பயனர்:கி. கார்த்திகேயன்/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
எழுத்துப் பழக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

19:18, 2 பெப்பிரவரி 2020 இல் நிலவும் திருத்தம்

திருமுதுகுன்றம் கோயில் வரலாறு, கல்வெட்டுகள் - ஒரு பார்வை

தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில் பாடல்பெற்ற தலங்கள் மிக முக்கியமானவை. அதில் நடுநாட்டுத் திருத்தலங்களின் சிறப்போடு விளங்கும் சிவாலயம் தற்போது விருத்தாசலம் என்றழைக்கப்படும் திருமுதுகுன்றமும் பழமலைநாதர் கோயிலும் ஒன்று. உள்ளுர் மக்களால் பெரிய கோயில்(தஞ்சை பெருவுடையார் கோயிலை போல்) என்று அழைக்கப்படும் இத்திருக்கோயில் பெயருக்கேற்றார்போல் அளவில் மிகப்பெரிய கோயிலேயாகும்


வாய்வழிச் செய்திகள்

காசிக்கு வீசம் புண்ணியம் அதிகம்


ஊர் பெயர்கள்

விருத்தாசலம் (வடமொழிச்(சமஸ்கிருத) சொல் : விருத்தம் - பழமை, அசலம் - மலை. வேதாசலம் - மறைமலை, தணிகாசலம் - தணிகைமலை போல..)

திருமுதுகுன்றம்

விருத்தகாசி

நெற்குப்பை


இறைவனுக்கும் இறைவிக்கும் வழங்கப்படம் பெயர்கள்

விருத்தகிரீஸ்வரர்

பழமலைநாதர்

முதுகுன்றமுடையார்

விருத்தாம்பிகை

பெரிய நாயகி

பாலாம்பிகை

இளையநாயகி


தலமரம் - வன்னி

தீர்த்தம் - மணிமுத்தாறு, அக்கினி, குபேர, சக்கர தீர்த்தங்கள்


பாடல் பெற்ற தலம்:

தேவார மூவர்களான அப்பர்(திருநாவுக்கரசர்), சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகியோரும், அருணகிரிநாதர், குருநமசிவாயர், சிவப்பிரகாசர், இராமலிங்க வள்ளலார் முதலியோராலும் பாடப்பெற்ற தலம் இது.


இக்கோயில் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் அரசர்களின்/குறுநில மன்னர்களின் பெயர்கள்:

சோழ மன்னர்கள்

பராந்தக சோழன்

கண்டராதித்த சோழன்

உத்தம சோழன்

முதலாம் இராசராச சோழன்

முதலாம் இராசேந்திர சோழன்

குலோத்துங்க சோழன்


சோழமன்னர்கள் தவிர்த்த ஏனையவர்கள்

காடவராயன்

கச்சிராயன்

அரியண்ண உடையார்

பருவூர் பாளையக்காரர்


சோழர்கால ஆடலரசர் சிலை;

வேறெங்கும் இலாதவாறு கங்கை ஒரு தனி உருவமாய் ஐம்பொன் சிலையில்


5-எண் சிறப்பு

5 கோபுரம்

5 தேர்

5 நந்தி

5 கொடிமரம்


முக்கிய திருவிழாக்கள்;

மாசிமகப் பெருவிழா

ஆடிப்பூரம்

ஆருத்ரா தரிசனம்

பிரதோஷம்

சிவராத்திரி

ஆனித்திருமஞ்சனம்


கட்டுரைக்கு அப்பாற்பட்டு சில தகவல்கள்

இத்திருத்தலம் கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலத்தில் அமைந்துள்ளது. இவ்வூரை அடைவதற்கு சென்னை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர், மதுரை என தமிழகத்தின் முக்கிய நகரங்கள் பலவற்றிலி இருந்தும் நேரடி பேருந்து வசதி உள்ளது. சென்னையில் இருந்து தெற்கு நோக்கிச் செல்லும் அத்தனை தொடர்வண்டிகளும் விருத்தாசலம் தொடர்வண்டி சந்திப்பில் நின்று செல்லும். மேலும் கடலூர், விழுப்புரம் மற்றும் சேலம் ஆகிய நகரங்களில் இருந்தும் விருத்தாசலம் வர தொடர்வண்டி (விரைவு, அதிவிரைவு மற்றும் பயணியர் தொடர்வண்டிகள்) வசதி உண்டு. முதுகுன்றமுடையார் கோயில் விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் இருந்து 1 கி.மீ தொலைவிலும், தொடர்வண்டி சந்திப்பில் இருந்து 2 கி.மீ தொலைவிலும் உள்ளது, இவ்விரு இடங்களிலிருந்தும் கோயிலை அடைய பேருந்து மற்றும் தானிகளும்(Auto) கிடைக்கும்.

கூகுள் வரைபடம் - https://goo.gl/maps/zzwXEvHXk7Vb29CN9 (கூகுள் தவிர்த்த பிற தளங்களில் காண - https://tinyurl.com/sn2atb7)

புவியியல் புள்ளிகள்;

DMS - 11° 31′ 1.02″ N, 79° 19′ 12.74″ E

Decimal - 11.51695, 79.320205

Geo URI geo:11.51695,79.320205

முகவரி - அ/மி பழமலை நாதர் திருக்கோயில், விருத்தாசலம், கடலூர் மாவட்டம் - 606001

தொலைபேசி எண் ; 04143 230 203