சின்னத் தம்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 27:
ஒரு நாள் சின்னத்தம்பி நந்தினியின் மெய்க்காப்பாளர்களோடு சண்டையிட்டு அவர்களைத் தோற்கடிக்கிறான். நந்தினியின் மெய்க்காப்பாளராக இருப்பதற்கு சின்னதம்பியே சரியானவன் என்று நினைத்த நந்தினியின் அண்ணன் அவனுக்கு வேலை கொடுக்கிறார். தனிமையில் வளர்ந்த நந்தினி, வெளியில் சுற்றிப்பார்க்க நினைக்கிறாள், அதனால் அவள் தன் அண்ணன்களுக்குத் தெரியாமல் ஊரைச் சுற்றிப்பார்க்க சின்னத்தம்பியுடன் செல்கிறாள்.
 
ஒரு நாள், நந்தினியைப் பார்த்த ஒரு தொழிற்சாலை தொழிலாளி தண்டிக்கப்படுகிறான். இதனால்சஇதனால் அவமானமடைந்த அந்தத் தொழிலாளி அந்த சகோதரர்களுக்குச் சொந்தமான புதிய தொழிற்சாலையின் திறப்புவிழாவில் நந்தினியை கொல்லத் திட்டமிட்டுள்ளார். சின்னத் தம்பி அந்த சதித்திட்டத்தைக் அறிந்து, சரியான நேரத்தில் நந்தினியை காப்பாற்றுகிறான். நடந்ததை அறியாத நாயகியின் சகோதரர்கள், சின்னத்தம்பி நந்தினியைத் தொட்டு தூக்கியதைக் கண்டு கோபமடைந்து அடிக்கின்றனர். நந்தினி அவர்களைத் தடுத்து நிறுத்தி, உண்மைகளைச் சொல்கிறாள். பிறகு சின்னத தம்பி தனது வேலையை விட்டு விலகவே, அன்று இரவு நந்தினி சின்னத்தம்பியை சந்திப்பதற்கும், மன்னிப்புக் கேட்கவும், அவனை வேலைக்கு வரும்படி அழைக்கவும் செல்கிறாள். சின்னத்​​தம்பி அவளது சகோதரர்களின் வன்முறையைக் கண்டு அவர்களுடன் இருக்க விரும்பவில்லை என மறுக்கிறார். இதில் இருந்து தப்பிக்க தனக்கு தாலி கட்டுமாறு நந்தினி கூறுகிறாள். அப்பாவியான சின்னத்தம்பியும், திருமணம் செய்கிறோம் என்று அறியாமல் தாலி கட்டிவிடுகிறான்.
 
சின்னத தம்பி மீண்டும் வேலைக்கு வருகிறான், நந்தினியின் உயிரைக் காப்பாற்றியதற்காக சகோதரர்கள் சின்னத்தம்பிக்கு விருந்து அளிக்கின்றனர். நடந்ததை அறியாக நாயகியின் சகோதரர்கள், நாயகிக்கு திருமணம் செய்விக்க முன்வருகின்றனர். சுமங்கலி பூஜை அன்று அனைத்துப் பெண்கள் முன்பும் சின்னத்தம்பியிடம் ’நமக்கு நடந்தது திருமணம்’ என்று புரியவைக்க முயல்கிறாள் நாயகி நந்தினி. இதைக் கண்ட அவளது அண்ணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு, நந்தினியின் அண்ணன்கள் அவளுக்கு மணமகனை பார்த்துவிட்டதாகவும் அவரைப் பற்றி சின்னத்தம்பியைப் பாடுமாறும் கூற, நாயகன் பாட, உணர்ச்சிவசப்பட்ட நாயகி நாயகனை கட்டித்தழுவுகிறார். நடந்தவற்றை அறிந்த ந்நந்தினியின் மூத்த அண்ணன் சின்னத்தம்பியை அவளுக்கு ஊரறிய திருமணம் செய்து வைப்பதாக பொய் கூறுகிறார். இதனால் நந்தினி மகிழ்கிறாள். பிறகு அவள் சகோதரர்களோ, சின்னத்தம்பியைக் கொன்றுவிட்டால் அவன் கட்டிய தாலி தானாக இறங்கிவிடும் என்று நினைக்கின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/சின்னத்_தம்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது