இலங்கைத் திரைப்படத்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
[[சுஜாதா]]
[[பைசிக்கிள் ஹொரா]]

அன்றைய சிங்கள முன்னணித் திரையுலகத் தம்பதிகள் [[எடி ஜய மன்ன]], ருக்மணி தேவி. [[ருக்மணி தேவி]] இலங்கையரான தமிழ் நடிகை. இதே சமகால இலங்கைத் தமிழ்ப்படம்தான் [[குசுமலதா]]. 1951 ல் கொழும்பில் ஒரிரு திரையரங்குகளில் வெளியிடப்பட்டு, வெளியிடப்பட்ட அதே வேகத்தில் பெட்டிக்குள் முடங்கிய படம். பெயரைப் பார்த்தாலே இது தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட சிங்களப் படம் என்று தெரிகிறதல்லவா? எடி ஜய மன்ன, ருக்மணி தேவி நடித்த இப்படம் சென்னையில் தயாரான சங்கவுனு பிலிதுற என்ற சிங்களப் படத்தின் தமிழாக்கம்.

இலங்கையில் [[1950]] க்கு முன்னரே கூட, சினிமாப் படங்கள் எடுக்கப் பட்டிருக்கின்றன. அவற்றில் முக்கியமானவை ஆங்கிலப் படங்கள். 1930-1940களில் ஹாலிவுட் மற்றும் பிரிட்டிஷ் திரைப்படக் கம்பெனிகள் இலங்கையில் ஆங்கில சினிமாப்படங்கள் எடுத்திருக்கின்றன. அவற்றில் இன்றும் பேசப்படும் ஒரு படம் Bridge in the River Kwai. இலங்கையின் நீண்ட ஆறுகளில் ஒன்றான களனி கங்கையின் குறுக்கே கித்துல்கல என்ற இடத்தில் இப்படத்திற்கென ஆடு பாலம் ஒன்று கட்டப்பட்டது. அந்த இடத்தில் இன்றும்கூட இந்த இடத்தில்தான் 'த பிரிஜ் இன் த ரிவர் குவாய் படமாக்கப்பட்டது என்று எழுதப்பட்ட விளம்பரப் பலகை உண்டு. இதைவிட நினைவில் நிற்கும் மற்றொரு படம் ELEPHANT WALK. இது தேயிலைத் தோட்டச் சூழ்நிலையை பின்புலமாகக் கொண்டது. தென்னிந்தியத் தமிழர்களை தொழிலாளர்களாகக் கொண்ட ஒரு தேயிலைத் தோட்டத்தில் திடீரென்று காலரா நோய் பரவி விடுகிறது. அந்நோயைக் கட்டுப்படுத்த மருத்துவ வசதிகளோ, மருந்தோ இல்லாத அன்றைய நிலையில் ஆங்கிலத் துரையும் அவர் மனைவியும் எப்படிச் சமாளித்து நோயை விரட்டுகிறார்கள் என்பதுதான் கதை. படத்தின் கதாநாயகி பின்னாளில் உலகப் புகழ்பெற்ற நடிகை [[எலிசபெத் டெய்லர்]]. அவர் இப்படத்தில் தமிழ் பேசி நடித்திருக்கிறார். அவர் தனது சமையல்காரரிடம் பேசிய இரண்டு தமிழ் வார்த்தைகள் ''கொண்டு வா, கொண்டு வா'' ''கொண்டு போ, கொண்டு போ''.

அப்படத்தின் தமிழ்ப் பெண்கள் "பூமியில் மானிட ஜென்மம் எடுத்தும் ஓர் புண்ணியமின்றே..." என்று பாடிக் கொண்டே தேயிலைக் கொழுந்து எடுப்பார்கள்.

[[1950]]களில் கொழும்பில் தயாரான சிங்களப் படங்கள் கூட சென்னையில் தயாரான சிங்களப் படங்களுடன் போட்டியிட்டு வர்த்தக நோக்கில் வெற்றி பெற முடியவில்லை. ஆயினும் சொந்தப்படம் என்ற உணர்வின் உந்துதல்கள் சில உள்நாட்டுப் படங்களைக் காப்பாற்றின. அக்காலத்தில் கொழும்பில் தயாரிக்கப்பட்ட ஒரிரு தமிழ்ப்படங்களின் கதியும் அதுதான்.

இலங்கையில் முதன் முதலாக ஒரு சிங்களப்படத்தை எப்படி [[எஸ். எம். நாயகம்]] என்ற தமிழர் தயாரித்தாரோ அப்படியே சமுதாயம் என்ற 16 மி.மீ. தமிழ்ப்டத்தைத் தயாரித்தவர் அந்நாட்களின் முன்னணி சினிமாப்படத் தயாரிப்பாளர் [[ஹென்றி சந்திரவன்ஸ]] என்ற சிங்களர். அதன்பிறகு வந்த நூற்றுக் கணக்கான சிங்களப் படங்களில் இன்றும் நினைவில் நிற்பவை சத்சமுத்ர, ரன்சலு, கம்பெரலிய, (பிரபல நாவலாசிரியர் மார்ட்டின் விக்கிரமசிங்கவின் நாவல் இது. தமிழில் கிராமப் பிறழ்வு) அதட்டவைடிய ஹெட்ட ஒந்தாய், கொளுஹத்தவத்த.

சமுதாயம் படத்தில் நடித்தவர்களில் பலர் தோட்டப்பகுதி இளைஞர்கள். இவர்கள் சினிமாவில் நடிக்கிறோம் என்ற திரில்லுக்காகவே தொலைதூர இடங்களில் இருந்து தம் செலவிலேயே கொழும்புக்கு வந்து சென்றார்கள்.

சமுதாயம் தயாரிப்பில் இருந்த போதே பிள்ளையார் சுழி போடப்பட்ட படம் தோட்டக்காரி. சமுதாயம் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் [[வி. தங்கவேலு]] என்ற கொஸ்லாந்த பகுதி இளைஞர். இவரும் வேறு சிலரும் சமுதாயம் படத் தயாரிப்பாளர்களுடன் ஒத்துப் போகாததால் ஒதுங்கிவிட, அவர்களுக்குப் பதிலாக வேறு சிலரை நடிக்க வைத்து சமுதாயத்தை சந்திரவன்ஸ மறுபடியும் தயாரித்து வெளியிட்டார்.

தங்கவேலு சும்மா இருக்கவில்லை. அவர் தமது நண்பர் அருணனுடன் சேர்ந்து புரட்சி என்ற 35 மி.மீ. படத்தை உருவாக்க முயன்று அம்முயற்சியை பாதியிலேயே கைவிட்டுவிட்டார். அதற்குக் காரணம் அவரிடம் போதிய நிதிவசதி இல்லை. தவிர எஸ்.எம். நாயகம், கடல் கடந்த தமிழர் என்ற தமிழ்க் கலர் படத்தில் அவருக்கு முக்கிய வேடம் தரவிருந்ததையும் குறிப்பிட வேண்டும். ஆனால் அப்படத்துக்கு ஆரம்பப் பூஜைகூட போடப்படவில்லை.

அதன்பிறகு தங்கவேலு [[தோட்டக்காரி]] என்ற படத்தைத் தயாரித்தார். அதன் இயக்குனர் பி. எஸ். கிருஷ்ணகுமார். அவரே கதாநாயகனும்கூட. கதாநாயகி ஜெயஸ்ரீ என்ற சிங்களப் பெண். தங்கவேலுவிடம் எப்பொழுதெல்லாம் கையில் பணம் சேருகிறதோ அப்பொழுதெல்லாம் தோட்டக்காரி படப்பிடிப்பு கிரிபத் கொட நவஜீவன் ஸ்டுடியோவில் நடைபெறும். அப்படப்பிடிப்புகளில் தவறாது கலந்து கொண்ட இருபத்திரிகையாளர்களில் ஒருவர் அண்மைக்காலம் வரை ஹிந்து நாளிதழின் சிறப்பு நிருபராக பல ஊர்களில் கடமையாற்றி ஓய்வுபெற்ற நண்பர் ராமநாதன். மற்றவர் எஸ்.எம். கார்மேகம். இலங்கையின் சமகாலப் பத்திரிகையாளர்களாக இருந்தவர்கள்.

சமுதாயம்தான் முதலில் தயாரிக்கப்பட்ட படம் என்றாலும் முதலில் திரைக்கு வந்தது தோட்டக்காரிதான். சமுதாயமும் சரி, தோட்டக்காரியும் சரி,தென்னிந்தியத் தமிழ்ப் படங்களின் முன் தாக்குப் பிடிக்க முடியவில்லை. ஆயினும் அதற்காகத் தமிழ்ப் படத் தயாரிப்பு கைவிடப்பட்டு விடவில்லை. இன, மொழி உணர்வின் காரணமாக இலங்கையில் தயாரிக்கப்பட்ட படங்கள் தமிழ்மக்கள் அதிகம் வாழும் நாட்டின் வடக்கு, கிழக்கு, மற்றும் மத்திய மலைநாட்டில் நல்லாதரவு பெற்றன. சமுதாயம் படத்தை தயாரித்த சந்திரவன்ஸ அடுத்து, சுமதி எங்கே?, கீதாஞ்சலி என்ற இரு தமிழ்ப்படங்களின் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த போது காலமானார்.

தங்கவேலு சின்ன வயதிலேயே தமிழ் நாட்டில் சொந்த ஊரில் நாடங்களில் நடிப்பாராம். அவரது தந்தைக்கு இது பிடிக்கவில்லை. எனவே தந்தையுடன் கோவித்துக் கொண்டு [[1950]] ல் இலங்கைக்கு வந்து கண்டி, மாவனெல்ல. முதலான இடங்களில் பலசரக்குக் கடைகளிலும், சைவ ஓட்டல்களிலும் வேலை செய்துவிட்டு பின் தானே பலசரக்கு கடை, சைவ ஓட்டல் சொந்தக்காரராகி, சினிமாவில் சேரும் ஆசையால் அவற்றை விற்றுவிட்டு பணத்துடன் கொழும்புக்கு வந்து சினிமாத் தயாரிப்பில் ஈடுபட்டு கைப்பணத்தை இழந்து கடனாளியாகி நொந்து போய் இந்தியாவுக்கே திரும்பி விட்டார்.

இலங்கையில் கடந்த 50 ஆண்டுகளில் அதிகபட்சம் 50 தமிழ்ப்படங்களாவது தயாரிக்கப்பட்டிருக்கும். இவற்றில் பேர் சொல்லும்படி சரிபாதி எண்ணிக்கை அளவுக்காவது படங்கள் தேறி இருக்குமா என்பது சந்தேகம்தான். அதே நேரத்தில் மாதத்துக்கு ஒரிரு படங்கள் வீதம் சிங்களப்படங்கள் இலங்கையில் திரைக்கு வருகின்றன. அரசாங்கம் ஆதரவு தருகிறது.சிங்களத் திரைப்படங்கள் கதையம்சம் தொழில் நுட்பம், நடிப்பு, கதைசொல்லும் பாணி ஆகிய துறைகளில் வெகுதூரம் முன்னேறி விட்டன. ஆரம்ப காலத்தில் சிங்களப்படங்களேகூட தரத்தில் சிறந்து விளங்கின என்பதை சென்ற ஆண்டில் சென்னையில் நடந்த சிங்கத்திரைப்பட விழாவில் இடம் பெற்ற படங்கள் உணர்த்தின. வெற்றிகரமாக ஓடிய சில சிங்களப்படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரையிடப்பட்டன.

இவளும் ஒரு பெண், அஜாதசத்துரு, கலியுகக் காலம், நான்கு லட்சம், சைக்கிள் திருடன், யார் அவள், சுமதி எங்கே? என்ற சில படங்கள் சினிமா ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றன.

== தென்னிந்தியத் தமிழ் படங்களோடு வர்த்தக ரீதியில் கடுமையாகப் போட்டியிட வேண்டியிருக்குமே என்ற பயம் துளியும் இல்லாமல் தமிழில் தயாரான சில படங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இலங்கைத்_திரைப்படத்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது