லைடன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 2:
[[படிமம்:Ltspkr.png]]'''[[ஊடகம்:Nl-Leiden.ogg|லைடன்]]''', தென் ஹாலந்து மாகாணத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். அருகில் உள்ள சிற்றூர்களையும் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ள லைடன் நகராட்சியில் 2,54,00 பேர் வசிக்கின்றனர். பழைய ரைன் ஆற்றை ஒட்டியும் [[டென் ஹாக்]], ஹார்லெம் நகரங்களுக்கு அருகிலும் லைடன் அமைந்துள்ளது. லைடன் 1575 முதலே ஒரு பல்கலைக்கழக நகரமாக இருந்து வருகிறது. 2017 ஆம் ஆண்டில் ஆகத்தில் இல் லைடன் நகராட்சியின் மக்கள் தொகை 123,856 ஆக இருந்தது. இந் நகரிலும் அதன் புறநகர்ப் பகுதிகளான ஓக்ஸ்ட்ஜீஸ்ட், லீடர்டார்ப், வூர்சோட்டன் மற்றும் ஜூட்டர்வூட் என்பவற்றிலும் சேர்த்து 206,647 மக்கள் வசிக்கின்றனர்.<ref>{{Cite web|url=https://opendata.cbs.nl/statline/|title=CBS Statline|website=opendata.cbs.nl|language=nl|access-date=2019-11-06}}</ref> இந்த நகரம் ஹேடில் இருந்து தெற்கே சுமார் 20 கிலோமீற்றர் (12 மைல்) தொலைவிலும், ஆம்ஸ்டர்டாமில் இருந்து அதன் வடக்கே சுமார் 40 கிமீ (25 மைல்) தொலைவிலும் ஓடன் ரிஜனில் அமைந்துள்ளது. காக் ஏரிகளின் ( காகர் ப்ளாசென் ) பொழுதுபோக்கு பகுதி லைடனின் வடகிழக்கில் அமைந்துள்ளது.
 
1575 ஆம் ஆண்டு முதல் ஒரு பல்கலைக்கழக நகரமாக இருந்து வருகிறது. லைடன் நான்கு நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பாவின் மிக முக்கியமான அறிவியல் மையங்களில் ஒன்றாகும். லைடன் இந்த நகரம் முழுவதிலும் பல்கலைக்கழக கட்டிடங்கள் ஏராளமாக காணப்படுகின்றன. இந் நகரில் உலகம் முழுவதிலுமிருந்து பல மாணவர்கள் வருகை தந்து சர்வதேச சூழ்நிலையை அளிக்கின்றனர். பல முக்கியமான அறிவியல் கண்டுபிடிப்புகள் இங்கு இடம் பெற்றுள்ளன. லைடன் கண்டுபிடிப்புகளின் நகரமாக திகழ்கின்றது. இந்த நகரத்தில் நெதர்லாந்தின் பழமையான பல்கலைக்கழகமான லைடன் பல்கலைக்கழகம் மற்றும் லைடன் பல்கலைக்கழக மருத்துவ மையம் அமைந்து உள்ளன. லைடன் பல்கலைக்கழகம் ஐரோப்பாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். இது பதிமூன்று நோபல் பரிசு வாகையாளர்களை வழங்கிய பல்கலைக்கழகமாகும். இந்த பல்கலைக்கழகம் ஐரோப்பிய ஆராய்ச்சி பல்கலைக்கழகங்களின் லீக்கில் உறுப்புரிமை பெற்ற பல்கலைக்கழகம் ஆகும். அனைத்து சர்வதேச கல்வி தரவரிசைகளிலும் உயர்ந்த இடத்தில் உள்ளது. இது ஐக்கிய இராச்சியத்தின் பழமையான பல்கலைக்கழகத்தின் இருப்பிடமான ஆக்ஸ்போர்டுக்கு நிகரானதாகும். லைடன் பல்கலைக்கழகம் மற்றும் லைடன் யுனிவர்சிட்டி ஆஃப் அப்ளைடு சயின்சஸ் ஆகியவை சுமார் 35,000 மாணவர்களைக் கொண்டுள்ளன. நவீன அறிவியல் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் 18 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் லைடனில் போயர்ஹேவுடன் தொடங்கியது.
 
லைடன் அறிவியலில் மட்டுமல்லாமல் கலைகளிலும் வளமான கலாச்சார பாரம்பரியம் கொண்ட நகரம் ஆகும். உலகின் புகழ்பெற்ற ஓவியர்களில் ஒருவரான ரெம்ப்ராண்ட் லைடனில் பிறந்து கல்வி கற்றார். பிரபலமான ஓவியர்களான லூகாஸ் வான் லேடன் , ஜான் வான் கோயன் மற்றும் ஜான் ஸ்டீன் என்போர் லைடனை சேர்ந்தவர்கள்.
வரிசை 19:
== சான்றுகள் ==
[[பகுப்பு:நெதர்லாந்தின் நகரங்கள்]]
<references />
 
== வெளி இணைப்புகள் ==
[http://www.leiden.nl/ அதிகாரப்பூர்வ இணையத்தளம்]
 
== மூலம் ==
Lourens, Piet; Lucassen, Jan (1997). ''Inwonertallen van Nederlandse steden ca. 1300–1800''. Amsterdam: NEHA. ISBN <bdi>9057420082</bdi>.
"https://ta.wikipedia.org/wiki/லைடன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது