வேளாண்மை அறிவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 37:
 
வளரும் நாடுகளில் 1960 களுக்குப் பின்னரே பசுமைப் புரட்சி எனப்பட்ட செறிநிலை வேளாண்மை உருவாக்கப்பட்டது; இது உயர்விளைச்சலுக்காக பயிர்களையும் விலங்குகளையும் தேர்ந்தெடுத்து வளர்ப்பதில் ஏற்பட்ட முன்னேற்றங்களோடும் செயற்கை உரங்களையும்[[தீங்குயிர்கொல்லி]]களைக் கூடுதலாகப் பயன்படுத்துவதோடும் நெருக்கமான உறவு பூண்டிருந்தது.
 
இயற்கையை இடைமறித்த மிகப் பழழையதும் பேரளவிலானதுமான வேளாண்மைத் தொழில் இருப்பதால், வேளாண்மை சுற்றுச்சூழலைப் பெரிதும் தாக்கமுறச் செய்துள்ளது. குறிப்பாக அண்மைக் கால [[செறிநிலை வேளாண்மை]]யும் பொதுவான தொழில் வளர்ச்சியும் மக்கள்தொகை வளர்ச்சியும் வேளாண்மை அறிஞரிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளன. இந்நிலை பல புதிய அறிவியல் புலங்கள் தோன்ற காரணமாகிவிட்டது. இவற்றில் ஒருங்கிணைந்த தீங்குயிர் மேலாண்மை, கழிவு மேலாண்மை, நிலக் கிடப்பியல், மரபன்தொகையியல், வேளாண்மை மெய்யியல், பொருளியல் விளைபொருளாக அமையாத உணவாக்கத் தொழில் சார்ந்த சிக்கல்களைத் தீர்க்கும் வழிமுறைகள் ஆகியவை உள்ளடங்கும். உண்மையில், சுற்றுச்சூழல் தாக்கத்துக்கும்வேளாண்மை வளர்ச்சிக்கும் இடையிலான ஊடாட்டங்கள் வேளாண்மை அறிவியலை மேலும் ஆழமாக புரிந்துகொள்ளவேண்டிய கட்டாயத் தேவையை உருவாக்கியுள்ளது.
 
உயிரித் தொழில்நுட்பம், கணினி அறிவியல், தகவல் கையாளலும் தேக்குதலும் போன்ற புதிய தொழிநுட்பங்களும் இக்காலத் தொழிநுட்ப முன்னேற்றங்களும் மரபணுப் பொறியியல், வேளாண் இயற்பியல், மேனிலைப் புள்ளியியல் துல்லியமான வேளாண்மை போன்ற புதிய ஆராய்ச்சிப் புலங்களை உருவாக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளன . வேளானமையில் மாந்தன் இயற்கை ஊடாட்டம் சார்ந்த இயற்கை, சமூக அறிவியல் புலங்களும் வேளாண்மை வரலாறு, மரபு வேளாண்மை, வேளாண்மை-சமயம் வேளாண் விளைச்சல் அமைப்புகளின் பொருள்சாரா கூறுகள் ஆகியவற்றின் புரிதலை மேம்படுத்தியுள்ளன .
 
==மேலும் படிக்க==
"https://ta.wikipedia.org/wiki/வேளாண்மை_அறிவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது