யூரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 262:
 
அகற்றல் கோட்பாட்டுச் செயல்முறை ஒரு பெரிய முன்னேற்றத்தைக் கொடுப்பதாக இருந்தது. போட்டியாளர்களான இத்தாலியின் சாய்பெம் என்றழைக்கப்படும் சினாம்ப்ரோகெட்டி நிறுவனம், முன்னாள் மாண்டெடிசன் என்ற இத்தாலிய நிறுவனம், சப்பானைச் சேர்ந்த டொயோ பொறியியல் கார்ப்பரேசன் நிறுவனம் மற்றும் சுவிட்சர்லாந்தின் காசலே நிறுவனம் போன்ற அனைத்து போட்டி தயாரிப்பாளர்களும் இக்கோட்பாட்டின் வளர்ச்சியடைந்த பதிப்புத் திட்டத்தையே பயன்படுத்துகின்றன. இன்று, அனைத்து புதிய யூரியா தொழிற்சாலைகளும் திறம்பட இக்கொள்கையைப் பயன்படுத்துகின்றன. மேலும் பல மறுசுழற்சி யூரியா தொழிற்சாலைகள் அகற்றும் செயல்முறை தொழிற்சாலைகளாக மாறியுள்ளன. இந்த அணுகுமுறைக்கு எதிரான ஒரு தீவிர மாற்றுத்திட்டத்தை எவரும் முன்மொழியவில்லை. பெரிய தனிநபர் ஆலைகளுக்கான தொழில்துறை கோரிக்கைகளுக்கு விடையிறுக்கும் வகையில் தொழில்நுட்ப வளர்ச்சியின் முக்கிய உந்துதல், தொழிற்சாலையின் முக்கிய பொருட்களை மறு கட்டமைத்தல் மற்றும் மாறுபட்ட நிலைக்குத் தக்கவாறு மறு- திசை திருப்புதல் போன்ற செய்ல்பாடுகளை மேற்கொள்வதாகும். இதன் விளைவாக தொழிற்சாலையின் அளவும் ஒட்டுமொத்த உயரமும் குறைக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் செயல்திறனை எதிர்கொள்வதற்கான திறனும் மேம்படுகிறது <ref>{{cite conference | vauthors = Gevers B, Mennen J, Meessen J | year = 2009 | title = Avancore – Stamicarbon's New Urea Plant Concept | conference = Nitrogen+Syngas International Conference | location = Rome | pages = 113–125}}</ref><ref>{{cite journal|url=http://www.bcinsight.com/sitemap_issue_articles.asp?issueID=229|title=World Class Urea Plants|journal=Nitrogen+Syngas|volume=294|pages= 29–38 |year=2008}}</ref>.
 
=== பக்க வினைகள் ===
 
யூரியா மாற்று வினை மெதுவாக நிகழ்வது நன்மையாகும். இல்லையென்றால் அகற்றியில் இவ்வினை தலைகீழாக நிகழும். அதைப் போலவே, வினை செயல்முறையின் அடுத்த கட்டங்கள் வினையிலிருக்கும் நேரத்தை குறைக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் வெப்பநிலை தலைகீழ் வினையை மிகவும் மெதுவாக நிகழும் புள்ளி வரையாவது நேரம் குறைய வேண்டும்.
இரண்டு வினைகள் அசுத்தங்களை உருவாக்குகின்றன. யூரியாவின் இரண்டு மூலக்கூறுகள் அமோனியாவின் ஒரு மூலக்கூறு இழப்புடன் இணைந்தால் [[பையூரெட்]] உருவாகிறது.
:2 NH<sub>2</sub>CONH<sub>2</sub> → H<sub>2</sub>NCONHCONH<sub>2</sub> + NH<sub>3</sub>
 
பொதுவாக இந்த வினை அமோனியாவை அதிகமாக பராமரிப்பதன் மூலம் தொகுப்பு உலையில் அடக்கப்படுகிறது. ஆனால் அகற்றிக்குப் பின்னர் வெப்பநிலை குறையும் வரை இது நிகழ்கிறது. உர யூரியாவில் பையூரெட் விரும்பத்தகாதது ஏனெனில் இது தாவரப் பயிர்களுக்கு நச்சுத்தன்மையுடையதாகும். இருப்பினும் பயிரின் தன்மை மற்றும் யூரியாவைப் பயன்படுத்தும் முறை ஆகியவற்றைப் பொறுத்து இது அமைகிறது <ref>James, G.R.; Oomen, C.J.: "An Update on the Biuret Myth". ''Nitrogen 2001'' International Conference, Tampa.</ref>. ஒரு கால்நடை தீவனமாகப் பயன்படுத்தப்படும்போது யூரியாவில் பையூரெட் இருப்பது உண்மையில் வரவேற்கப்படுகிறது.
 
[[அம்மோனியம் சயனேட்டு]] வெப்பச் சிதைவுக்கு உட்பட்டு [[சமசயனிக் அமிலம்|ஐசோசயனிக் அமிலம்]] உருவாகிறது. இது யூரியாவுடன் வேதிச்சமநிலையில் உள்ளது.
 
:NH<sub>2</sub>CONH<sub>2</sub> → NH<sub>4</sub>NCO → HNCO + NH<sub>3</sub>
 
யூரியா கரைசலை குறைந்த அழுத்தத்தில் சூடாக்கும்போது இந்த வினை மிக மோசமாக உள்ளது. இக்கரைசலை சிறுசிறுகட்டிகளாகவும் மணிகளாகவும் ஆக்குவதற்காக அடர்த்தியாக்கும் போது இது நிகழ்கிறது.
வினை தயாரிப்புகள் பெரும்பாலும் அளவுக்கதிமாகவே ஆவியாகின்றன. மேலும் இவை சுருங்கி மீண்டும் யூரியாவை உருவாக்கும் போது மீண்டும் ஒன்றிணைகின்றன. இது ஆவியாக்கும் செயல்முறையை மாசுபடுத்துகிறது.
 
=== அரிப்பு ===
 
அம்மோனியம் கார்பமேட்டு கரைசல்கள் உலோக கட்டுமானப் பொருட்களில் அரிப்பை ஏற்படுத்துகின்றன. துருப்பிடிக்காத எஃகு போன்ற அரிப்பை எதிர்க்கும் வடிவங்களையும் குறிப்பாக அகற்றி போன்ற வினையமைப்பின் வெப்பமான பகுதிகளையும் இவை அரிக்கின்றன, வெளிப்படும் எஃகு மேற்பரப்பில் ஒரு செயலற்ற ஆக்சைடு அடுக்கை நிறுவுவதற்கும் பராமரிப்பதற்கும் ஒரு சிறிய அளவு ஆக்சிசனை காற்றாக தொடர்ந்து உட்செலுத்துவதன் மூலம் முற்றிலுமுமாக அகற்றப்படவில்லை என்றாலும் அரிப்பு குறைக்கப்பட்டு வருகிறது. கார்பன் டை ஆக்சைடு வினைபடு பொருள் அம்மோனியா தொகுப்பு வாயுவிலிருந்து மீட்கப்படுவதால் அதில் ஐதரசனின் தடயங்கள் கலந்துள்ளன. அவை செயலற்ற காற்றோடு ஒன்றிணைய அனுமதித்தால் திரண்டு வெடிக்கும் கலவையை உருவாக்குகின்றன.
 
1990 ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் இரண்டு இரட்டை (ஃபெரிடிக்-ஆசுடெனிடிக்) எஃகுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. டிபி28டபிள்யூ எனப்படும் இரட்டை எஃகை டோயோ நிறுவனமும் சுமிடோமோ மெட்டல்சு தொழிற்சாலையும் இணைந்து உருவாக்கின <ref>{{cite journal|author=Nagashima, E. |year=2010|title=Use of DP28W Reduces Passivation Air in Urea Plants|journal=Nitrogen+Syngas |volume=304|pages=193–200|url=http://www.bcinsight.com/sitemap_issue_articles.asp?issueID=264}}</ref>, அதேபோல சாபுரெக்சு இரட்டை எஃகை சிடாமிக்கார்பன் நிறுவனமும் சுவீடனைச் சேர்ந்த சாண்ட்விக் மெட்டீரியல்சு தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து உருவாக்கின <ref>Kangas, P.; Walden, B.; Berglund, G.; Nicholls, M. (to Sandvik AB): "Ferritic-Austenitic Stainless Steel and Use of the Steel". WO 95/00674 (1995).</ref><ref>{{cite journal | vauthors = Eijkenboom J, Wijk J | year = 2008 | title = The Behaviour of Safurex | url =http://www.bcinsight.com/sitemap_issue_articles.asp?issueID=243 | journal = Nitrogen+Syngas | volume = 295 | issue = | pages = 45–51 }}</ref>). இவை செயலற்ற ஆக்சிசன் திரளும் அளவைக் கடுமையாகக் குறைக்கின்றன. கோட்பாட்டின்படி அவை ஆக்சிசன் இல்லாமல் செயல்படுகின்றன.
 
சாய்பெம் இப்போது [[சிர்க்கோனியம்]] அகற்றி குழாய்கள் அல்லது மலிவான ஆனால் குறைந்த அரிப்பு-எதிர்ப்பு கொண்ட டைட்டானியத்துடன் உலோகவியல் ரீதியாக பிணைக்கப்பட்ட உட்புற சிர்க்கோனியப் பூச்சு ஈருலோக குழாய்கள் போன்றவற்றைப் பயன்படுத்துகிறது.
 
இந்த குழாய்களை [[அமெரிக்கா]]வைச் சேர்ந்த ஏடிஐ வா சாங் நிறுவனம் அதன் ஒமேகாபாண்ட் நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கிறது <ref>Allegheny Technologies, Inc. (2012) "Increasing Urea Plant Capacity and Preventing Corrosion Related Downtime". ATI White Paper (8/27/2012)</ref>.
 
=== இறுதி ===
இறுதியாக யூரியாவை சிறு கட்டிகள், துகள்கள், படிகங்கள் மற்றும் கரைசல்களாக உற்பத்தி செய்யலாம்.
 
=== திண்ம நிலை ===
உர யூரியா என்ற முக்கிய பயன்பாட்டிற்கு பெரும்பாலும் திண்மநிலை வடிவத்தில் யூரியா விற்பனை செய்யப்படுகிறது. சிறுகட்டிகள் அல்லது துகள்கள் திண்மநிலை யூரியா வகைகளாகும், சிறு கட்டிகள் தயாரித்தலின் நன்மை என்னவென்றால் பொதுவாக, அவை துகள்களை விட மலிவாக உற்பத்தி செய்யப்படுகின்றன. திருப்திகரமான யூரியா மணிகள் செயல்முறை வணிகமயமாக்கப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே இந்த நுட்பம் தொழில்துறை நடைமுறையில் உறுதியாக நிறுவப்பட்டது. இருப்பினும், விரும்பிய அளவிலான கோளத்தன்மை மற்றும் அவற்றின் குறைந்த நசுங்கும் தன்மை, மொத்த சேமிப்பு, கையாளுதல் மற்றும் பயன்பாட்டின் போது கட்டிகளின் செயல்திறன் போன்ற பொதுவான காரணங்களால் இவை யூரியா மணிகளை விட தாழ்வானதாகக் கருதப்படுகிறது<ref>{{cite journal|url=http://www.bcinsight.com/sitemap_issue_articles.asp?issueID=220|title=Prills or granules?|journal=Nitrogen+Syngas|volume=292|pages= 23–27 |year=2008}}</ref>.
 
நவீனமயமான உரத் தொழிலின் தொடக்கத்திலிருந்தே பாசுப்பேட்டுகள் போன்ற பிற தனிமங்களுடன் இணைந்து நைட்ரசனை கொண்ட உயர்தரமான கலவை உரங்கள் வழக்கமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால் யூரியாவின் குறைந்த உருகுநிலை மற்றும் நீருறிஞ்சும் தன்மை காரணமாக யூரியாவை மட்டும் தனியாக மணிகளாக்க அதே தொழில்நுட்பத் தயாரிப்பு வகையைப் பயன்படுத்த துணிச்சல் தேவைப்பட்டது <ref>"Ferrara refines its granulation process". Nitrogen 219, 51–56 (1996)</ref>. ஆனால் 1970 ஆம் ஆண்டுகளின் இறுதியில் மூன்று நிறுவனங்கள் திரவப்படுத்தப்பட்ட படுக்கை மணிகளாக்கும் முறையை உருவாக்கின. இந்த துறையில் முதன்மையானது நெதர்லேண்ட்செ சிடிக்சிடோப் மாட்சாப்பிச் என்ற நிறுவனம் ஆகும், இது பின்னர் ஐதரோ அக்ரி நிறுவனத்தின் ஒரு பகுதியாகவும் தற்போது யாரா இன்டர்நேசனல் நிறுவனத்தின் பகுதியாகவும் மாறியது <ref>{{cite conference | vauthors = Bruynseels JP | year = 1981 | title = NSM's Fluidized-Bed Urea Granulation Process ''Fertilizer Nitrogen'' | conference = International Conference | location = London | pages = 277–288 }}</ref>. யாரா நிறுவனம் இறுதியில் இந்த தொழில்நுட்பத்தை உக்தே நிறுவனத்திற்கு விற்றது. உக்தேவின் உர தொழில்நுட்ப துணை நிறுவனம் இப்போது அதை சந்தைப்படுத்துகிறது. இதே நேரத்தில் டோயோ பொறியியல் கார்ப்பரேசன் நிறுவனமும் அதன் புதிய செயல்முறையை உருவாக்கியது <ref>Nakamura, S. (2007) "The Toyo Urea Granulation Technology". 20th Arab Fertilizer International Annual Technical Conference, Tunisia.</ref>. சிடாமிகார்பன் நிறுவனமும் அதன் புதிய மேம்படுத்தப்பட்ட தெளிப்பு தயாரிப்பு முறையில் முனைப்பு காட்டியது. இறுதியாக சிடாமிகார்பன் தொழில்நுட்பம் வெற்றிகரமாக சந்தைப்படுத்தப்பட்டது.
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/யூரியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது