உளநோய் மருத்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி →‎காரணங்கள்: https://www.medicinenet.com/mental_health_psychology/article.htm
வரிசை 5:
 
== காரணங்கள் ==
இக்காலத்தில் உளநோய்கள் மூன்று காரணங்களால் ஏற்படுவதாக அறிந்துளர், அவை உளவியல் காரணம், பௌதிக காரணம், உடற்காரணம் என்பனவாகும்.<ref>https://www.medicinenet.com/mental_health_psychology/article.htm</ref> பொதுவாக எந்த உளநோயும் இந்த மூன்று காரணங்களுள் ஏதேனும் ஒன்றினால் மட்டும் உண்டாவதில்லை. எடுத்துக்காட்டாக, வேலையின்மையால் ஊட்டக்குறை (பௌதிக காரணம்) ஏற்படலாம், அல்லது நோயாளியின் தன்னம்பிக்கையைச் (உளவியல் காரணம்) சிதைக்கலாம். ஊட்டக்குறைவு உடல்நலத்தை குறைத்து உளநலத்தைச் சிதைக்கலாம். இந்த மூன்று காரணங்களுள் ஏதேனும் ஒன்று முதன்மையாக இருக்கலாம். சில வேளைகளில் [[உள பௌதிகம்|உளநோய் பௌதிக]] காரணங்களால் உண்டாயிருந்தபோதிலும் அந்த உளநோயின் குறைகளை விலக்குவதற்கு நோயாளியின் வாழ்க்கை வரலாற்றை அறிதல் தேவையாகும். பாம்பு என்பதைப் பாராமலோ, கேளாமலோ இருப்பவர் யாரும் பழுதையைப் பார்த்துப் பாம்பு என்று கூற முடியாது. நோயாளியின் வரலாற்றை அறிவதோடு அவருடைய பாரம்பரியத்தையும் அறிதல் தேவையாகும்.இவ்வாறு உளநோய்க் குறிகளை உண்டாக்குவதற்கு மேற்கூறிய மூன்றுவகைக் காரணங்கள் தேவையாயிருப்பதால் உளநோய் மருத்துவத்தைப் பொது மருத்துவத்தின் ஒரு பகுதியாகவே கருதவேண்டும். ஆதலால் உளநோய் மருத்துவர் பொது மருத்துவப் பயிற்சி பெற்றவராயிருத்தல் இன்றியமையாததாகும்.
 
உளநோய்களுக்கு மேற்கூறிய மூன்றுவகைக் காரணங்களும் தேவையேயாயினும், உளநோய்க் குறிகளைப் பெரும்பாலும், உண்டாக்குவன உள்ளக்கிளர்ச்சிக் (Emotions) குழப்பங்களேயாகும். [[உணர்ச்சி|உள்ளக்கிளர்ச்சிகளுள்]] மிகுந்த [[ஆற்றல்|ஆற்றலுடையதும்]] பெரும்பான்மையான உளநோய்களை உண்டாக்குவதுமான உள்ளக்கிளர்ச்சி அச்சமேயாகும். ஆனால் நம்பிக்கை, கோபம், அருவருப்பு முதலிய உள்ளக்கிளர்ச்சிகளும், அவற்றை வெளிப்படுத்த முடியாதவாறு தடுக்கக்கூடிய தடைகள் ஏற்படுமானால் உளநோய்க் குறிகளை உண்டாக்கிவிடும். உளநோய்க்குரிய உளவியல் காரணங்கள் நோயாளிக்கு ஏற்பட்ட சந்தர்ப்ப முரணால் ஏற்படுவதைவிட நோயாளியின் ஆளுமையினாலும் (Personality), வரலாற்றினாலும் ஏற்படுகின்றன என்று அறியவேண்டும். ஒரேவித நிகழ்ச்சி ஒருவரிடம் உளச்சோர்வையும் மற்றொருவரிடம் எதிர்ப்புத் தன்மையையும் உண்டாக்குவதற்குக் காரணம் அவரவர் ஆளுமையிலும், வாழ்க்கை முறையிலும், வருங்கால நோக்கத்திலும் காணப்படும் வேற்றுமையேயாகும். ஆகவே நோயாளி புறத்தே அடையும் வாய்ப்புக் குறைவால் ஏற்படும் உள்ளக்கிளர்ச்சிகளைவிட அவருடைய உள்ளத்தே குறிக்கோள், நோக்கம், விருப்பம் முதலியவைபற்றி உண்டாகும் உள்ளக்கிளர்ச்சிகளே உளநோய்களை உண்டாக்கும் முக்கிய காரணங்களாகும்.
வரிசை 11:
தம்முடைய உளத்தில் உண்டாகும் முரண்களின் தன்மையைப் பெரும்பாலோர் அறியமாட்டார்கள். அல்லது தவறாக எண்ணிக்கொள்வார்கள். ஒருவனுக்கு [[செரிமானம்|சீரணக் கோளாறு]] உண்டாயிற்று. அதற்குக் காரணம் அவன் கலியாணமான பெண் ஒருத்தியை விரும்பியதே என்பதை அவன் அறியவில்லை. மருந்து உட் கொண்டும் பயன் பெறவில்லை. இறுதியில் உண்மையான காரணத்தை அறிந்து அந்த விருப்பத்தை நீக்கினான் ; சீரணம் சரியாக நடைபெற்றது.பொதுவாக மனிதன் தன்னுடைய உடலைப்பற்றியும் தன்னுடைய உளத்தைப்பற்றியும் தானே ஆய்ந்தறியும் பண்புடையவனாயில்லை. இவ்வாறு தன்னைத்தான் அறியாதிருத்தல் சாதாரண மக்களிடந்தான் காணப்படும் என்பதில்லை. தன்னை அறிந்து கொண்டிருப்பதாகப் பெருமை பேசுவோரிடமும் காணப்படும்.
 
மேலும், தன்னைத்தானே ஆய்ந்து மதிப்பிடுதல் என்பது எளிதான செயலுமன்று. ஒருவன் அவ்வாறு தன்னையே ஆராய்ந்தாலும் அவனுடைய ஆசைகளும் நம்பிக்கைகளும் நோக்கங்களும் அவனுடைய முடிவுகளைப் பாதித்துவிடுகின்றன. அதிலும் அவன் காணும் முடிவுகள் கசப்பானவைகளாக இருந்தால் அவன் தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டு, ஒரு காரணமிருக்க மற்றொரு காரணத்தைக் கூறுவான், தலைவனை முன்கோபி என்று தொழிலாளிகள் கூறுவர். ஆனால் அவனோ கட்டுப்பாட்டை நிறுவுபவனாகவே தன்னை எண்ணிக்கொள்வான். இவ்வாறு தம் ஆய்வைத் தவறானதாகச் செய்யும் காரணங்களே நினைவு கூர்தல் என்ற செயலையும் சீர் கெடச் செய்கின்றன.
 
== மனப்பதிவுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/உளநோய்_மருத்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது