர். விக்ரம ராச சிங்கன் 30-1-1832 ஆம் ஆண்டு மரணமடைந்தார். பின்னர், அவரது நினைவாக இங்கு கல்லறை அமைக்கப் பட்டது. இதுபோல, 1843ல் மரணமடைந்த மகன் ராங்கராசா கல்லறையும், அவரது மனைவி ராசலட்சுமிதேவி கல்லறையும், மன்னரின் கொள்ளுபேரன் நரசிம்மவராசா கல்லறையும் அருகில் அமைக்கப் பட்டன. நான்கு, ஐந்து,ஆறாவது கல்லறைகள் விக்ரமராச சிங்கரின் மற்ற மனைவிகனுடையவை எனக் கல்வெட்டுகள் கூறுகின்றன. ஏழாவது கல்லறை விக்ரம ராசசிங்கரின் பட்டத்தரசிசாவித்திரி தேவி உடையது ஆகும். இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் கல்லறை முத்து மண்டபமாக, உரூபாய் ஏழு இலட்சம் மதிப்பில் தமிழக அரசால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த முத்து மண்டபம் பரப்பளவு 2.12 [[ஏக்கர்]] ஆகும். அதன் டவன் சர்வே எண் 1786 ஆகும். இத்தகவல்கள் அனைத்தும் தமிழக அரசின் ஆவணத்தின் வழி உருவாக்கப் பட்டன. <ref>https://vellore.nic.in/ta/gallery/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/</ref>
 
 
=== ஏலகிரிமலை ===
"https://ta.wikipedia.org/wiki/வேலூர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது